சென்னை: பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவம் என்று சொல்ற மாதிரிதான் டி டி எஃப் வாசன் விளையாட்டு இருக்கிறது. அவர் டைமண்ட்டை திருடி வைத்து இருப்பதை பார்ப்பதற்கு ஏதோ தில்லர் படத்தை பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் இன்றைய எபிசோடில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம் வாசன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது உள்ளிருக்கும் போட்டியாளரான ஹரிஷ்மா வாசனை பர்சனல் அட்டாக் செய்து இருக்கிறார். அதை வைத்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
டிடிஎஃப் வாசனுக்கும் சர்ச்சைக்கும் ரொம்ப நெருக்கம் உண்டு. அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவார் சமீப காலமாக தான் பெரிதாக எந்த பிரச்சனையையும் சிக்காமல் இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே வந்து இவருடைய விளையாட்டு தீயாக இருக்கும் என்று பார்த்தால் முதல் சில நாட்கள் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் உள்ளருக்கும் போட்டியாளர்களுக்கு இவர் மீது என்னதான் பொறாமையோ தெரியவில்லை, உள்ளே வந்த பிறகு இவருக்கு விளையாடவே தெரியவில்லை, எதை சொன்னாலும் புரியாது என்று மட்டம் தட்டிக் கொண்டே இருந்தனர். ஏற்கனவே இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து கடுப்போ என்னவோ. போன வாரம் கூட விஜய் சேதுபதி முன்பு டிடிஎஃப் வாசனை எந்த அளவுக்கு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் வாசன் கிடைக்கிற கேப்பில் விஜய் சேதுபதிக்கும் தக் லைஃப் கொடுத்துக் கொண்டிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரத்தில் டைமண்ட் டாஸ்க் கொண்டு வந்தனர். முதல் நாள் யாரும் அதை தூக்க எந்த முயற்சியும் எடுக்காமல் எல்லோரும் அவர்கள் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் டிடிஎஃப் வாசன் மட்டும் டைமண்ட்டை எங்கே வைக்கலாம்? எப்படி தூக்கலாம்? என்று பக்காவாக பிளான் போட்டு விட்டார். பிறகு டைமண்ட் தூக்கி ஒளித்து வைத்துவிட்டார். அதை தூக்குவதற்கும் அதை ஒளித்து வைப்பதற்கும் அவர் போட்ட எஃபெக்டை பலர் லைவில் உட்கார்ந்து பார்த்து பதறிக் கொண்டிருந்தனர். சினிமாவில் திரில்லர் படம் பார்க்கும்போது ஹீரோ மாட்டி விடக்கூடாது என்று எப்படி நினைப்பார்களோ அதுபோலத்தான் வாசன் மாட்டி விடக்கூடாது என்று பலர் பதறிக் கொண்டிருந்தனர் அதிலும் ஒரு போட்டியாளர் வாசன் டைமண்ட்டை ஒழித்து வைத்திருந்த இடத்தில் பக்கத்தில் போய்விட்டு வந்தார். அந்த சமயம் எல்லாம் பலருக்கு ஹார்ட் பீட் எகிறி இருக்கும். இப்படி இருக்கும் போது, இன்றைய எபிசோடில் ஜெயிலுக்குள் முனியம்மா தண்ணீராக இருக்கிறது அதனால் எனக்கு ஜெயிலை மாற்றி வைங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வாசன் முனியம்மாவுக்கு சப்போர்ட்டாக பேச, அப்போது கரிஷ்மா நீங்க அடிக்கடி உள்ளே போயிட்டு வந்த அனுபவத்துல சொல்றீங்களா? என்று வாசனை பர்சனல் அட்டாக் செய்திருக்கிறார். ஏற்கனவே இவர் வெளியே இருக்கும் போது சில சர்ச்சைகளில் சிக்கி ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார். அதை தான் இப்போது குறிப்பிட்டு கரிஷ்மா இது போல பேசி இருக்கிறார். ஆனால் இதற்காக வாசன் கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதை பற்றி சோகமாகவே பிக் பாஸிடம் புலம்பி ரசிகர்களின் அனுதாபத்தை இன்னும் பெற்றுவிட்டார். அதுபோல அவினாஷ் ஆரம்பத்தில் டைமண்ட் எடுப்பதற்கு வாசனுடன் கூட்டு சேர்ந்து பிளான் போட்டார். ஆனால் கடைசியில் வாசனை மாட்டி விட அஸ்மிதாவிடம் வாசன் தான் டைமண்ட் திருடி பாத்ரூமுக்கு கொண்டு போறான் என்று போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் இவருடைய டபுள் கேம் ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன குறும்படம் போடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.டிடிஎஃப் வாசன் பக்கா பிளான்
பிக் பாஸில் டைமண்ட் திருடி டிஆர்பியை ஏற்றிய TTF வாசன்.. ஆனால், இப்படி ஒரு விஷயம்? ஆப்பு யாருக்கு?
பதட்டத்தில் ரசிகர்கள்
டாஸ்க் புரியலன்னு சொன்னாங்க.. இப்போ டிடிஎஃப் வாசன் செய்த வேலையை பாருங்க! பிக் பாஸ் வீட்டில் அதிரடி!
குறும்படத்திற்கு வெயிட்டிங்