சென்னை: நெட்பிளிக்சில் வெளியாகி, ஆக்ஷன் ரசிகர்களிடையே ஒரு 'சர்ப்ரைஸ் ஹிட்' அடித்திருக்கிறது 'பிளாஸ்ட்' திரைப்படம். "கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான், ஆனால் மேக்கிங்கில் 'கைதி' அளவுக்கு ஒரு ரா-வான (Raw) த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார்கள்" என்கிற ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்டுகள் படத்தை உடனடியாகப் பார்க்கத் தூண்டுகின்றன. 'பிளாஸ்ட்' எப்படி இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்!
படத்தின் மையக்கதை என்னவோ நாம் பலமுறை பார்த்துப் பழகிய ஒரு சாதாரண 'சர்வைவல்' அல்லது 'கேட் அண்ட் மவுஸ்' கதைதான். ஆனால், அந்த சாதாரண ஒன்லைனை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் அவர்கள் செய்திருக்கும் மேஜிக்... அதுதான் 'பிளாஸ்ட்' படத்தின் மிகப்பெரிய பலம். லோகேஷ் கனகராஜின் 'கைதி' பட பாணியில் ஒரு 'சீட் எட்ஜ்' த்ரில்லராகப் பயணிக்கிறது படம். அறிமுக இயக்குநர், சுபாஷ் கே ராஜ், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' மற்றும் 'லியோ' ஆகிய திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதை அவரது படைப்பு நிரூபித்துள்ளது. அர்ஜுன் மகள் வேலை பார்க்கும் ஆபீசிலுள்ள, சபல டீம் லீடு, மெடிக்கலில் மிரட்டும் ரவுடி ஆகியோருக்கு கிடைக்கும் ட்ரீட்மென்ட்டின்போது படம் பீக்கிற்கு (Peak) போய் திரும்புகிறது. பக்காவான திரைக்கதை: தேவையற்ற பாடல்கள், காமெடி ட்ராக்குகள் என எதிலும் கவனம் சிதறாமல், எடுத்த கதையை நேர்மையாக, விறுவிறுப்பாகச் சொல்லிய விதத்தில் இயக்குநர் அப்ளாஸ் அள்ளுகிறார். ரவுடிகளின் உலகம்: படத்தில் வரும் ரவுடிகள் ஏதோ சினிமாவுக்காக உருவாக்கப்பட்டவர்கள் போல் இல்லாமல், நிஜ வாழ்வின் இருண்ட பக்கங்களில் இருந்து வந்தவர்களைப் போலவே மிரட்டுகிறார்கள். அவர்களின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. வில்லன்கள் கதாப்பாத்திரத்தை வடிவமைப்பதற்காக ஈவு இரக்கமற்றவர்களாக காட்டுவதற்கு சில சீன்கள் வைக்கப்பட்டுள்ளன. அது படத்தின் டென்ஷனை கைதி அளவுக்கு கூட்ட உதவியுள்ளது. ஆனால், அதுபோன்ற காட்சிகளை மட்டும் குழந்தைகள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. நாயனின் யதார்த்தம்: மாஸ் ஹீரோயிசம் காட்டாமல், சூழ்நிலைக்கு ஏற்ப பயந்தும், துணிந்தும் செயல்படும் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் யதார்த்தமான நடிப்பு படத்திற்குப் பெரிய ப்ளஸ். அர்ஜுன் மகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன், முகத்தில் மட்டுமே அமைதி தவழ்கிறது. ஆபீஸ் டீம் லீடு போலவே இதைப் பார்த்து நீங்களும் ஏமாந்தீர்கள் எனில், கழுத்தை திருப்பிவிடுவார். இதுதான் அவரது கேரக்டரின் பலம். அர்ஜுன் மனைவியாக அபிராமி. 2000த்தில் வெளியான வானவில் படத்தில் இவர்கள் ஜோடியை பார்த்தது, 26 வருடம் கழித்த ஒரு ரீயூனியன், ஆனால் அதை விட சக்சஸ்ஃபுல்லான கம்பேக்.. தொழில்நுட்பக் கலைஞர்களின் சரவெடி: படத்தின் நிஜ ஹீரோக்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான். இருள் சூழ்ந்த பின்னணியில் நடக்கும் சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கேமரா மாயாஜாலம் செய்கிறது. பின்னணி இசை, ஒவ்வொரு ஆக்ஷன் பிளாக்கிலும் அட்ரினலினை எகிற வைக்கிறது. சண்டைக் காட்சிகள் அப்பட்டமான வன்முறையாக இல்லாமல், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரண ஒரு கதையை வைத்துக்கொண்டு, பார்வையாளர்களை அடுத்தடுத்து என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் உட்கார வைப்பது சாதாரண காரியமல்ல. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறது இந்த 'பிளாஸ்ட்'. லாஜிக் மீறல்கள், குறைவான எமோஷன் போன்ற சிறுசிறு குறைகள் இருந்தாலும், திரைக்கதையின் வேகமும் ஆக்ஷன் காட்சிகளின் நேர்த்தியும் அதை மறக்கடிக்கச் செய்துவிடுகின்றன. மொத்தத்தில்: எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஓடிடியில் ஒரு தரமான, ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் த்ரில்லரைப் பார்க்க நினைப்பவர்களுக்கு, இந்த 'பிளாஸ்ட்' நிச்சயம் ஒரு சிறப்பான சாய்ஸ்!அரைத்த மாவுதான்... ஆனால் சுவையான தோசை!
படத்தின் ப்ளஸ்