பிக் பாஸ் 10ல் அதிரடியாக களமிறங்கும் சர்ச்சை நாயகி.. ஃபேமிலி ரவுண்டில் சம்பவம்! களைக்கட்டும் சீசன்

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஏற்கனவே 10 போட்டியாளர்கள் யார் என்று நாம் முந்தைய செய்தியில் கொடுத்திருந்தோம். இப்போது மேலும் ஒரு பிரபலம் கலந்து கொள்ளும் தகவலும் வெளியாகி இருக்கிறது. அவர் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் என்பதால் இந்த நிகழ்ச்சியில் அவருடைய விளையாட்டு எந்த மாதிரி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

    Advertisement

    அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை ஜாய் கிரிஸில்டா தான். இவர் ஆடை வடிவமைப்பாளராக நடிகர் விஜய்க்கு உடன் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்களுக்கும் இவர் ஆடைய வடிவமைப்பாளராக இறந்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அவருடைய பெயர் பலருக்கும் தெரியாது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜனுடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று வெளியிட்ட போட்டோஸ் தான் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

    Advertisement

    குழப்பம்

    மாதம்பட்டி ரங்கராஜனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இவருடன் எப்போது திருமணம் நடந்தது என்று குழப்பத்தில் எல்லோரும் இருந்த சமயத்திலேயே நான் கர்ப்பமாக இருக்கிறேன் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜன் தான் காரணம் என்று அடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அப்படி அவர் வெளியிடும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

    மாதம்பட்டி ரங்கராஜ் பதிவு

    ஆனால் மாதம்பட்டி ரங்கராஜனோ ஜாய் குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை அது என்னுடைய குழந்தை என்று நிரூபணம் ஆனால் அதை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு சில மாதங்கள் கழித்து முடிவுகளும் வந்தது. அதில் மாதம் பட்டி ரங்கராஜன் தான் அந்த குழந்தையின் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    அதற்குப் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலிருந்து எந்த விளக்கமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருந்த சமயத்தில் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா குழந்தையை கையில் வைத்து கொஞ்சியபடி மாதம்பட்டி ரங்கராஜன் போஸ்ட் வெளியிட்டு இருந்தார். இனி என்னுடைய குழந்தைகளுக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லி இருந்தார்.

    ஃபேமிலி ரவுண்டு எதிர்பார்ப்பு

    சமீபத்தில் அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் பங்க்ஷனும் நடைபெற்றது. இந்த சர்ச்சைகளால் பெரிய அளவில் பிரபலமான ஜாய் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த முறை சின்னத்திரையில் அதிகமான ஃபேன்ஸ் இருக்கும் போட்டியாளர்களாக பார்த்து தேர்வு செய்து இருக்கிறார்கள். கடந்த இரண்டு சீசன்களாக பெரிய அளவில் நிகழ்ச்சியில் சுவாரசியம் இல்லை என்பதால் இந்த முறை ரசிகர்களை கவர வேண்டும், இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சேனல் தரப்பினர் தீயாக வேலை செய்து வருகிறார்கள்.

    Advertisement

    ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாய் கலந்து கொண்டால் அவருக்காக ஃபேமிலி ரவுண்டில் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் ஜாய்யின் விளையாட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது கடுப்பு ஏற்றுகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Bigg Boss Tamil season 10: As the grand premiere of Bigg Boss Tamil Season 10 approaches on September 6th, details regarding the participants are being revealed one after another. News has now emerged that Joy Griselda will be participating in the show. Given that she has previously gained fame through controversies, there is considerable anticipation and curiosity about how she will play the game.