பிக் பாஸ் 10ல் களமிறங்கும் 10 பேர் இவங்க தானா? அப்போ இந்த சீசன் கலக்கல் தான்! யாரெல்லாம்னு பாருங்க

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த சீசனுக்கான ப்ரோமோ வெளியானதுமே யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதை மேலும் தூண்டும் வகையில் நான்கு போட்டியாளர்கள் பற்றிய தகவலை ஏற்கனவே ப்ரோமோவில் சொல்லிவிட்டார்கள். இப்போது மேலும் சில போட்டிகள் பெயர்களும் தெரிய வந்திருக்கிறது.

    Advertisement

    கடந்த சில சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்பதால் இந்த முறை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் டீம் போட்டியாளர்கள் தரப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருப்பதாகவே கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தையும், கலகலப்பையும் ஏற்படுத்தும் வகையில் சில போட்டியாளர்களை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில் 10 போட்டியாளர்கள் பெயர் இப்போது வெளியாகியிருக்கிறது அதைப் பற்றி பார்க்கலாம்.

    Advertisement

    ஜனனி அசோக்குமார்

    ஜனனி அசோக்குமார் செம்பருத்தி, மாப்பிள்ளை, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கு இதயம் சீரியல் மூலமாக ஹீரோயினியாகவும் நடித்து வந்தார். இப்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் இந்த சீசனில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

    அன்ஷிதா

    அடுத்ததாக அன்ஷிதா பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு சீசன்களாக இவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் இவர்தான் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. காரணம் தற்போது விஜய் டிவி தரப்பில் இருந்து வெளியான ப்ரோமோவில் 2 பெண் போட்டியாளர்களை பின்பகுதியை காட்டி இருப்பார்கள். அதில் ஒருவர் அன்ஷிதா தான் என்று கூறப்படுகிறது. இவர் முதலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து பாசிட்டிவாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்.

    Advertisement

    ஷபானா

    செம்பருத்தி சீரியல் ஷபானாக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்திருந்தது. அதற்கு பிறகு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அவரும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

    டாலி

    ஒவ்வொரு சீசனிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எடுப்பார்கள். அந்த வரிசையில் இப்போது இவரைத்தான் டிக் அடித்திருப்பதாக கூறப்படுகிறது. இவருடைய பிளர் போட்டோவையும் ஏற்கனவே விஜய் டிவி ப்ரோமோவில் காட்டி விட்டார்கள். அதனால் இவரும் கன்பார்ம் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய சீசனில் தமிழ் தெரியாத சுனிதாவை களம் இறக்கியது போல இந்த சீசனில் டாலி வருகிறாராம்.

    Advertisement

    ஹேமா ராஜ்குமார்

    இந்த லிஸ்டில் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகம் ஹேமா ராஜ்குமார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கி விட்டார். இப்போ இவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் டாப் கண்டஸ்டண்ட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.

    நவீன் குமார்

    விஜய் டிவியில் சின்ன மருமகள் உட்பட பல சீரியல்களில் நடித்திருந்த நவீன் குமாரும் இந்த சீசனில் கலந்து கொள்வதாக விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறார். நவீன் குமார் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு நெகட்டிவ்வான பெயரே இருந்து வருகிறது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு புதிய மாற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    வினோத் பாபு

    அதுபோல ஒவ்வொரு சீசனிலும் சில பெயர்கள் தவறாமல் இடம்பிடிக்கும் அதில் வினோத் பாபுவின் பெயரும் உண்டு. கடந்த இரண்டு சீசன்களாக இவருடைய பெயர் உத்தேச பட்டியலில் இடம் பெறுகிறது. கடைசியில் அவர் வரவில்லை. ஆனால் இந்த சீசனில் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது காரணம் ஏற்கனவே விஜய் டிவி தரப்பில் இருந்து வெளியான ப்ரொமோவில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் கொடுத்தது இவர்தான் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். ஒரு வழியாக இந்த சீசனாலாவது அவர் வந்தால் சரி என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    ஆலியா மானசா

    அதுபோல விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்த ஆலியா மனசாவும் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆலியா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    கிரிக்கெட்டர் முரளி விஜய்

    அதுபோல இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறையில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில் முதல் முறையாக கிரிக்கெட்டர் முரளி விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இப்போதைக்கு இந்த போட்டியாளர்களின் பெயர்கள் தான் உத்தேச பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. இனி புது போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியே வந்தால் அதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

    English Summary

    Bigg Boss Tamil season 10 : The upcoming Season 10 of *Bigg Boss Tamil* on Vijay TV is set to launch in a grand manner on September 6th. Ever since the promo for this season was released, fans have been eager to know who will be participating. Fueling this excitement further, details about four contestants were already revealed in the promo, and now, the names of a few more participants have also come to light.