பாரதிராஜாவின் உடல் அருகே வெடித்த குடும்ப மோதல்? கதறிய பேத்திகள்.. கெஞ்சிய ராதிகா!.. ரசிகர்களை உலுக்கிய சம்பவம்!


  • சென்னை: தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தாலும், அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும், குடும்பத்தைச் சுற்றியுள்ள கேள்விகளும் இன்னும் அடங்கிய பாடில்லை. குறிப்பாக அவரது இறுதி அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்கின் போது நடந்ததாக கூறப்படும் சில சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

    Advertisement

    பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது இயக்குநருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மகன் மறைவுக்குப் பிறகு உடலாலும் மனதாலும் மிகவும் தளர்ந்து போன பாரதிராஜா, தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    மனைவி தேனியில் வசித்து வந்த நிலையில், மகள் ஜனனி மலேசியாவில் குடும்பத்துடன் குடியேறியிருந்தார். மருமகள் நந்தனாவும் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாரதிராஜாவின் கடைசி காலத்தில் அவரை நேரடியாக கவனித்தது நியமிக்கப்பட்ட நர்சுகளும் உதவியாளர்களும்தான் என்ற தகவல்களும் பரவின.

    இறுதி சடங்கில் நடந்தது என்ன?

    பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த சூழலில், குடும்ப உறுப்பினர்களுக்குள் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் வைரலாகும் சில வீடியோக்களில், மனோஜின் மனைவி நந்தனா அமர்ந்திருந்த இடத்திற்கு பாரதிராஜாவின் மகள் ஜனனி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே கடும் மனக்கசப்பு வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    மேலும், நந்தனா அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து செல்லுமாறு ஜனனி வலியுறுத்தியதாகவும், இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதாகவும் பேசப்படுகிறது. அப்போது அருகில் இருந்த நடிகை ராதிகா சரத்குமார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றதாகவும், பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க கைகளை கூப்பி வேண்டுகோள் விடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

    இந்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    பேத்திகளின் கண்ணீர்

    அந்த சம்பவத்தின் போது மனோஜ் - நந்தனா தம்பதியின் இரண்டு மகள்களும் அங்கு இருந்ததாகவும், பெரியவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை பார்த்து அவர்கள் கதறி அழுததாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

    Advertisement

    அதன் பின்னர் நந்தனா தனது மகள்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உறுதி செய்யப்பட்டவை என்பது தெளிவாக தெரியவில்லை.

    சொத்து விவகாரமா?

    ஏற்கனவே பாரதிராஜாவின் பெயரில் இருந்த சில சொத்துகள், குறிப்பாக அவர் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குடியிருப்பு தொடர்பாக குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

    அதேபோல், மனோஜின் குடும்பத்திற்கு சொத்தில் உரிமை வழங்குவது தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சிலர் கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே இறுதிச் சடங்கின் போது பதற்றம் ஏற்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    Advertisement

    கங்கை அமரனின் கோபம்

    பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

    "கடைசி காலத்தில் அவரை தனியாக விட்டுட்டீங்களே..." என்ற அவரது ஆதங்க வார்த்தைகள் பலரையும் சிந்திக்க வைத்தன. இப்போது சமூக வலைதளங்களில் சிலர், குடும்பத்திற்குள் இருந்ததாக கூறப்படும் இத்தகைய பிரச்சனைகளையும், மகன் மனோஜின் மறைவையும், தனிமையையும் பார்த்து பாரதிராஜா கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, இதய நோய்க்காக தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டிருந்த பாரதிராஜா, கடைசி காலத்தில் மன உளைச்சலால் சிகிச்சையிலும் அலட்சியம் காட்டினாரா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

    Advertisement

    ரசிகரின் பதிவு வைரல்

    இந்த நிலையில் ஒரு ரசிகர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த பதிவில்,"உலகத்துக்கே காதல், பெண் உரிமை, சொத்துரிமை, மனிதநேயம் பற்றி பாடம் எடுத்த பலரது குடும்பங்களிலும் கடைசியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான்.

    பாரதிராஜா இறுதி சடங்கிற்கு பிறகு மனைவி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

    ஒரு மனிதன் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருக்கலாம். தலைமுறைகள் நினைக்கும் புகழை சம்பாதித்திருக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு அவரது குடும்பம் அமைதியாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை அவை எதுவும் தராது.

    அவர் போன பிறகு அவரது பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்களா? அல்லது சொத்துக்காக அடித்துக் கொண்டார்களா? என்பதுதான் முக்கியம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாரதிராஜா விட்டுச் சென்ற கேள்வி

    இன்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பாரதிராஜா போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் இறுதி அத்தியாயத்தைச் சுற்றி குடும்பப் பிரச்சனைகள், சொத்து விவகாரங்கள், வாரிசு உரிமைகள் போன்ற விவாதங்கள் எழுந்திருப்பது அவரது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

    கிராமத்து மக்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் உயிரோட்டமாக காட்டிய இயக்குநர் இமயம், தனது படங்களில் குடும்ப ஒற்றுமையையும் உறவுகளின் மதிப்பையும் வலியுறுத்தியவர். அந்த மனிதரின் இறுதி பயணத்தைச் சுற்றியே இத்தகைய செய்திகள் பரவுவது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள குடும்பத் தகராறு, சொத்து பிரச்சனை உள்ளிட்ட பல தகவல்கள் சமூக வலைதள பதிவுகள் மற்றும் சில ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகவில்லை.

    English Summary

    Legendary filmmaker Bharathiraja may no longer be with us, but discussions surrounding his final rites continue online. Viral videos allegedly showing tension between family members have fueled speculation, though no official confirmation has emerged regarding the claims. Meanwhile, many fans believe the focus should remain on Bharathiraja’s immense contribution to Tamil cinema rather than unverified family-related controversies.