பிக் பாஸில் செம மாற்றம்.. ஒரே இடத்தில் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன்லால்.. சம்பவம் பெருசு

  • சென்னை: பிக் பாஸ் சீசன் தொடங்கப்போகிறது என்றாலே வீட்டுக்குள் யார் வரப் போகிறார்கள்? என்ன பிரச்சனை நடக்கப்போகிறது? இந்த முறை யார் டைட்டில் வெல்லப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் ஆரம்பித்து விடும். இப்போது அந்த எதிர்பார்ப்பை தாண்டி இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோ.

    Advertisement

    காரணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களையும் ஒரே வீடியோவில் களம் இறக்கி இருக்கிறார்கள். ஒரே பிரேமில் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன்லால் என 4 பெரிய நட்சத்திரங்கள் வருவது சோசியல் மீடியாவில் ஹார்ட் டாபிக்காக மாறி இருக்கிறது.

    Advertisement

    பிக் பாஸ் புதிய ப்ரோமோ

    தமிழில் விஜய் சேதுபதி, தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன்லால் என அந்தந்த மொழி பிக் பாஸ் ரசிகர்களுடன் தனி கனெக்சனை உருவாக்கி இருக்கும் நான்கு தொகுப்பாளர்களும் புதிய ப்ரோமோவில் ஒன்றாக வந்திருக்கிறார்கள். அதுவும் சும்மா வந்து போகிற மாதிரி இல்லை. 4 மாநிலங்களின் கலாச்சார உணவை வைத்து ஜாலியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ப்ரோமோவில் ஒருவருடைய ஊர் உணவை, இன்னொருவர் சாப்பிடும் சூழ்நிலையில் உருவாகும் கலாட்டாவை வைத்து ப்ரோமோவுக்கு ஒரு காமெடி டச் கொடுத்திருக்கிறார்கள்.

    பிக் பாஸ் ஸ்பெஷல்

    இந்த முறை ஸ்பெஷல் என்னவென்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 பிக் பாஸ் சீசன்களும் செப்டம்பர் 6ஆம் தேதி ஒரே நாளில் தொடங்க இருக்கிறது. அதனால்தான் ஒரு பக்கம் தமிழ்நாட்டில் விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்க, இன்னொரு பக்கம் நாகர்ஜுனா, சுதீப், மோகன்லால் ஆகியோர் தங்கள் நிகழ்ச்சிகளில் என்ன மாதிரியான வார இறுதியில் எபிசோடுகளை கொடுக்கப் போகிறார்கள் என்று ஆர்வமும் உருவாகியுள்ளது.

    Advertisement

    பிக் பாஸ் போட்டியாளர்கள்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மட்டும் முக்கியம் கிடையாது. வார இறுதியில் கோஸ்ட் வந்து போட்டியாளர்களிடம் பேசுவது, வீட்டில் நடந்த விஷயங்களை அலசுவது, சில நேரங்களில் பாராட்டுவது, சில நேரங்களில் டோஸ் விடுவது என கோஸ்ட்களும் நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாகிவிட்டார்கள். அதனால் தான் இந்த 4 பேரையும் ஒன்றாக காட்டி இருப்பது ரசிகர்களுக்கு ஒரு அட நம்ம ஹோஸ்ட் எல்லாரும் ஒரே இடத்தில் என்ற பீலை கொடுத்திருக்கிறது.

    தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த சீசன் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். கடந்த இரண்டு சீசன்களாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லை. போட்டியாளர்கள் தேர்வு சரி இல்லை. எல்லோரும் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த முறை தமிழில் பிக் பாஸை மக்களிடம் பேச வைப்பதற்காக அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட்டிரக்கிறதாம்.

    Advertisement

    பிக் பாஸ் நடுவர்கள்

    இந்த முறையும் விஜய் சேதுபதி தொகுப்பாளராக ஆக வந்திருந்தாலும் அவர் தன்னைப் பற்றிய விமர்சனங்களை தெரிந்து கொண்டு மெச்சூர் ஆக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் காப்பாற்றி வருவார்கள். ஆனால் இப்போது அந்த சஸ்பென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    என்னை மன்னித்து விடுங்கள்.. தெரியாமல் பண்ணிவிட்டேன்! பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சைக்கு ராஜு விளக்கம்
    ஏற்கனவே உள்ளே போகும் 4 போட்டியாளர்கள் யார் என்று ஒரு ப்ரோமோ வெளியிட்டு இருந்தார்கள். அதில் விஜய் டிவி பிரபலங்கள் 4 பேரும் முகத்தை ப்ளர் செய்து காட்டி இருக்கிறார்கள். அது குக் வித் கோமாளி பிரபலமான டாலி, பாக்கியலட்சுமி சீரியல் அன்ஷிதா, சின்ன மருமகள் சீரியல் நவீன் குமார் மற்றும் நடிகர் வினோத் பாபு என 4 பேரை காட்டி இருக்கிறார்கள். இன்று மாலை வேளையில் மேலும் சிலரை ரிவில் பண்ண வாய்ப்பிருக்கிறது.

    English Summary

    Bigg Boss: The mere announcement that a new season of Bigg Boss is about to begin sparks anticipation among fans—wondering who will enter the house, what conflicts will unfold, and who will ultimately win the title. Now, a new promo released on JioHotstar has taken that excitement to the next level.