ஹார்ட் அட்டாக்கில் இறந்த ஆனந்தியின் அப்பா.. பிக் பாஸை விட்டு அனுப்பும்போது கூட இப்படியா பண்ணனும்?

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த ஆனந்தி நேற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பொதுவாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தான் எவிக்ஷன் நடக்கும். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எவிக்ஷன் நடந்திருக்கிறது. அதிலும் அவருடைய அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய்விட்டார் என்று அவரிடம் சொல்லாமல் அவரை வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் உள்ள சில நடந்த செயல்கள்தான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சையானது தான் அதற்காக இப்படியா செய்ய வேண்டும்? என்பது கேள்வி. அதாவது ஒரு போட்டியாளரின் அப்பா இறந்து போய்விட்டார் அதுவும் ஹார்ட் அட்டாக்கில் திடீரென இறந்து போயிருக்கிறார் அவர் உள்ளே வரும்போது சந்தோஷமாக வழி அனுப்பி வைத்திருப்பார், ஆனால் இப்போது அவர் திடீரென இறந்திரும் சமயத்தில் உடனே விஷயத்தில் சொல்லி அனுப்பிய வெளியே வர வைக்காமல் அப்போது கூட ஒரு கண்டன்ட் தேவையா என்பதுதான் கேள்வி.

    Advertisement

    எடிக்ஷன் ஆன ஆனந்தி

    அதாவது ஆனந்தியை வெளியேற்ற போகிறோம் என்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி அறிவித்துவிட்டார். மக்களிடம் மட்டும்தான் ஆனந்தியின் அப்பா இறந்து போயிருக்கிறார், அதற்காக அவரை முதலில் அனுப்புகிறோம் ஏற்கனவே அவர் தான் குறைவான வாக்குகள் பெற்று இருக்கிறார் அதனால் நிகழ்ச்சியில் கடைசியில் நடக்கும் எவிக்ஷனை முதலிலேயே செய்து அவரை வெளியே அனுப்புகிறோம் என்று சொல்லி இருந்தார்.

    விஜய் சேதுபதியின் செயல்

    பிறகு மேடையில் இருக்கும்போது கூட ஆனந்தி பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் சேதுபதி அவரை கட்டியணைத்து நீங்க வீட்டுக்கு போங்க உங்களுக்கு சூழ்நிலை புரியும் என்று அனுப்பி வைத்திருந்தார் இதுவெல்லாம் ஓகே. ஆனால் ஆரம்பத்தில் ஆனந்தியிடம் நீங்க தான் எவிக்சன் என்பதை அறிவித்துவிட்டு உள்ளிருக்கும் அனைவரிடமும் சொல்லிவிட்டு வாங்க என்று அவருக்கு டைம் கொடுத்திருக்கிறார்கள்.

    Advertisement

    ஆனால் ஆனந்திக்கு அவருடைய அப்பா இறந்து போனது தெரியாமல் அஸ்மிதாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியே வருகிறார். அப்போ உள்ளே இருக்கிறவர்களுக்கு யாருக்குமே ஆனந்தியின் அப்பா இறந்த விஷயமே தெரியாது அந்த நேரத்தில் கூட அவர்கள் எல்லோரும் ஆனந்தியை மேலும் காயப்படுத்துகிறார்கள். வெளியே வந்தால் அவர் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்திப்பார் என்பது எல்லோருக்குமே தெரியும். பெற்ற அப்பாவை இழந்து இருக்கிறார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட உள்ளிருக்கு போட்டியாளர்களை உங்களுக்கு முடிந்த வரைக்கும் இவரை அடித்து விட்டு வெளியே அனுப்புங்கள் என்று சொல்வது போலத்தான் நேற்றைய எபிசோடு இருந்தது.

    Advertisement
    பிக் பாஸில் இருந்து அனுப்பப்பட்ட லட்சுமி பிரியா? நிஜ காரணம் இதுதானா? வெளியே வந்ததும் போட்ட போஸ்ட்!

    தவறான செயல்

    உள்ளேயே ஆனந்தியிடம் உண்மையை சொல்லி இருக்கலாம். அல்லது நீங்கள் தான் எவிக்சன் உடனே வாருங்கள் என்றாவது வர வைத்திருக்கலாம். ஆனால் இந்த வாரம் முழுக்க ஏற்கனவே அழுது கொண்டு இருந்த ஆனந்தியை வெளியே வரும் சமயத்திலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் சண்டை போட விட்டு.. அதற்காக டைம் கொடுத்து.. அதிலும் தங்களுக்கு தேவையான கண்டெண்ட் ரெடி பண்ணுகிறார்கள். இது தவறான மனநிலை என்பதுதான் அனைவரின் கருத்து.

    English Summary

    Bigg Boss: Ananthi, who entered *Bigg Boss Tamil* Season 10 as a wild-card contestant, was evicted yesterday. Typically, evictions take place on Sundays, but this week, the eviction occurred on a Saturday. Notably, she was sent out without being informed that her father had passed away due to a heart attack. Meanwhile, certain events that unfolded inside the house have sparked a debate.