சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக பலர் சோசியல் மீடியா முழுக்க போஸ்ட் போட்டு வருகிறார்கள். வாசனை அடித்ததற்காக அக்ஷிதாவுக்கு ரெட்கார்ட் கொடுக்க வேண்டும். என்று பலர் சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இசையமைப்பாளரும், சின்னத்திரை தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 2k கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோ. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு டைமண்ட் டாஸ்க்கில் விளையாடி வேற லெவலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்தி விட்டார். அதுவரைக்கும் அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருந்தவர்கள் கூட இவருடைய திருட்டுத்தனமான டைமண்ட் டாஸ்க் பார்த்து ரிப்பீட்டு மோடில் ரசித்தவர்கள் பலர். திரில்லர் படத்தை பார்ப்பது போல இவர் மாட்டிவிடக்கூடாது என்று லைவில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஏராளமானவர்.
நடிகர் விமலின் பாராட்டு
அதனாலேயே அந்த வார இறுதியில் நடிகர் விமலும் மேடைக்கு வந்து வாசனை பாராட்டி அவருக்கு நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் கொடுத்து இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்த வாரங்களிலும் வாசன் விளையாட்டு நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கொடுக்கிறது. சில இடங்களில் தற்பெருமை பேசினாலும், பல இடங்களில் நான் இப்படித்தான் பா என்று அவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கிறது. அவரை சிலர் ட்ரோல் செய்து கொண்டிருந்தாலும் அதிகமானோர் இவரால் தான்யா இந்த சீசனே கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கு என்று பாராட்டவும் செய்கிறார்கள்.
இப்படி போய்க்கொண்டிருக்கும் போது போன வாரத்தில் முகேஷை வாசன் பிடித்து தள்ளிவிட்டார் என்பதற்காக உள்ளிருந்த பலர் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். வாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் எங்களுக்கு சேஃப்டி கிடையாது என்று லட்சுமி பிரியா பிக்பாஸிடம் புகார் வைத்திருந்தார். அதனாலேயே வார இறுதியில் தொகுப்பாளராக வந்த ரம்யா கிருஷ்ணன் வாசனுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு போயிருந்தார். வாசன் இப்படி தான் டக்குனு கோபப்படுவார் என்பதை தெரிந்து கொண்ட போட்டியாளர்கள் எப்படியாவது இவரை ட்ரிகர் செய்து கோபத்தை தூண்டி அவரை எதையாவது செய்ய வைத்து அவருக்கு ரெட் கார்ட் வாங்கி கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று உள்ளிருக்கும் போட்டியாளர்கள் கட்டம் கட்டுகிறார்கள். ஆரம்பத்தில் வாசனுக்கு எதுவுமே விளையாட தெரியாது என்று சொல்லி வந்தனர். ஆனால் அவருடைய டைமண்ட் டாஸ்கை பார்த்த பிறகு நாம தான் இங்கே ஒண்ணும் தெரியாம உட்கார்ந்திருக்கிறோம் என்று அவர்களுக்கே புரிந்து போய்விட்டது போல. அதற்குப் பிறகு வாசனை சிலர் ஃபாலோ பண்ண தொடங்கி விட்டார்கள். பிக் பாஸ் தமிழ் 10ல் உதட்டு முத்தம்.. வரம்பு மீறிய நடிகைகள்.. கடுப்பான சக போட்டியாளர்கள்! இப்படி இருக்கும்போது இன்று கூட ஒரு டாஸ்க்கில் வாசனுக்கு வழி விடாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்க வாசன் அன்ஷிதா சோல்டரை பிடித்து தள்ளியதில் உடனே கடுப்பாகி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இந்த காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன் "அன்ஷிதாவுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும். ஜெசனின் வசிய வலையில் வீழ்ந்து அதற்கு பலியாகி வீட்டை விட்டு வெளியேறப் போகிற பரிதாபத்திற்குரிய பெண்" என்று சொல்லி அந்த வீடியோவை கிளிக் செய்து இருக்கிறார். அதில் வாசன் ரசிகர்கள் அக்ஷிதாவை வெளியேற்று என்று ஒரு பாட்டையே போட்டு ட்ரோல் செய்திருக்கிறார்கள். இந்த வாரம் இதை வைத்து பஞ்சாயத்து வருவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் இந்த மாதம் முத்தழகு வெளியேறுவார் அல்லது அஸ்மிதா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உங்களை விட நான் முதலில் போகிறேன் என்று இப்போது வாண்டதாக அக்ஷிதா வண்டியில் ஏறி இருக்கிறார். கடைசியில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.ரெட் கார்டு சர்ச்சை
சிலர் வாசனை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று நடந்த டாஸ்க்கில் அன்ஷிதா வாசனை தவாவை தூக்கி அடித்துவிட்டார். ஆனாலும் வாசன் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவரே அடித்து விட்டு வாசன் என்னை அடித்து விட்டார், தள்ளி விட்டார் என்பது போலவே புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் வாசன் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? என்ன நடந்தது என்று குறும்படத்தை போட்டு சோசியல் மீடியா முழுக்க அன்ஷிதாக்கு எதிராகவே ட்ரோல் செய்து வருகிறார்கள்.ஜேம்ஸ் வசந்தன் பதிவு
பிக் பாஸில் டிடிஎஃப் வாசனிடம் உமன் கார்டு காட்டிய அக்ஷிதா.. ரெட்கார்டு யாருக்கு? பஞ்சாயத்து இருக்கு!