சென்னை: திரையில் கொடூரமான வில்லனாக பார்த்த நடிகர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பாசமாக இருப்பாரா? என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காரணம், 'ஜெயிலர்' படத்தில் வில்லனாக மிரட்டிய விநாயகன், முன்னாள் இந்திய கால்பந்து அணி கேப்டனும் நடிகருமான ஐ.எம். விஜயனின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதுதான்.
நடிகர் ஐஎம் விஜயன் மகன் கல்யாணம்
திருமண மேடையில் மணமக்கள் அருகே சென்ற விநாயகன், முதலில் மணப்பெண்ணின் தலையில் கை வைத்து மனதார ஆசீர்வதிக்கிறார். அதன்பிறகு மாப்பிள்ளையின் தலையில் செல்லமாக தட்டி, சிரித்தபடியே கலாய்க்கிறார். அந்த சில நொடிகள் அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. பின்னர் நண்பர் ஐ.எம். விஜயனையும், அவரது மகனையும் கட்டிப்பிடித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பலருக்கும் ஐ.எம். விஜயன் என்றால் 'பிகில்' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த நடிகர் என்றுதான் ஞாபகம் வரும். ஆனால் சினிமாவுக்கு முன்பே அவர் இந்திய விளையாட்டு உலகில் ஒரு பெரிய சாதனையாளர் என்பது பலருக்குத் தெரியாது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஐ.எம். விஜயன், இந்திய கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவர். 1992 முதல் 2004 வரை இந்திய அணிக்காக விளையாடிய அவர், 72 சர்வதேச போட்டிகளில் 34 கோல்கள் அடித்துள்ளார். 2000 முதல் 2004 வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். மூன்று முறை இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதையும், அர்ஜுனா விருதையும், சமீபத்தில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். கால்பந்து வாழ்க்கைக்குப் பிறகுதான் சினிமாவுக்கு வந்து திமிரு, கொம்பன், கெத்து, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் இந்த திருமணத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் விநாயகன். மலையாள சினிமாவில் பல ஆண்டுகளாக தனித்துவமான நடிகராக இருந்த அவர், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் நடித்த வில்லன் கேரக்டரால் இந்திய அளவில் பிரபலமானார். அந்த படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழிலும், மலையாளத்திலும் தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. திரையில் வில்லன்களாக மோதும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. "ஜெயிலர் வில்லன் நேரில் வந்ததே கல்யாணத்துக்கு செம ஹைலைட்", "திரையில் கொடூரம்... மேடையில் பாசம்", "விஜயன் - விநாயகன் நட்பு ரொம்ப அழகா இருக்கு" என்று ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தாலும், விநாயகன் மணமக்களை ஆசீர்வதித்து, மணமகனுடன் ஜாலியாக சேட்டை செய்த அந்த சில நொடிகள்தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் காட்சியாக மாறியுள்ளது.ஐஎம் விஜயன் ஆரம்ப காலம்
சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து! வீல் சேரில் வந்த விநாயகன்.. மோசமான கமெண்ட்களுக்கு பதிலடி
ஜெயிலர் பட வில்லன்
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்.. இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!