பிக் பாஸில் இருந்து வெளியே வந்த காரணம் இதுதான்! இசையமைப்பாளர் தேவா முன்பு பிளாக் பாண்டி உருக்கம்

  • சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே நடிகர் ப்ளாக் பாண்டி திடீரென வெளியேற்றப்பட்டார். அவருடைய உடல்நிலை சரியில்லை, அதனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே அனுப்பப்படுகிறார் என்று கூறப்பட்டது. அப்போது கூட அவர் கதறி அழுதிருந்தார். இந்த நிலையில் வெளியே வந்து சில வாரங்கள் கழித்து பிளாக் பாண்டி தான் வெளியே வந்தது குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

    Advertisement

    இதுவரைக்கும் இல்லாத வகையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி ஆரம்பமே இருந்தது. தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் எவிக்ஷன் செய்து வெளியே அனுப்பப்பட்டார்கள். அதையெல்லாம் தாண்டி வீட்டிற்குள் வந்தவர் பிளாக் பாண்டி. ஆனால் அவருடைய விளையாட்டு சில நாட்களில் முடிந்து போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய திறமையை காட்டி பிளாக் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விட்டார்.

    Advertisement

    பிக் பாஸ் எவிக்ஷன்

    2 நாட்களிலேயே பழைய பாடல்கள் மற்றும் காமெடியை அடிக்கடி வெளியே காட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் திடீரென ஒரு நாள் அவருக்கு சுகர் அளவுக்கு அதிகமாக இருக்கிறது, மேலும் உடலில் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் வெளியே வந்த பிளாக் பாண்டி சில தினத்திற்கு முன்பு நடித்த திரைப்படங்களின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார்.

    இசையமைப்பாளர் தேவா பாராட்டு

    அப்போது அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவாவும் கலந்து கொண்டார். அவர் பிளாக் பாண்டிக்குள் இப்படி ஒரு திறமை இருக்கும் என்று எனக்கு தெரியவே செய்யாது. அவர் பழைய பாடல்களை பாடிய விதத்தை கேட்டு நானே மெய் மறந்து போனேன். அவர் அவருடைய திறமையை முழுமையாக வெளியே கொண்டு வர வேண்டும் என்று பாராட்டிக் கொண்டிருந்தார்.

    Advertisement
    ஹார்ட் அட்டாக்கில் இறந்த ஆனந்தியின் அப்பா.. பிக் பாஸை விட்டு அனுப்பும்போது கூட இப்படியா பண்ணனும்?

    பிளாக் பாண்டி உருக்கம்

    அதுபோல அந்த நிகழ்ச்சியில் பாண்டி பேசும் போது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தது பலருக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாக எனக்கு கமெண்ட் பண்ணுறாங்க. எனக்கு அதை கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மக்கள் எத்தனை பேர் என் மேல பாசமாக இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு வந்த பிரச்சனை வேறு எதுவும் இல்லை, எனக்கு சுகர். அதனால்தான் நான் வெளியே வந்தேன். ஆனால் இந்த சுகர் பிரச்சனை இப்ப நிறைய பேருக்கு இருக்கிறது.

    Advertisement

    பாண்டியின் அட்வைஸ்

    நான் அந்த நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி கூட அரை கிலோ ஸ்வீட் சாப்பிடுவேன். என்னை மாதிரி யாரும் அலட்சியமாக உடல் நிலையில் இருந்தீங்க. எல்லோரும் உங்களுடைய உடலை சரியாக கவனிச்சுக்கோங்க என்று வேண்டுகோள் வைத்துக்கொண்டார். மேலும் நான் இப்போ ஆரோக்கியமாக இருக்கிறேன், இன்னும் கொஞ்சம் நாட்களில் பழைய நிலைக்கு வந்து விடுவேன் என்றும் சொல்லி இருந்தார். இதனால் இவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறது.

    ஏற்கனவே இந்த வாரம் 2 எவிக்ஷன் நடந்து விட்டதால் பிக் பாஸ் வீட்டில் இப்போது 15 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். இதனால் இந்த வாரம் 2 அல்லது 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    English Summary

    Actor Black Pandi was suddenly evicted from *Bigg Boss Tamil* Season 2 right at the beginning. It was stated that he was being sent out due to unavoidable circumstances regarding his health; he had even wept bitterly at the time. Now, a few weeks after his exit, his comments regarding his departure have gone viral.