சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்து வருகிறது. மகன் சாந்தனு, "Only If I Could... Appa" என்று உருக்கமாக பதிவு வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது மகள் சரண்யாவும் தன்னுடைய மனவேதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பாக்யராஜ் மகள் சரண்யா பதிவு
சரண்யா பகிர்ந்துள்ள பதிவில், தனது மகனை பாக்யராஜ் அன்புடன் கையில் தழுவி கொஞ்சிக் கொண்டிருக்கும் அழகான வீடியோ இடம்பெற்றுள்ளது. பேரனின் சிறிய விரலை பிடித்தபடி பாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காட்சி, தாத்தா - பேரன் பாசத்தை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தனது செல்போனில் பாக்யராஜ் தொடர்ந்து அழைத்திருந்த அழைப்புகளின் (Call Log) ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். அதனுடன், "My daily call log will not look like this here after... Never realised my maximum missed calls were always from you..." என்று மனதை உருக்கும் வார்த்தைகளை எழுதியுள்ளார். அதாவது, "இனிமேல் என்னுடைய தினசரி கால் லாக் இப்படியே இருக்காது... எனக்கு அதிகமாக வந்த மிஸ்டு கால்கள் எல்லாமே உங்களிடமிருந்துதான் என்பதை இப்போது தான் உணர்கிறேன்..." என்ற அர்த்தத்தில் அவர் தனது தந்தையை நினைத்து உருகியுள்ளார்.
ஒரு தந்தை தினமும் மகளை அழைத்து பேசுவது, நலம் விசாரிப்பது, கவனித்து கொள்வது எல்லாம் அந்த நேரத்தில் சாதாரணமாக தோன்றியிருக்கலாம். ஆனால் இன்று அந்த அழைப்புகள் இனி ஒருபோதும் வராது என்ற உண்மை சரண்யாவை மட்டுமல்ல, இந்த பதிவைப் பார்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. பாக்யராஜ் எப்போதும் குடும்ப பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் என்று அவருடன் பழகியவர்கள் கூறி வந்துள்ளனர். குறிப்பாக பேரன்களுடன் செலவிட்ட நேரம் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்றும், படப்பிடிப்பில் இருந்தாலும் குடும்பத்தினருடன் தினமும் தொடர்பில் இருப்பார் என்றும் நெருங்கியவர்கள் பலமுறை பகிர்ந்துள்ளனர். ஏற்கனவே ஒரு பேட்டியில் கூட பாக்யராஜ் பேசும்போது என்னுடைய மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்ததும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் அது ஜாதி மதத்தை தாண்டி வேறொரு பிரச்சனை இருந்தது அதனால் வேண்டாம் என்று சொன்னோம். அதனால் அவள் எங்களை விட்டு பிரிந்து போய்விட்டார். அதற்கு பிறகு அவள் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்ன பிறகு எங்களால் தனியாக இருக்க முடியவில்லை அவளை போய் பார்க்க தொடங்கினோம். அவள் ஹாஸ்பிடலில் டெலிவரிக்காக போன நேரத்தில் நாங்க ரொம்ப துடி துடித்து போனோம். என்னுடைய பேரன் தான் என்னுடைய உலகம். நான் இல்லாமல் அவனால் இருக்க முடியாது அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று பேசி இருந்தார். அதேபோல இப்போது தன்னுடைய பேரனோடு பாக்யராஜ் கடைசியாக கொஞ்சிய புகைப்படங்களை சரண்யா வெளியிட்டு இருக்கிறார். சாந்தனுவின் உருக்கமான பதிவு, சரண்யாவின் இந்த மனதை நொறுக்கும் பதிவு என அடுத்தடுத்து வெளியாகும் குடும்பத்தினரின் நினைவுகள், பாக்யராஜ் ஒரு சிறந்த இயக்குநராக மட்டுமல்ல... குடும்பத்திற்காக வாழ்ந்த அன்பான தந்தையாகவும், பாசமிகு தாத்தாவாகவும் இருந்தார் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மகளின் உருக்கம்
பாக்யராஜ் கடைசியாக கொடுத்த சர்ப்ரைஸ்.. என் வாழ்க்கையில் மறக்க முடியாது! பூர்ணிமா உருக்கம்
பாக்யராஜின் பேட்டி
பாக்யராஜ் மறைவுக்கு பிறகு.. சாந்தனு ஒரே வார்த்தையில் வெளியிட்ட பதிவு.. வருத்தத்தை பகிர்ந்த பிரபலங்கள்