ஸ்டேட்டர்ஜி போட்டு, அடிச்சுக்கிட்டது யாரோ.. வின் பண்ணுனது வேறொருத்தர்! விஜய் சேதுபதி கலாய்! யாரை?

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் அக்டோபர் 10ம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வந்திருக்கிறது. அதில் விஜய் சேதுபதி சொன்ன விஷயம் தான் இப்போது கவனம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி சில வாரங்களுக்கு முன்பு தலைமை பண்பு பற்றி பேசியது விஜயை விமர்சித்து தான் என்ற விவாதம் வந்தது. அதேபோல இன்றைய எபிசோடில் கூட வெற்றி பெற்ற நபரை விமர்சித்து இருப்பதை வைத்தும் விவாதம் வந்தாச்சு.

    Advertisement

    விஜய் சேதுபதி பேச்சு

    அதாவது இன்றைய ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசுகையில், ஸ்டேட்டர்ஜி போட்டது யாரோ... விளையாட்டை வழி நடத்துனது யாரோ.. அடிச்சுக்கிட்டது யாரோ... ஆனா வின் பண்ணுனது (வெற்றி பெற்றது) வேற யாரோ.. இது எப்படி நடந்துச்சுன்னு வீட்டுக்குள்ள போய் கேட்டு விடலாமா? என்று அந்த ப்ரோமோவில் பேசி இருக்கிறார். பிறகு தனக்கு தொண்டை சரியில்லை என்பது போல சைகையும் காட்டி இருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் இவர் என்னதான் பஞ்சாயத்தை கூட்ட போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸின் ஓரவஞ்சனை.. ஜாவித்துக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? ஆதாரத்தோடு வீடியோ வெளியிடும் ரசிகர்கள்
    அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது சமீபத்தில் தான் இடைத்தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதியிலும் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. இதை விமர்சித்து தான் விஜய் சேதுபதி இதுபோல பேசுகிறாரா? விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்திற்குள் அவருக்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது, முதலமைச்சர் ஆன பிறகு சந்திக்கும் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்று கலாய்க்கிறாரா? என்ற கேள்விகள் எழுகிறது.

    Advertisement

    லீடர்ஷிப் பிரச்சனை

    ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தலைமை பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். தலைவர் ஆகுறதுக்கு முன்னாடி வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனை வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு ஓடுவது தலைவன் கிடையாது என்று சொல்லி இருந்தார். அந்த சமயத்தில் சட்டமன்ற பொதுக்கூட்டம் நடந்தது அப்போது எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு விஜய் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார் என்பது போல விஜய் சேதுபதி கலாய்க்கிறார் என்று ஒரு விமர்சனம் வந்தது.

    விஜய் சேதுபதி விளக்கம்

    அதற்கு சேனல் தரப்பிலும் மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனாலும் தொடர்ந்து விஜய் சேதுபதி அதிகமாக விமர்சிக்கப்பட்டார். கடைசியில் அடுத்த வாரம் எபிசோடில் வந்து விஜய் சேதுபதியே, நாங்கள் எந்த தனி நபரையோ.. அல்லது தனிநபர் கட்சியையோ பற்றி விமர்சிக்கவில்லை. நாங்கள் இந்த மேடையில் பேசுவது எங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் எங்கள் போட்டியாளர்களுக்கும் இடையிலான உரையாடல் மட்டுமே என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் வெற்றியைப் பற்றி பேசுவதும் விஜயை தாக்கிதானா என்ற கேள்வி வருகிறது.

    Advertisement
    பிக் பாஸ் வந்த டிடிஎஃப் வாசன்.. நண்பனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி! இப்படி பேசியது சரியா?

    ரசிகர்கள் கருத்து

    அதே நேரத்தில் இந்த வார பிக் பாஸ் வீட்டில் பல போட்டிகள் நடந்தது. அதில் பல டாஸ்க்களில் எதிர்பாராத வெற்றியும் நடந்தது, சண்டைகளும் நடந்தது. இதை வைத்து தான் விஜய் சேதுபதி பேசுகிறார் என்று விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுக்கிறார்கள். ஆனாலும் இன்றைய எபிசோடில் அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து விட்டது.

    English Summary

    Bigg Boss : The first promo for the October 10th episode of Bigg Boss Tamil Season 10 has been released, and a remark made by Vijay Sethupathi in it is currently drawing attention. A debate had previously arisen suggesting that his comments on leadership qualities a few weeks ago were a veiled criticism of Vijay; similarly, a discussion has now sparked regarding his criticism of the winner in today's episode.