மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்


  • சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு இன்னும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சுற்றி பரவி வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.

    Advertisement

    பாரதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது அவரது மகள் ஜனனி மற்றும் மருமகள் நந்தனா இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட வாக்குவாத வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவின. அந்த வீடியோக்களை பார்த்த பலரும், "பாரதிராஜா குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கிடையில் தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அளித்துள்ள பேட்டி, அந்த விவாதத்தை மீண்டும் தலைதூக்க வைத்துள்ளது.

    Advertisement

    பாரதிராஜா தம்பி பேட்டி

    அந்த பேட்டியில் பேசிய ஜெயராஜ், மனோஜ் மறைந்த பிறகு அவரது மனைவி இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    "மனோஜின் இரண்டு மகள்களும் வளர்ந்து வரும் வயதில் இருக்கிறார்கள். அவர்களின் படிப்பு, எதிர்காலம் போன்ற காரணங்களுக்காக தனியாக வசிக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும், "நாங்கள் அனைவரும் இப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அண்ணன் பாரதிராஜாவின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை வருமானத்தின் மூலமாகவே மனோஜ் குடும்பம் வாழ்ந்து வருகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    சொத்து பிரச்சனையா?

    பாரதிராஜாவின் இறுதிச்சடங்கில் ஏற்பட்டதாக கூறப்பட்ட வாக்குவாதம் வெளியானபோதே, அது சொத்து தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் யாரும் அந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், மருமகள் தனியாக வசித்து வருவதாக ஜெயராஜ் கூறியிருப்பது மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்

    கங்கை அமரனின் கோபமும் பரபரப்பும்

    இதற்கு முன்பாக பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்தினர் வந்திருந்தபோது, இசையமைப்பாளர் கங்கை அமரன் உணர்ச்சி வசப்பட்டு பேசிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    அப்போது அவர், "கடைசி நேரத்துல அவரை அனாதையா விட்டுட்டீங்களே" என கோபமாக பேசியதாக வீடியோக்கள் வெளியாகின. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பின்னர் விளக்கம் அளித்த கங்கை அமரன், "அது குடும்பத்தின் மீது இருந்த கோபம் இல்லை. பல வருட நட்பின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கம். குடும்பத்துக்குள் இருக்கும் விஷயங்களை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம்" என்று கூறியிருந்தார்.

    மகன் இழப்பால் உடைந்த பாரதிராஜா

    கடந்த ஆண்டு மகன் மனோஜின் மறைவு பாரதிராஜாவை மிகவும் பாதித்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் கூறியுள்ளனர். வெளியில் எப்போதும் உற்சாகமாக காணப்பட்டாலும், உள்ளுக்குள் அந்த துயரத்தில் இருந்து அவர் முழுமையாக மீளவில்லை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மகனை இழந்த வேதனையோடு வாழ்ந்த பாரதிராஜா, தற்போது இந்த உலகைவிட்டு பிரிந்துவிட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பாரதிராஜா சமாதியில் நெகிழ வைத்த சினேகன்.. குழந்தைகளை வைத்து கன்னிகா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள்

    ரசிகர்கள் வேண்டுகோள்

    சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள், "பாரதிராஜா வாழ்நாள் முழுவதும் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கவே விரும்பினார்", "இப்படி வதந்திகள் பரவாமல் குடும்பத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்", "இயக்குநர் இமயத்தின் நினைவுக்கு களங்கம் வரக்கூடாது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பாரதிராஜா தமிழ் சினிமாவுக்கு விட்டுச் சென்ற கலைச் சொத்துகள் எவ்வளவு பெரியதோ, அதேபோல் அவரது குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    English Summary

    The family of legendary filmmaker Bharathiraja continues to remain in the spotlight following his demise, as social media discussions surrounding alleged family disagreements refuse to die down. In a recent interview, Bharathiraja's brother Jayaraj clarified that there are no major disputes within the family and explained that late actor-director Manoj Bharathiraja's wife Nandana lives separately with her daughters primarily for their education and future needs. He also stated that the family remains united and that financial support continues through rental income generated from Bharathiraja's properties. His comments come amid widespread speculation triggered by viral videos from the filmmaker's funeral, where alleged tensions between family members became a topic of discussion online. Meanwhile, remarks made earlier by Gangai Amaran had further intensified public curiosity about Bharathiraja's final years. Despite the rumours, family members and well-wishers have urged the public not to jump to conclusions and instead remember Bharathiraja for his immense contribution to Tamil cinema rather than unverified personal controversies.