சென்னை: திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை கோவாவில் நடைபெற்ற குஷ்பூ மகள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்டு அனைவருடனும் சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக நேரத்தை கழித்த பாக்யராஜ், இவ்வளவு சீக்கிரம் பிரிந்துவிடுவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவரது மறைவு செய்தி வெளியானதும், அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அங்கு நடந்த பல உருக்கமான காட்சிகள் ரசிகர்களை கலங்க வைத்தன.
பாக்யராஜின் மறைவு செய்தியை கேட்டதும், நடிகை த்ரிஷா உடனடியாக அவரது இல்லத்துக்கு விரைந்து வந்தார். அங்கு பூர்ணிமா, சாந்தனு, மருமகள் கிகி, மகள் சரண்யா ஆகியோரை ஒவ்வொருவராக கட்டியணைத்து ஆறுதல் கூறினார். குறிப்பாக பூர்ணிமாவை கட்டிப்பிடித்து பேசிக்கொண்டிருந்தபோது, த்ரிஷாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த திருமணத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்துப் பேசிய நினைவுகள் மனதில் ஓடியதாலோ என்னவோ, த்ரிஷாவால் அந்த சோகத்தை மறைக்க முடியவில்லை. அதற்கு முன்பாகவே தனது சமூக வலைதளத்தில், "RIP Bhagyaraj Sir... நேற்று தான் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டோம். இன்று இந்த செய்தியை கேட்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. பூர்ணிமா மேடம், சாந்தனு, அம்லு, கிகி... உங்கள் அனைவருக்கும் என் அன்பும் மன வலிமையும்." என்று உருக்கமான இரங்கல் பதிவையும் வெளியிட்டிருந்தார். பின்னர் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நேரில் வந்து பாக்யராஜின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு நேராக பூர்ணிமா மற்றும் குடும்பத்தினரிடம் சென்று நீண்ட நேரம் ஆறுதல் கூறினர். அப்போது பூர்ணிமா, பாக்யராஜின் கடைசி நிமிடங்களில் நடந்த சம்பவங்களை கண்கலங்கியபடி நயன்தாராவிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த நயன்தாரா, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் துடைத்த காட்சிகள் அங்கு இருந்த பலரையும் உருக்கின. அந்த தருணத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பாக்யராஜின் வீட்டில் த்ரிஷாவும், நயன்தாராவும் காட்டிய அன்பையும், ஆறுதலையும் பார்த்த ரசிகர்கள், "இது சினிமா சம்பந்தப்பட்ட மரியாதை மட்டும் இல்லை... குடும்ப உறவைப் போல வந்திருக்கிறார்கள்", "பூர்ணிமாவை தனியாக விடாமல் ஆறுதல் சொல்லிய விதம் கண்கலங்க வைத்தது", "த்ரிஷாவும், நயன்தாராவும் அந்த குடும்பத்தின் ஒருவராகவே இருந்தார்கள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், மகன் சாந்தனு கண்ணீருடன் தந்தையை வழியனுப்பினார். இறுதி வாகனத்தை தொட்டு வணங்கி கதறிய அவரது காட்சி பலரின் மனதையும் உடைத்தது. திரைக்கதை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்யராஜ் இன்று உடலால் இல்லாவிட்டாலும், அவரை வழியனுப்ப வந்த ஒவ்வொரு பிரபலத்தின் கண்ணீரும், அவர் சம்பாதித்த அன்பு எவ்வளவு பெரியது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.முதல் நாளே வந்த த்ரிஷா
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அஞ்சலி
பாக்யராஜ் உடலை பார்த்து கண்ணீர் விட்ட நாய்.. வட்டமிட்ட கழுகு.. இறுதி ஊர்வலம் வேனில் வைக்கப்பட்டிருந்த வாசகம்!
குடும்ப பாசம்
பாக்யராஜ் கடைசியாக கொடுத்த சர்ப்ரைஸ்.. என் வாழ்க்கையில் மறக்க முடியாது! பூர்ணிமா உருக்கம்
இறுதி பயணம்