Bigg Boss: நாளைக்கு பிக் பாஸில் செம சம்பவம்! இன்று காலை வேக்கப் சாங் கவனிச்சீங்களா?

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரம் கூட இன்னும் முடிவுக்கு வரல ஆனால் போன வர சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பேசியதுதான் இப்போ வரைக்கும் பெரிய பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு விஜய் டிவி விளக்கம் கொடுத்திருந்தது. ஆனால் விஜய் சேதுபதி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர் லீடர்ஷிப் பற்றி பேசியது விஜயைத் தான் என்ற பஞ்சாயத்துக்கு மத்தியில் இப்போ பிக்பாஸ் வீட்டிற்கு இன்னொரு புது பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.

    Advertisement

    இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக அடுத்தடுத்த டாஸ்க்க்களை வைத்து போட்டியாளர்களை கதற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஆரம்பத்தில் அதிக ரசிகர்களை பெற்ற லட்சுமி பிரியாவிற்கு இப்போ படிப்படியாக நெகடிவ் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவருக்கு ரெட்கார்டு கொடுத்தே ஆகவேண்டும் என்ற பலர் சொல்லி வருகின்றனர்.

    Advertisement

    லட்சுமி பிரியாவிற்கு ரெட் கார்டு

    ஆனால் லட்சுமி பிரியாவின் ரசிகர்கள் அப்படி மட்டும் ரெட் கார்டு கொடுத்தால் அதற்கு பிறகு பிக் பாஸ் நடக்கவே முடியாது என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஆனந்தி, லக்ஷ்மி பிரியா சண்டை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளிலிருந்து இருவரும் மோதல் தொடங்கி விட்டது. நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றாலும் ப்ரோமோவில் இவர்களின் சண்டையை பார்த்திருக்கலாம். இதில் யார் சரி? யார் தவறு? என்று யூகிக்க முடியாத அளவில் தான் இருவருடைய க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது.

    Advertisement

    ஆனால் அடி வாங்கியது ஆனந்தி என்பதால் லட்சுமி பிரியாவிற்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும், அவருடைய பேச்சு கூட சரியில்ல எத்துனா ரத்தம் வந்துரும் என்று சொல்கிறார், அடித்து மூஞ்ச ஒடச்சிடுவேன் என்று சொல்கிறார், இப்படிப்பட்டவங்களை எப்படிங்க பிக்பாஸ் வீட்டிற்குள் வைக்கிறது? போன சீசன் பார்வதி மாதிரி தான் இந்த சீசன் லட்சுமி பிரியாவும் இருக்கிறார் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இதனால் நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

    விஜய் சேதுபதிக்காக வெயிட்டிங்

    ஏற்கனவே விஜய் சேதுபதி போன சனிக்கிழமை பேசிய லீடர்ஷிப் பிரச்சனைக்கு இப்போ வரைக்கும் விளக்கம் கொடுக்காததால் அதற்கும் நாளைக்கு சூசகமாக ஒரு கதையை சொல்லுவார். அதனால் அதைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. மொத்தத்தில் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடு பெரிய எதிர்பார்ப்போடு தான் இருக்க போகிறது. போனவார ப்ரோமோ யாருக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் இந்த வாரத்தில் தான் சம்பவங்கள் அடுத்தடுத்து வரிசையாக இருக்கிறது.

    Advertisement

    குளிக்காத லட்சுமி பிரியா

    இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது விஜய் சேதுபதி தான். சூழ்நிலை எப்படி இருக்கும் போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு வாரமாக லட்சுமி பிரியா குளிக்கவே இல்லை என்பதும் நெட்டிசனின் கிண்டலாக இருக்கிறது. போன வாரம் கூட நான் லட்சுமி பிரியாவுக்கு ஃபேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறதுக்காக வேலையை விட்ட நபரே சொல்லிவிட்டார். இப்படி எல்லாம் இவருக்கு நிறைய ஃபேன் இருக்காங்க ஆனா இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு வாரமாக குளிக்காமல் இருக்கிறாரே லட்சுமி பிரியா என்று அவரை மீம்ஸ்களில் போட்டு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் வேக்கப் சாங்

    இந்த மீம்ஸ் பிக் பாஸ் டீம் கண்ணில் பட்டு பட்டு விட்டது போல. உடனே இன்று காலை வேக்கப் சாங்கில் தனுஷின் அனேகன் படத்தில் வந்த "டங்கா மாரி ஊதாரி" பாடலைப் போட்டு பிக்பாஸ் அனைவரையும் எழுப்பி வைத்திருக்கிறார்கள். அதில் வந்த "அழுக்கு மூட்ட மீனாட்சி மூஞ்சை கழுவி நாளாச்சு" என்ற லைனை வைத்து இப்போது லட்சுமி பிரியாவே ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதனால் நாளைக்கு லட்சுமி பிரியாவுக்கு தான் டோஸ் விழ போகிறது. அதற்காகத்தான் பிக்பாஸ் பக்கமாக இப்படி ஒரு பாட்டு போட்டு இருக்கிறது என்பதும் பலருடைய கமெண்ட்ஸாக இருக்கிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    Advertisement

    English Summary

    Bigg Boss: It hasn't even been two full weeks since the start of Bigg Boss Tamil Season 10, yet the remarks made by Vijay Sethupathi during last Saturday's episode continue to spark a major controversy. While Vijay TV has issued a clarification regarding the matter, Vijay Sethupathi himself has offered no explanation. Amidst the ongoing debate over whether his comments on leadership were directed at Vijay, a new issue has now arisen within the Bigg Boss house.