பவன் கல்யாண் 3வது மனைவியை பிரிவதை அறிவிப்பதற்கு முன்பு.. 14 வருஷ வருத்தம் என உருக்கமாக பேசிய 2வது மனைவி

  • சென்னை: நடிகர் பவன் கல்யாணின் 3வது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் செய்தி இப்போது தெலுங்கு திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்து 13 வருஷங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த செய்தி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் பவன் கல்யாணின் 2வது மனைவியான நடிகை ரேணு தேசாய் தனது மனதில் இருக்கும் நீண்ட கால வருத்தத்தை ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அந்த பேட்டி இப்போ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நடிகை ரேணு தேசா பேட்டி

    பவன் கல்யாணுடன் விவாகரத்தாகி 14 வருஷம் ஆகிவிட்டாலும் இன்னைக்கும் தன்னை அவருடைய முன்னாள் மனைவி என்ற அடையாளத்திலேயே எல்லோரும் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ரேணு தேசாய் உருக்கமாக பேசியிருக்கிறார். அதாவது, எனக்குன்னு ஒரு வாழ்க்கை, சினிமா பயணம் சாதனைகள் இருந்தும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பவன் கல்யாணுடன் இருந்த உறவை மட்டுமே வைத்து என்னை அடையாளப்படுத்துவது ஏன் என்று அந்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.

    Advertisement

    14 வருட கஷ்டம்

    ரேணு தேசாய் பேசுகையில், தெலுங்கு ரசிகர்கள் நான் பவன் கல்யாண் நடித்த பத்ரி படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத்துக்கு வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையை தொடங்கியது என்பது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்தது. மாடலிங் உள்ளிட்ட துறைகளில் நான் வேலை பார்த்து இருக்கிறேன். அதை போல் பவன் கல்யாணை பிரிந்து 14 வருஷங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் அவருடைய முன்னாள் மனைவி என்ற அடையாளத்திலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ராமருக்கு கூட 14 வருஷங்கள் தான் வனவாசம் இருந்தது, ஆனால் எனக்கு இந்த நிலை எப்போது முடியும் என்று தெரியவில்லை என்று அவர் வருத்தமாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    மனதில் இருக்கும் வருத்தம்

    மேலும், நான் பவன் கல்யாணை விவாகரத்து செய்த பிறகு என்னுடைய வாழ்க்கையை அப்படியே நிறுத்தி விடவில்லை. ஒரு மராத்தி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன், அது நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது. அதற்கு பிறகு மற்றொரு படத்திற்கு கதை எழுதி தயாரித்து, இயக்கியிருக்கிறேன். டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, கவிதைகளும் எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வளவு விஷயங்களை செய்த பிறகும் யாரும் என்னை தனிப்பட்ட அடையாளத்துடன் பார்க்கவில்லை என்றால் அது எந்த அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்று அவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

    Advertisement

    எல்லாவற்றுக்கும் விமர்சனம்

    அது மட்டுமல்லாமல், ரேணு தேசாய் விலங்குகள் நலனில் ஆர்வம் கொண்டு ஆதரவற்ற நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உதவி செய்து வருகிறார். இதற்காகவும் அவரை சோசியல் மீடியாவில் பலர் விமர்சிக்கிறார்களாம். ஒரு நாயை காப்பாற்றினால் கூட அதைப் பற்றி மோசமாக பேசுகிறார்கள். பவன் கல்யாண் இல்லாமல் வாழவே தகுதி இல்லை என்பது போல சிலர் கருத்து தெரிவிக்கிறது எனக்கு வேதனையாக இருக்கிறது, ஒருவருடைய திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அவர் செய்யும் நல்ல விஷயங்களையும் விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    Advertisement
    பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு!

    நடிகை ரேணுவின் பேட்டி

    பவன் கல்யாணம் ரேணுதேசாயும் பத்ரி, ஜானி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும் ஆத்யா என்ற மகளும் இருக்கின்றனர். ஆனால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதற்குப் பிறகு பவன் கல்யாண் 2013 ஆம் வருஷம் அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்து கொண்டார். இப்போது அந்த திருமணமும் முடிவுக்கு வந்திருப்பதாக இருவரும் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இந்த சமயத்தில் நடிகர் ரேணுவின் பேட்டி வெளியான பிறகு பலரும் அவருக்கு சப்போர்ட் செய்கின்றனர். ஒரு சிலர் வழக்கம் போல அவரை விமர்சித்தும் வருகிறார்கள்.

    English Summary

    Pawan Kalyan: The news that actor Pawan Kalyan’s third marriage has also come to an end has become a major topic of discussion in the Telugu film industry. Just a few days before this news emerged, actress Renu Desai—Pawan Kalyan’s second wife—spoke in an interview about a long-standing grievance she has harbored. That interview is now going viral on the internet once again.