பிக் பாஸ்க்குள் அடிதடி.. TTF வாசன் வந்த முதல் நாளே ஜேசன் உடன் சண்டை.. ரெட் கார்டு யாருக்கு?

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக டிடிஎஃப் வாசன் நேற்று தான் வந்தார். வந்த முதல் நாளே இன்று வெளியான ப்ரோமோவில் அடிதடியில் இறங்கி இருக்கிறார். அதற்கு காரணம் ஜேசன் தான். காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜேசன் தனது மனதில் தான் ரகுவரன் என்று நினைத்து விட்டார் போல. எப்போது பார்த்தாலும் சினிமாவில் ரகுவரன் நடித்தது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    பிக் பாஸ் ப்ரோமோ

    அப்படித்தான் இன்று கூட தன்னுடைய பெட் பக்கத்தில் எல்லோரும் செருப்பை அடுக்கி வைத்திருந்ததை பார்த்து கோபப்பட்டு இருக்கிறார். இனி யாருடைய செருப்பாவது இந்த இடத்துக்கு வந்துச்சுன்னா செருப்பு வெளியில பறந்துடும் என்று அவர் மிரட்டுவது போலவே சொல்ல, அதை கேட்டு கடுப்பான அன்ஷிதா கத்திக் கொண்டிருக்கிறார். தன்யாவும் கோபப்படுகிறார்.

    Advertisement

    சண்டை

    நாங்க எல்லாரும் விளையாடிட்டு இருக்கிறோம் அதுக்காக எப்படி இப்படி நீ சொல்லலாம் என்று எல்லோரும் ஜேசனை ரவுண்டு கட்ட, அதற்கு ஜேசன் அதெல்லாம் முடியாது நான் இப்படி தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலில் நார்மலாக பேசிக் கொண்டிருந்த டிடிஎஃப் வாசன் ஒரு கட்டத்தில் கை கலப்பில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அப்போது டிடிஎஃப் வாசனை ஒரு சிலர் பிடித்திருக்கிறார்கள், ஜேசனை சிலர் பிடித்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரச்சனையில் டிடிஎப் வாசன்

    வெளியே தான் டிடிஎப் வாசனுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை, கேஸ் மேல் கேஸ் என்று வந்து கொண்டு இருந்தது என்றால் பிக் பாஸ வீட்டிற்குள் வந்த முதல் நாளே ஒரு புது கேஸ் வாங்க போகிறார். ஆனால் இதில் இவருக்கு சப்போர்ட் கிடைக்கிற மாதிரி தான் இருக்கிறது. சும்மாவே ஜேசன் யார் என்ன சொன்னாலும் அதற்கு ஆப்போசிட்டாகவே பேசுவேன் என்பது போலவே நடந்து கொண்டிருப்பதால் அவர் மீது பலருக்கு கோபம் இருக்கிறது. அந்த கோபத்தை கூட இப்போது அவருக்கு எதிராகவே திருப்பி பேசி வருகிறார்கள்.

    Advertisement

    யாருக்கு ரெட் கார்டு

    ஆனால் இந்த வாரம் ரெட் கார்டு யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஒருவேளை இவர்கள் அடிதடியில் இறங்கி விட்டதால் இன்றே ரெட் கார்டு கொடுத்து அனுப்பி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் இதை வைத்து இந்த வாரம் விஜய் சேதுபதி பஞ்சாயத்தும் பண்ணுவார். எது எப்படியோ டிடிஎஃப் வாசன் வந்த அடுத்த நாளே விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது. இனி இதுபோலத்தான் அடிதடியுடன் போகுமா அல்லது ஜாலியாக நிகழ்ச்சி மாறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Bigg Boss: TTF Vasan entered *Bigg Boss Tamil* Season 10—currently airing on Vijay TV—only yesterday. Yet, in a promo released today, he is already seen getting into a physical altercation. Jason is the reason for this. It seems that after transitioning from the 'Common Man' segment to the main *Bigg Boss* show, Jason has started imagining himself to be the actor Raghuvaran; he constantly speaks and behaves just like the characters Raghuvaran portrayed in movies.