பிக் பாஸ் 10ல் வரும் சர்ச்சை நாயகி.. சின்னத்திரையில் இருந்து சினிமாக்கு வந்தவர்.. சம்பவம் இருக்கு

  • சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும்போது இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெயர் கிடைத்திருக்கிறது. அவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வந்தவர் தான். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே நிகழ்ச்சிகள் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள்? என்ற தேடல் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கும் அதிலும் எந்த முறை நிகழ்ச்சியை பற்றி பேச வைப்பதற்காக பல ஏற்பாடுகளை சேனல் தரப்பினர் செய்திருக்கிறார்கள். அதனாலயே நிகழ்ச்சியில் என்ன மாதிரி டாஸ்க் இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸ் 10 போட்டியாளர்கள்

    ஏற்கனவே 20 போட்டியாளர்கள் பெயர் லீக் ஆகி இருந்தது. அது பற்றி நாம் முந்தைய செய்தியில் பார்த்தோம். இப்போது அதை தொடர்ந்து ஆனந்தி அஜய் பெயரும் வெளியாகி இருக்கிறது. ஆனந்தி அஜய் சின்னத்திரை ரசிகர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் கவனம் பெற்றவர்.

    சின்னத்திரையில் கலக்கல்

    அதற்குப் பிறகு நடிப்போடு டான்ஸ், தொகுப்பாளர் என பல தளங்களிலும் தனது திறமையை நிரூபித்தினார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் டைட்டில் வெற்றதோடு மானாட மயிலாட சீசன் 7 ,ஜோடி நம்பர் 1 சீசன் 7, டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். அதனால் அதாவது கேமரா முன்னால் நிற்ப்பது ஆனந்திக்கு ஒன்றும் புதியது கிடையாது.

    Advertisement

    ஆனால் பிக் பாஸ் என்பது முற்றிலும் வேற மாதிரியான களம். பலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நல்ல பெயர் வாங்கி இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நெகடிவ் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு பயப்படுவார்கள். ஆனால் ஆனந்தி இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆனந்தி ஜனநாயகன் மற்றும் கருப்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருடைய காட்சிகள் கடைசியில் எடிட்டிங்கில் தூக்கி விட்டார்கள்.

    நீக்கப்பட்ட காட்சிகள்

    இது குறித்து அவர் கண்கலங்கி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போதே அவருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வந்தனர். இப்போது அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் அவருக்கு அதிக சப்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் விளையாட்டு ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு வாரம் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் அடுத்த வாரமே பிடிக்காமல் போய்விடுவார்கள்.

    Advertisement

    அதனால் ஆனந்தி இந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடிப்பாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் ஆனந்தி அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English Summary

    Bigg Boss: Bigg Boss Tamil Season 10 is set to premiere on Vijay TV on September 6th at 6 PM. While fans eagerly await the lineup of participants, details regarding the contestants are gradually being revealed. In this context, a new name has now surfaced—an individual who transitioned from the small screen to the big screen. Let us take a closer look at this.