சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை முத்தழகி தான். இவர் பெயர் பெரிதாக இதுவரைக்கும் சோசியல் மீடியாவில் அடிபடவில்லை. ஆனால் இவர் இன்று மேடையில் நின்று கொண்டிருக்கிறார். இவர் யார் என்ற தேடல் ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் அவரைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
பிக் பாஸ் 10 போட்டியாளர்
பொதுவாக விஜய் டிவி ஒவ்வொரு சீசனில் மறந்த முகங்களை கூட்டிக்கொண்டு வருவார்கள். அது போல தான் இந்த சீசனில் முத்தழகி வந்திருக்கிறார். இவரை இதற்க்கு முன்பு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று ரசிகர்களுக்கு தோன்றி இருக்கலாம். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்தவர்தான். அதுபோல ஒரு சில சீரியல்களில் அந்த சமயத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதும் அவர் பெரிதாக வெளியே தெரியவில்லை. அதற்கு பிறகு சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
நடிகை முத்தழகு பயணம்
அதுபோல மாடலிங்கில் தான் இவருடைய சினிமா பயணம் தொடங்கியது. மிஸ் பெங்களூரு 2021 பட்டத்தை வென்று கவனம் பெற்றிருந்தார். அதற்கு பிறகு அலெக்ஸ் பேஷன் சீசன் 4 வெற்றியாளராகவும் மாறி ஃபேஷன் உலகில் தனது பெயரை நிலைநாட்டில் இருந்தார். ஆனாலும் இவர் பெரிதாக வெளியே தெரியவில்லை. ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தாலும் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் தான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இனி அவருடைய ஆட்டம் எப்படி போகப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். ஆனால் இன்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அவர் பேசும்போது நான் ஜாலியான பெர்சன். ஆனால் என்னுடைய நிஜ கேரக்டர் எந்த சீரியலிலும் ஷார்ட் பிலிம்யில் காட்ட முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் நானாக இருக்கப் போகிறேன். மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்டர்டைன்மென்ட் விரும்புபவர்களுக்கு என்னால் என்டர்டைமென்ட் கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். சரி இவ்வளவு பேசுகிறவர் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.முதல் நாள் பேச்சு