சீரியல் நடிகை வர்ஷினி கைது பின்னணி.. காதலனோடு பழகி பிளாக் மெயில்.. தொழிலதிபருக்கு மிரட்டல்!

  • சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை வர்ஷினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பெரிய அளவில் பெயர் வாங்கினார். ஆனால் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற பின்னணி தகவல் வெளியாகி இருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸ் பிரபலம்

    வர்ஷினி வெங்கட் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்தாலும் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் 3 வாரங்களிலேயே நாமினேஷனில் வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை என்றாலும் இப்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் அதிகமாக விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    சமீபத்தில் விஜயின் தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வர்ஷினி அதற்குப் பிறகு தவெக கட்சி பற்றி பல பேட்டிகளிலும் பேசிக் கொண்டிருந்தார். ஆந்திர மாநில விஜயவாடாவை சேர்ந்த தருண் என்பவர் சினிமா பைனான்ஸ், ஷேர் மார்க்கெட் உருப்பட பல்வேறு பிசினஸ் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக கடந்த 6 மாதமாக சென்னை கிண்டியில் ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி இருந்திருக்கிறார்.

    காதல், பிரேக் அப்

    இந்த நிலையில் அவருடைய நண்பர் நிஷாந்த் மூலமாக பார்ட்டி ஒன்றில் வர்ஷினி தருணுக்கு பழக்கமாகி இருக்கிறார். ஆரம்பத்தில் இருவருக்கும் நட்பாக தொடங்கிய பழக்கம் பிறகு காதலாக மாறியிருக்கிறது. அந்த சமயத்தில் வர்ஷினி தான் குறும்படம் எடுக்க வேண்டும் அதற்கு பைனான்ஸ் பண்ணுங்க என்று தருணிடம் கேட்டிருந்தாராம். அதற்கு தருணும் சரி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கான பைனான்ஸ் பண்ணாமல் காலம் தாழ்த்தி கொண்டு இருந்தாராம்.

    Advertisement

    வர்ஷினையும் குறும்படம் எடுக்க வில்லையாம். அதுபோல வர்ஷினி ஆண் நண்பர்களுடன் பழகுவது தருணுக்கு பிடிக்கவில்லையாம். இதனாலேயே வர்ஷணியை பிரிய முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஹோட்டல் பாருக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்த வர்ஷினி அங்கு ஹோட்டலுக்கு வந்த தருணிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருந்தாராம். சரி என்று தருணும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

    தொழிலதிபருக்கு அடி

    அந்த சமயத்தில் ஹோட்டலுக்கு வர்ஷினியுடன் வந்த அவருடைய நண்பர் சஞ்சய் மற்றும் இன்னும் சில நண்பர்கள் தருணை அடித்து அவர் வைத்திருந்த 50,000 பணத்தை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது. அதை எடுத்து சஞ்சய் தருணை தொடர்பு கொண்டு உன்னால் வர்ஷினியின் வாழ்க்கை வீணாகி போய்விட்டது ஆகையால் அவருக்கு உடனடியாக மூன்றரை லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். உடனே தருணும் வர்ஷினியின் அக்கவுண்டுக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்து விட்டாராம்.

    Advertisement
    சர்ச்சைக்கு விளக்கமும் கொடுத்துவிட்டு.. உள்குத்துடன் பேசிய விஜய் சேதுபதி.. இது யாருக்கான பதில்?

    நண்பரின் மிரட்டல்

    பிறகு மீண்டும் தருணை தொடர்பு கொண்ட சஞ்சய் வர்ஷினியிடம் பேசி சமாதானம் பண்ணி வைக்க எனக்கு 2 லட்சம் ரூபாய் அனுப்பி வை இல்லை என்றால் வர்ஷினியை வைத்து உன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைப்பேன் என்று மிரட்டியதால் தருணும் சஞ்சய்க்கு 2 லட்சம் ரூபாய் அனுப்பி இருந்தாராம். இதனை அடுத்து கடந்த 15 ஆம் தேதி சஞ்சய் மீண்டும் தருணை தொடர்பு கொண்டு எனக்கு இன்னும் 27 லட்சம் ரூபாய் வேண்டும். இல்லை என்றால் என்னிடம் துப்பாக்கி இருக்கு உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம்.

    Advertisement
    பிக் பாஸில் நேற்று நடந்த சம்பவம் பலருக்கு பாடம்.. விஜய் சேதுபதி பேசியது மட்டுமல்ல! இன்னொரு விஷயம்!

    வர்ஷினி கைது

    உடனே பயந்து போன தருண் தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். புகாரின் பேரில் காவல்துறையினர் பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி மற்றும் அவருடைய ஆண் நண்பர் சஞ்சய் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உட்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்திருக்கின்றனர்.

    அந்த விசாரணையில் வர்ஷினி இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால் அவரை கைது செய்து இருக்கின்றனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் உட்பட மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

    English Summary

    Varshini : Actress Varshini, who gained fame on television through the Sun TV serial *Kannanana Kanne*, rose to greater prominence after participating in the *Bigg Boss* show. However, her recent arrest has caused a stir. Details regarding the background of her arrest have now emerged.