சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களுடன் ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தவர் கே. பாக்யராஜ். அவரது திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் குடும்பத்துடன் பகிர்ந்த அன்பான தருணங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில் குறிப்பாக, தனது மகள் சரண்யாவுக்காக பாக்யராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு கடிதம் தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பாக்யராஜ் குடும்பம்
பாக்யராஜ், பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு மற்றும் சரண்யா என இரண்டு பிள்ளைகள். மகள் சரண்யாவை தனது 'பாரிஜாதம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதன் பிறகு அவர் சினிமாவில் இருந்து விலகி காஸ்ட்யூம் டிசைனராக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
ஒரு பழைய பேட்டியில் பேசிய பாக்யராஜ், தனது குழந்தைகள் சிறிய வயதில் இருந்தபோது அவர்களை மகிழ்விக்க தினமும் காலை ஒரு சிறிய பரிசு கொடுத்து எழுப்புவேன் என்று கூறியிருந்தார். அப்போது அவரது மனைவி பூர்ணிமா, "பரிசு கொடுப்பதை விட ஒரு கடிதம் எழுதுங்கள். இப்போது புரியாவிட்டாலும், பெரியவளான பிறகு அது அவளுக்கு மிகப்பெரிய நினைவாக இருக்கும்" என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அதன்படி, மூன்று வயது மகள் சரண்யாவுக்காக பாக்யராஜ் எழுதிய கடிதம் இன்று வரை பலரது மனதையும் நெகிழ வைக்கிறது. அந்த கடிதத்தில், "டியர் அம்லு... முதலில் வானவில்லை பார்த்தேன், அதுதான் உலகிலேயே அழகு என்று நினைத்தேன். பிறகு நட்சத்திரங்களை பார்த்தேன், அதுவே இன்னும் அழகு என்று தோன்றியது. அதன் பிறகு நிலாவைப் பார்த்தேன். அது எல்லாவற்றையும் விட அழகாக இருந்தது. ஆனால் நீ பிறந்த பிறகுதான் தெரிந்தது... உன்னை விட இந்த உலகத்தில் வேறு எதுவும் அழகில்லை. நீதான் எனக்கு மிக அழகு" என்று தனது மகள் மீது கொண்ட அளவற்ற பாசத்தை எழுத்துக்களில் பதிவு செய்திருந்தார். இந்த பேட்டி மீண்டும் வைரலாகும் நிலையில், பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் சரண்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது. "இனிமேல் என்னுடைய தினசரி கால் லாக் இப்படியே இருக்காது... எனக்கு அதிகமாக வந்த மிஸ்டு கால்கள் எல்லாமே உங்களிடமிருந்துதான் என்பதை இப்போது தான் உணர்கிறேன்..." மிஸ் யூ அப்பா... என்ற உணர்ச்சிப்பூர்வமான பதிவை அவர் வெளியிட்டிருந்தார். ஒரு பக்கம், மகளுக்காக எழுதிய அந்த அன்பு நிறைந்த கடிதம்... மறுபக்கம், தந்தையை இழந்த மகளின் உருக்கமான பதிவு... இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது இணையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நெகிழச் செய்து வருகின்றன. திரைக்கதைகளில் உணர்வுகளை அழகாக எழுதிய பாக்யராஜ், தனது குடும்பத்திற்காக எழுதிய சில வரிகளிலேயே ஒரு தந்தையின் அளவிட முடியாத அன்பை பதிவு செய்து விட்டார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.பாக்யராஜ் எழுதிய கடிதம்
பாக்யராஜ்க்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு சென்ற குஷ்பூ.. சாந்தனு செய்த செயல்.. கலங்கிய சுந்தர் சி
பாக்யராஜ் மகள் பதிவு
பாக்யராஜ் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நாய்.. வட்டமிட்ட கழுகு.. இறுதி ஊர்வலம் வேனில் வைக்கப்பட்டிருந்த வாசகம்!