சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு திருமண செய்தி வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'அயலி' சீரியலின் நாயகன் ஆனந்த் சிவாவுக்கும், பிரபல சீரியல் நடிகை சமந்தா கிரணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக காதல், நிச்சயதார்த்தம் குறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்த இந்த ஜோடி, திடீரென திருமண கோலத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக மாறியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு சமந்தா கிரண் புதிய முகம் அல்ல. பல ஆண்டுகளாக தமிழ் சீரியல்களில் நடித்து வரும் அவர், குடும்ப கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள் மற்றும் ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்நிலையில் 38 வயதில் அவர் திருமணம் செய்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. "இப்போதுதான் கல்யாணமா?", "இவ்வளவு நாள் திருமணம் செய்யாமல் இருந்தாரா?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் வயதை விட மகிழ்ச்சியான வாழ்க்கைதான் முக்கியம் என்றும், சரியான நேரத்தில் சரியான துணையை தேர்வு செய்திருப்பதாகவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மணமகனான ஆனந்த் சிவா, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'நினைத்தாலே இனிக்கும்' சீரியல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அதன்பிறகு தற்போது ஒளிபரப்பாகி வரும் 'அயலி' தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமானபோது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். "இவரெல்லாம் ஹீரோவா?", "ஹீரோவுக்கான லுக் இல்லை" என பலரும் கேலி செய்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆனந்த் சிவா வருத்தத்துடன் கூறியிருந்தார். ஆனால் அதே பேட்டியில், "அந்த விமர்சனங்கள் ஆரம்பத்தில் என்னை பாதித்தது உண்மைதான். ஆனால் இப்போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்." என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ஆனந்த் சிவா - சமந்தா கிரண் திருமணத்தில் ஜீ தமிழ் மட்டுமல்லாமல், விஜய் டிவி மற்றும் சன் டிவியில் நடித்து வரும் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பலரும், "ரீல் ஜோடிகளை விட ரியல் ஜோடிகள் அழகாக இருக்கிறார்கள்" என்றும், "சின்னத்திரைக்கு இன்னொரு அழகான ஜோடி கிடைத்துவிட்டது" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக சீரியல் நடிகர்களின் திருமணங்கள் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்று வரும் நிலையில், ஆனந்த் சிவா - சமந்தா கிரண் திருமணமும் அதே வரிசையில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமண அறிவிப்பு வெளியாகும் வரை இருவரும் தங்களது உறவை பெரிதாக வெளிப்படுத்தாமல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒருபுறம் 'அயலி' சீரியலில் ஆனந்த் சிவா தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபுறம் அவரது நிஜ வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த திருமண புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.சின்னத்திரையில் பிரபலமான சமந்தா கிரண்
கோவிலில் ரகசியமாக நடந்த
நினைத்தாலே இனிக்கும் முதல் அயலி வரை
சீரியல் உலகமே ஒன்று கூடிய திருமணம்
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி