Bigg Boss: சின்ன தப்பு வினையாக மாறிடுச்சு! கதறி அழுத பிளாக் பாண்டி.. பாவம் மனுஷன் உடைஞ்சிட்டாரு!

  • சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனாலே சண்டை வாக்குவாதம், நாமினேஷன், யார் கேப்டன்? என்ற போட்டி என்று ஒரே அமர்க்களமாக தான் இருக்கும். ஆனால் சில நேரங்களில் இந்த வீடு திடீரென அண்ணா... அழாதீங்க அண்ணா.. என்று சென்டிமென்ட் சீரியலாகவும் மாறிவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் நடந்து இருக்கிறது.

    Advertisement

    கடந்த இரண்டு சீசன்களாக சுவாரசியமே இல்லை என்று பிக் பாஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த முறை பாருங்க என்று பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். இந்த சீசனில் போட்டியாளர்களும் ஸ்டராங்காகவே இருக்கிறார்கள். இதில் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது? யாரை ரிஜெக்ட் பண்ணுவது? என்று ரசிகர்களால் யூகிக்க முடியாத அளவிற்கு தான் எல்லா போட்டியாளர்களும் தங்களது திறமையை போட்டி போட்டு காட்டி வருகிறார்கள்.

    Advertisement

    10வது சீசன்

    சின்ன சின்ன இடங்களில் சண்டை போட்டு வந்தாலும் பல இடங்களில் ஜாலியாகவே போட்டியாளர்கள் பாட்டு பாடி, மிமிக்கிரி செய்து, ஆட்டம் போட்டு அமர்க்களப்படுத்துகிறார்கள். ஆனால் தற்போது வெளியாகின ப்ரோமோவில் ஒரு வாரத்திற்கான உணவு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த வாரம் தேவையான உணவுப் பொருள்களை சம்பாதிக்க போட்டியாளர்கள் டாஸ்க் ஜெயிக்க வேண்டும்.

    பிக் பாஸ் ப்ரோமோ

    சாப்பாடு என்ற விஷயமே பிக் பாஸ் வீட்டிற்குள் சின்ன விஷயம் கிடையாது. வெளியே இருந்தால் பிரிட்ஜை திறந்து என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கலாம் ஆனால் இங்கு அப்படி கிடையாது. டாஸ்க் ஜெயித்தால் தான் நல்ல சாப்பாடு கிடைக்கும். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், ஒருவர் ஒரு போர்டில் இந்த வாரத்திற்கு என்ன மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுத வேண்டும். இன்னொருவர் ஸ்கிரீனில் என்னவெல்லாம் பொருட்கள் இருக்கிறதோ அதை படித்து சொல்ல வேண்டும்.

    Advertisement

    கதறி அழுத பாண்டி

    அதில் பாண்டி கொஞ்சம் பதட்டமாகி சில பொருள்களை சொல்லாமல் விட்டு விடுகிறார். குறிப்பிட்ட நேரம் முடிந்து விடுவதால் வீட்டிற்கு தேவையான பொருள்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தான் செய்த தவறால் வீட்டில் இருப்பவர்களும் பட்டினியாக இருக்க வேண்டுமே என்று பாண்டி அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    பாண்டியை ஏற்கனவே கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து அவருடைய வைப் சூப்பராகவே போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அவர் அழுதது பார்க்கும் ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த வாரம் சாப்பாட்டுக்கு போட்டியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    English Summary

    Bigg Boss promo: Life inside the Bigg Boss house is usually a whirlwind of arguments, heated debates, nomination rounds, and the race for captaincy. Yet, at times, the atmosphere suddenly shifts, turning into a sentimental drama filled with emotional pleas like, "Brother... please don't cry, brother." A moment just like that has unfolded in the latest promo.