பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பரிதாபங்கள் டீம்.. ஆரிக்கு செம அடி! இது தான் ரிவேன்ஷா?

  • சென்னை: பிக் பாஸ் காமன் மேன் ஷோ தொடங்கியதுதான் தொடங்கியது ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆடிஷனில் கலந்துகொண்டு கடைசியில் 50 போட்டியாளர்களை மட்டுமே நடுவர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர். அதிலும் ஆடிஷன் என்கிற பெயரில் இவர்கள் செய்த அளப்பறைகள் இப்போ சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பரிதாபங்கள் டீம் தங்களுடைய பங்குக்கு பிக் பாஸ் காமன்மேன் ஷோவை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் காமன் மேன் ஒருவர் கலந்து கொள்வதற்காக புதியதாக காமன்மேன் என்ற ஒரு நிகழ்ச்சியை வைத்து அதில் ஒரு போட்டியாளரை மட்டும் தேர்வு செய்து பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக அனுப்பப் போகிறார்கள். அதற்காகத்தான் இப்போது பலகட்ட ஆடிஷன் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    நடுவர்கள் ரகளை

    ஆரம்பத்தில் லட்சக்கணக்கானோர் இதற்காக போட்டியாளர்கள் போட்டி போட்டு இருக்கிறார்கள். அதில் இருந்து நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் தருகிற மாதிரியும், அதே நேரத்தில் மக்களுக்கு கொஞ்சமாக தெரிந்தவர்களாகவும் சிலரை செலக்ட் பண்ணி இருக்கிறார்கள். அவர்களை ஆரி, மாயா, ஓவியா, ராஜு முன்பு நிறுத்தி ஆடிஷன் செய்திருக்கிறார்கள். இந்த ஆடிஷனில் சில போட்டியாளர்களை பேசவே விடாமல் தடுத்து விடுகிறார்கள் என்ற விமர்சனம் இருந்தது.

    விஜய் டிவி எலிமினேஷன்

    அதிலும் நைட்டி அக்கா (பிரியவர்ஷினி) செய்த அலப்பறைகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது. இதை வைத்து இப்போ பரிதாபங்கள் டீம் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக சென்ற சுதாகர் மற்றும் கோபி இருவரையும் எலிமினேஷன் செய்து வெளியே அனுப்பி விட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் பரிதாபங்கள் என்ற ஒரு youtube சேனலை தொடங்கி குறைந்த முதலீட்டில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு youtube இல் வருமானத்தை பெற்று வருகிறார்கள்.

    Advertisement

    பரிதாபங்கள் டீம் அலப்பறை

    சோசியல் மீடியாவில் என்ன ட்ரெண்டாக போய்க்கண்டிருக்கிறதோ அதை வைத்து ஒரு வீடியோ போட்டு அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வருகிறார்கள். இப்போது இவர்கள் கண்ணில் தான் பிக் பாஸ் ஆடிஷன் சிக்கி இருக்கிறது. உடனே அந்த நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடந்ததோ அதை டீ கோட் செய்து பிக் பாஸ் டீமை கலாய்த்து இருக்கிறார்கள். அதிலும் ஆரி, ராஜு, மாயா போன்றோரையெல்லாம் அதிகப்படியாக கலாய்த்து இருக்கிறார்கள்.

    நைட்டி போட்டு வந்த போட்டியாளர் பிரியவர்ஷினியை இவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பி இருந்தாலும் சுதாகர் நைட்டி போட்டுட்டு வந்து செம அலப்பறை பண்ணி இருக்கிறார். இந்த வீடியோஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Bigg Boss Common Man: The Bigg Boss Common Man show has been full of controversies since its inception. Lakhs of people auditioned for the show and finally the judges shortlisted only 50 contestants. Moreover, the auditions they did in the name of auditions have now created a debate on social media. In this situation, Paritipangal team has whitewashed the Bigg Boss commonman show for their share.