சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இதுவரைக்கும் பல, நடிகர்களும் தொகுப்பாளர்கள் சீரியல் முகங்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான். ஆனால் இந்த முறை அந்த பார்முலாவை தலைகீழாக மாற்ற விஜய் டிவி முயற்சிக்கிறது. அதுதான் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சாதாரண மக்களும் கலந்து கொள்ளலாம் என்று ப்ரோமோ வெளியானது. ஆனால் இப்போ இது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் விலகல்
பிக் பாஸ் என்றாலே தமிழில் கமல்ஹாசன் தான் என்ற ஒரு அடையாளத்துடன் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா... வாங்கிய அடி போதும் என்று டாடா காட்டி விட்டார். உலகநாயகனாக பிரபலமடைந்த கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போது வந்த போது முதலில் வரவேற்பு இருந்தது. ஆனால் சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்ததும் கமல்ஹாசனையும் ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.
பிக் பாஸ் ரித்விகாவுக்கு சோதனை மேல் சோதனை.. இப்படியா நடக்கணும்? உருக்கமாக சொன்ன ஒரு வார்த்தை! குவியும் ஆறுதல்
அதனாலேயே அவர் நைசாக கழண்டு விட்டார். அதற்கு பிறகு தான் அவர் இடத்திற்கு விஜய் சேதுபதி வந்து சேர்ந்தார். அவருக்கும் சோசியல் மீடியாவில் ட்ரோல்களும் மீம்ஸ்களும் பஞ்சமில்லை ஆனாலும் இருந்தாலும் அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் புது முயற்சி ஆக பிக் பாஸ் காமன்வென் என்று நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானது.
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்!
இது எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. காரணம் இதுவரைக்கும் பிரபலங்கள் மட்டுமே இந்த வீட்டிற்குள் சென்று இருக்கிறார்கள் இதனால் நாம இந்த இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் இப்போ அதிலும் சில ஏமாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த முறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதி இல்லையாம். இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தானாம். அதுவும் டைட்டில் வெற்றி பெற்ற முத்துக்குமாரன் அல்லது மாயா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் முத்துக்குமாரனுக்கு ஏற்கனவே நல்ல ஒரு வரவேற்பு இருக்கிறது அதேபோல மாயகிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ட்ரோலில் சிக்கி இருந்தாலும் அவருடைய மஞ்சுளா டீச்சர் வீடியோஸ் பெரிதாக வைரல் ஆகி வந்ததும் அவரையே இங்கே நாட்டாமையாக மாற்ற போறாங்களா என்னவோ தெரியல. சரி இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சாதாரண மக்கள்தான் வரப்போறாங்கன்னு சொன்னாங்க ஆனா இப்போ அங்கேயும் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்களாம். அதாவது சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறவங்களை தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க போறாங்களாம். ஏற்கனவே போன சீசனில் திவாகர் உட்பட ஒரு சில சோசியல் மீடியா பிரபலங்கள் வந்து நிகழ்ச்சியின் சுவாரசியமே இல்லாமல் போனது அதேபோல இந்த முறையும் மாறப்போகிறதா? அல்லது ப்ரோமோவில் சொன்னது போலவே சாதாரண மக்களை கூட்டி வரப்போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே. மேலும் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வழக்கமான நிகழ்ச்சி இல்லை. சுமார் 25 எபிசோடுகள் கொண்ட இந்த காமன்மேன் நிகழ்ச்சியில் செலக்ட் ஆகுற சிலர் தான் நேரடியாக பிக் பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பை பெறுவார்களாம். ஏற்கனவே விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரில் செகன்ட் லவ் என்ற ஒரு நிகழ்ச்சியும் வரும் ஜூலை 13ஆம் தேதி யிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை ட்ராலில் சிக்கி இருக்கும் நிலையில் அது எப்படி போகிறது என்று பார்த்து அதை தொடர்ந்து பிக் பாஸ் காமன்வென் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிக் பாஸ் காமன் மேன் தொகுப்பாளர்
பிக் பாஸ் காமன்மேன் போட்டியாளர்கள்