பிக் பாஸின் ஓரவஞ்சனை.. ஜாவித்துக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? ஆதாரத்தோடு வீடியோ வெளியிடும் ரசிகர்கள்

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே போயிருக்கிறார்கள். ஆனால் போன வாரம் போன 3 பேரில் 2 பேர் நேற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஜாவித் வெளியேற்றப்பட்ட காரணம் அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு கழட்டியது தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் உள்ளிருக்கும் அஸ்மிதா அதேபோல செய்திருந்தார். அப்போ மட்டும் பிக் பாஸ் கவனிக்கவில்லையா? அல்லது இது ஓரவஞ்சனையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ஏதாவது புதுமையாக செய்து மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய பேச்சை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பமான முதல் நாளிலிருந்து புது புது ஐடியாக்களை செயல்படுத்துகிறார்கள். ஆனால் அதிலும் சில விஷயங்கள் தான் அவர்களுக்கே ஆப்பாக மாறிவிடுகிறது. போன வாரம் வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டனர். அவர்கள் உள்ளே இருக்கும் 3 போட்டியாளர்களை செலக்ட் செய்து அவர்களின் கைகளை தங்கள் கைகளுடன் ஒரு கயிறை கட்டிக்கொண்டு ஒரு வாரம் முழுக்க இருந்தனர்.

    Advertisement

    பிக் பாஸ் அப்டேட்

    அதில் யார் கயிற்றை கட் பண்ணுகிறார்களா அவர்களே எலிமினேஷன் ஆவார்கள் என்று சொல்லப்பட்டது. அதனாலயே சிவன்யா அஸ்மிதாவுடன் சண்டை மேல் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். அதுபோல லட்சுமி பிரியாவும் குமரனை மன ரீதியாக அட்டாக் செய்தார். கடைசியில் குமரன் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார். மீதம் இருந்தது ஜாவித் தான். அவர் தன்யா கைகளில் தனது கையை கட்டி இருந்தார். இவர்கள் சில நேரங்களில் க்யூட்டாக செய்தாலும் சில நேரங்களில் கடுப்பாகுற மாதிரி தான் நடந்து கொண்டார்கள்.

    Advertisement

    ஜாவித் வெளியேற்றம்

    ஆனால் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஜாவித் கயிறு கலண்டு விட்டது. அதனால் அவர் வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. 3 போட்டியாளர்களில் குமரன் ஏற்கனவே வெளியானதால் மீதமுள்ள இரண்டு போட்டியாளர்களாக ஜாவித் மற்றும் சிவன்யா வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அஸ்மிதா சிவன்யா குளிக்க போக வேண்டும் என்பதற்காக கையில் கட்டியிருந்த கயிற்றை கழட்டி விட்டு விட்டு பாத்ரூம் வெளியே காத்திருந்தார்.

    ரசிகர்கள் கேள்வி

    அப்போது அங்கு வந்த லட்சுமி பிரியா அஸ்மிதாவிடம் நீங்க ஏன் கையில் கட்டி இருந்த கயிற்றை கழட்டிட்டிங்க என்று கேட்க அவங்க பாத்ரூம் போய் இருக்காங்க அதற்காகத்தான் கழட்டுனேன் என்று அஸ்மிதா சொல்லி இருந்தார். இப்போ ஜாவித் கையில் கயிறு கழண்டுவிட்டது என்பதற்காக அவரை அனுப்பி இருக்கிறார்கள் ஆனால் அஸ்மிதா கைகளில் மாட்டி இருந்த கயிறு கழட்டியது பற்றி எதுவுமே பேசவில்லையே? அப்போ எதற்காக இந்த ஓரவஞ்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே லட்சுமி பிரியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவேற்பதற்காகத்தான் ஜாவித் மற்றும் சிவன்யாவையும் சேர்த்து உள்ளே அனுப்பி வைத்தார்கள் என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் இப்போ இந்த கயிறு விஷயமும் பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    English Summary

    Bigg Boss : Three wild-card contestants entered the Bigg Boss Tamil Season 10 house this week. However, two of the three contestants who had entered last week were evicted yesterday. Notably, the reason cited for Javid's eviction was that he had untied the cord fastened to his wrist. Yet, Asmitha—who is also inside the house—had done the exact same thing. Fans are questioning whether Bigg Boss simply failed to notice it in her case, or if this amounts to partiality.