பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சை: பேசும்போதே முகத்துல பந்தை வீசிய ஆரி! நடிகர் மாறன் மகள் குற்றசாட்டு

  • சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று ஆசையுடன் வந்த காமன் மேன்களுக்கு அதற்காக முதல் படியாக அமைந்தது பிக் பாஸ் தி காமன் மேன். ஆனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர் தங்களுக்கு நடந்த அனுபவங்களை பற்றி தொடர்ந்து நெகட்டிவாக பேசி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் மாறனின் மகள் நிவ்யா மாறன் ஆரி மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதுவும் பேசிக் கொண்டிருக்கும்போது நடுவர் ஆரி பக்கத்தில் இருந்த பந்தை தூக்கி தன்னுடைய முகத்தில் எரிந்ததாக நிவ்யா கூறி இருக்கிறார்.

    Advertisement

    பிக் பாஸ் காமன்மேன் என்பது வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை போல நேரடியாக வீட்டிற்குள் போட்டியாளர்களை அனுப்பும் நிகழ்ச்சி கிடையாது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்களை தேர்வு செய்து அவர்களின் தனித்துவம், திறமை, மனநிலை உள்ளிட்ட பலவற்றை பல கட்டங்களாக சோதித்து இறுதியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு போட்டியாளரை அனுப்புவதற்காக உருவான சிறப்பு நிகழ்ச்சி .

    Advertisement

    இந்த நிகழ்ச்சியில் முன்னால் போட்டியாளர்களான ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், ஓவியா ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை மாயா தொகுத்து வழங்குகிறார். ஆடிஷனில் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர்களுடைய பதில் மற்றும் மனநிலை எப்படி இருக்கிறது என்று சோதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடிஷனில் தான் நடிகர் மாறனின் மகளான நிவ்யா மாறனும் கலந்து கொண்டிருக்கிறார்.

    போட்டியாளர்களின் பேட்டிகள்

    ஆனால் அவர் ஆடிஷனில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது குறித்து அவரது ஒரு பேட்டியில் பேசும் போது ஆடிஷனுக்கு நான் உள்ளே போனதும் நீங்க என்ன மாதிரியான கண்டன்ட் கொடுக்கப் போறீங்க என்று என்கிட்ட கேட்டாங்க. நான் எனக்கு பாட்டு பாடுவது ரொம்ப பிடிக்கும் அதனால பாடல் பாட போகிறேன் என்று சொன்னேன். அப்போது அவங்க என்னுடைய குடும்பத்தை பற்றியும் கேட்டாங்க.

    Advertisement

    நிவ்யா மாறன் குற்றச்சாட்டு

    என்னுடைய அப்பா சினிமாவில் நடித்தவர் என்றும் அவர் இறந்த பிறகு குடும்பம் சந்தித்து வரும் கஷ்டங்கள் குறித்தும் நான் பேசிக் கொண்டிருந்தேன். உடனே ஆரி நீங்க இங்கே சிம்பதி கிரியேட் பண்றீங்களா என்று கேட்டார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அவர்களுக்கு என்னுடைய அப்பாவின் இறப்பும் அதற்கு அதனால் நாங்கள் படும் வேதனையும் சிம்பத்தியாக இருக்கலாம். ஆனால் எனக்கு அது ஒரு வலி. என்னுடைய வலியை நான் அங்கே சொன்னேன் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    ஆரி செய்த செயல்

    ஆனால் இதைவிட இன்னொரு மோசமான சம்பவமும் உள்ளே நடந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென ஆரி தன் பக்கத்தில் இருந்த ஒரு பந்தை எடுத்து என்னுடைய முகத்துக்கு நேராக வீசிவிட்டார். ஒரு நொடி தாமதித்தாலும் அந்த பந்து முகத்தில் அடித்து இருக்கும். உடனே நான் அதை டக்கென்று பிடித்து விட்டேன். அப்போது அவர் இது நான் வேணும்னு தான் உங்க மேல இருந்தேன், நீங்க பேசிக்கொண்டு இருந்தாலும் உங்களுடைய கவனம் எப்படி இருக்கிறது என்று சோதித்தேன்.

    Advertisement

    இது ஒரு டாஸ்க் தான் என்று சொன்னாரு. ஆனால் நான் பேசிய எபிசோடு ஒளிபரப்பான போது இந்த டாஸ்க்கும் வரவில்லை, ஒன்றும் வரவில்லை. ஒருவேளை அது டாஸ்க்காக இருந்திருந்தால் அதை ஒளிபரப்பு செய்திருப்பார்கள். ஆனால் அவர் வேண்டும் என்று தானே என் மீது பந்தை தூக்கி எறிந்து இருக்கிறார். அதனால் தான் அந்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யாமல் விட்டிருக்கிறார்கள் என்று நிவ்யா குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

    ரசிகர்கள் கருத்து

    நிவ்யா மாறன் சொன்ன குற்றச்சாட்டு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பலரும் எங்களை பேசவே விடவில்லை, அவர்கள் ஏற்கனவே சில போட்டியாளர்களை ஃபைனலுக்கு அனுப்புவதற்காக முடிவு செய்து வைத்து விட்டு எங்களிடம் ஆடிஷன் என்கிற பெயரில் ராகிங் பண்ணி கொண்டு இருந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வரிசையில் இப்போது நிவ்யா மாறனும் புதிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

    English Summary

    Bigg Boss: For the 'commoners' who eagerly aspired to enter the Bigg Boss house, the 'Bigg Boss: The Common Man' initiative served as the first step toward that goal. In this context, a serious allegation has been raised against Nivya Maran, the daughter of actor Maran. Nivya has claimed that, during a conversation, the moderator Aari picked up a ball that was nearby and threw it at her face.