பிக் பாஸ் 10 முதல் 3 போட்டியாளர்கள்.. மேடையிலே நடந்த வாக்குவாதம்! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை

  • சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று செப்டம்பர் 6ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதில் முதல் போட்டியாளராக லட்சுமி பிரியாவும், இரண்டாவது போட்டியாளராக ஷாதிகா, மூன்றாவது போட்டியாளராக ஷப்னம் வந்திருக்கிறார். இவர்கள் 3 பேரும் மேடையில் இருக்க வைத்து விஜய் சேதுபதி சொன்ன விஷயத்தை கேட்டு மூன்று பேருமே கடுப்பாகி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுவரைக்கும் நடக்காத சம்பவமும் இந்த சீசனில் நடந்திருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளர்கள்

    10வது சீசன் என்ன மாதிரி இருக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. இதுவரைக்கும் போட்டியாளர்கள் மேடைக்கு வந்ததும் அவர்களை வரவேற்று விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். ஆனால் இந்த முறை 3 போட்டியாளர்களை மேடையில் நிற்க வைத்து அவர்களிடம் எதற்காக இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருக்கீங்க? உள்ளே போனால் என்ன செய்வீங்க? என்று நீங்களே சொல்லுங்க, நீங்க சொல்லுவதை கேட்டு பார்வையாளர் உங்கள் 3 பேரில் இருவரை மட்டும் உள்ளே அனுப்புவதற்கு ஓட்டு போடுவார்கள்.

    Advertisement

    பிக் பாஸ் ஓட்டிங்

    அவர்களை மட்டும்தான் உள்ளே அனுப்ப முடியும் என்று புது டாஸ்க் சொல்லி இருக்கிறார். இதை கேட்டு கடுப்பான 3 போட்டியாளர்களும் இதுவரைக்கும் இப்படி இல்லையே, நாங்க பிக் பாஸ் போறோம் என்று சந்தோஷமாக கிளம்பி வந்தோம். ஆனா இந்த மேடையிலேயே நீங்க அனுப்ப போறோம்னு சொல்றது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன சார் இப்படி பண்ணிருக்கிங்க என்று கேட்க, அதற்கு விஜய் சேதுபதி இது நான் மட்டும் எடுத்த முடிவு கிடையாது, சேனல் தரப்பில் இருந்து எடுக்க முடிவு என்று கூறினார்.

    Advertisement

    பிக் பாஸ் தமிழ் சீசன் 10 முதல் எவிக்ஷன்

    மேலும் இதுவரைக்கும் மக்கள் இவங்க இருந்தா நல்லா இருக்கும், அவங்க இருந்தா நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க. இந்த முறை அவர்களுடைய தீர்ப்பு தான் இறுதி முடிவு என்று சொல்லி ஓட்டிங் வைத்திருக்கிறார்கள். 3 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் போனால் என்னவெல்லாம் செய்வோம், தாங்கள் கடந்து வந்த பாதை என எல்லா விஷயத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேக வேகமாக பேசி முடித்தனர். ஆனால் ஷப்னம் மட்டும் சரியாக பேசாமல் திணறிக் கொண்டிருந்தார். அதனாலயே அவருக்கு ஓட்டுகளும் கம்மியாக கிடைத்திருக்கிறது. இதனால் அவர்தான் முதல் போட்டியாளராக எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்.

    Advertisement

    English Summary

    Bigg Boss: Bigg Boss Tamil Season 10 on Vijay TV has started in a big way today on 6th September. Lakshmi Priya is the first contestant, Shathika is the second contestant and Shabnam is the third contestant. All 3 of them are on the stage and hearing what Vijay Sethupathi said, all 3 of them are furious. At the same time, an unprecedented incident has also happened this season.