சென்னை: தமிழ் சினிமாவின் வரலாற்றில் பிரிக்க முடியாத இரண்டு பெயர்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா. திரையுலகில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் உயிர் நண்பர்களாக வாழ்ந்த இந்த இருவரில் ஒருவர் இன்று இல்லாமல் போனது, இளையராஜாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
பாரதிராஜாவின் மறைவு செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, அவரது வாழ்நாள் நண்பரான இளையராஜாவையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வரும் இளையராஜாவுக்கு இது இன்னொரு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து சினிமா உலகை நோக்கி பயணித்தவர்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும். சினிமாவில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே கனவோடு சென்னை வந்த அவர்கள், பல கஷ்டங்களை ஒன்றாக சந்தித்தனர். ஒருவர் இயக்குனராக உயர்ந்தார். மற்றொருவர் இந்திய இசையின் அடையாளமாக மாறினார். ஆனால் புகழின் உச்சிக்குச் சென்ற பிறகும் அவர்களது நட்பு மட்டும் மாறவில்லை. பல மேடைகளில் பாரதிராஜா, "இளையராஜா என் நண்பன் மட்டுமல்ல... என் வாழ்க்கையின் ஒரு பகுதி" என்று கூறியிருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் தனது பல பேட்டிகளில் பாரதிராஜா குறித்து பாசமாக பேசியிருக்கிறார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், மண் வாசனை உள்ளிட்ட பல படங்களில் இந்த கூட்டணி உருவாக்கிய மாயாஜாலம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் பவதாரிணியை இளையராஜா இழந்தார். அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் இருந்த அவர், குடும்பத்தினர் மற்றும் இசை மூலமாகவே தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். அதேபோல் பாரதிராஜாவின் குடும்பமும் தங்களது பல சோதனைகளை கடந்து வந்தது. இப்போது பாரதிராஜாவின் மகன் மனோஜ் தனது தந்தையை இழந்து நிற்கிறார். இந்த சூழலில் தனது மகளை இழந்த வேதனையை அனுபவித்த இளையராஜாவுக்கு, தனது நெருங்கிய நண்பரின் குடும்பம் எதிர்கொள்ளும் துயரமும் கூடுதல் வலியை ஏற்படுத்தியிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இசைக்கு துணையாக இருந்த நண்பன் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கிய இளையராஜாவுக்கு இன்று இசை உலகம் முழுவதும் துணையாக இருந்தாலும், தனது ஆரம்ப கால போராட்டங்களையும் கனவுகளையும் பகிர்ந்த நண்பன் இனி இல்லை என்பதே மிகப்பெரிய சோகம். புகழ், பணம், விருதுகள் எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையில் சில உறவுகள் மட்டும் தனி இடத்தை பிடிக்கும். அந்த வகையில் பாரதிராஜா, இளையராஜாவுக்கு நண்பனைத் தாண்டிய உறவாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும், "பவதாரிணியை இழந்த பிறகு இப்போது பாரதிராஜாவையும் இழந்தது இளையராஜாவுக்கு மிகப்பெரிய துயரம்...","பண்ணைப்புரத்தில் தொடங்கிய நட்பின் ஒரு பாதி இன்று இல்லாமல் போய்விட்டது...", "தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய கூட்டணியில் இன்று ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது..." என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். இளையராஜாவின் மகள் இறந்த சமயத்தில் பாரதிராஜா தான் இளையராஜாக்கு தூணாக உறுதுணையாக இருந்தார். அதேபோல பாரதிராஜாவின் மகன் அடுத்த சில மாதங்களிலேயே இறந்த சமயத்தில் இளையராஜா ஆறுதலாக இருந்தார். ஆனால் இன்று தன்னுடைய மகன் இறப்பிற்கு பிறகு மனது உடைந்து போன பாரதிராஜா இந்த உலகத்தை விட்டு போய் இருக்கிறார். இந்த துயரமான சம்பவத்தில் இளையராஜாவிற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். ஒரு காலத்தில் பண்ணைப்புரம் கிராமத்து இளைஞர்களாக சினிமா கனவு கண்ட இரண்டு நண்பர்கள், தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றினார்கள். ஆனால் இன்று அந்த நட்பின் ஒரு தூண் சரிந்துவிட்டது. பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு இழப்பு என்றால், இளையராஜாவுக்கு அது ஒரு நண்பனை இழந்த வலி. அந்த வெற்றிடத்தை எந்த இசையும், எந்த புகழும் நிரப்ப முடியாது என்பதே பலரின் உணர்வாக உள்ளது.ஒரே கிராமத்தில் தொடங்கிய கனவு
என் நண்பன் என பெருமை
மகளை இழந்த துயரம்
கண்கலங்க வைத்த கருத்துகள்
“உடம்பு பலவீனம்… ஆனால் மனதில் இன்னும் அதே தைரியம்!” ராதிகாவிடம் பாரதிராஜா சொன்ன வார்த்தை! நெகிழ்ச்சி தருணம்
அன்றைக்கு பாரதிராஜா, இளையராஜாக்கு.. இன்று ஜானகிக்கும் அதே சோகம்! கலையுலகம் கண்ட கண்ணீர் கதை
முடிவில்லா நட்பு