2002ல சொன்ன 1 கோடியே இன்னும் வரல! 2026ல் மீண்டும் அதே நிலை? லதா ரஜினிகாந்த்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

  • சென்னை: காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் ரஜினிகாந்த் தொடர்பான பழைய வாக்குறுதியும் மீண்டும் கவனம் இருந்து உள்ளது. அதைவிட அந்த விவாகரத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவுதான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    Advertisement

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லதா ரஜினிகாந்திடம், 2002 ஆம் ஆண்டு காவிரி இணைப்பு திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக ரஜினி அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லதா ரஜினிகாந்த் அந்த திட்டம் முழுமையாக தொடங்கும் நேரத்தில் ரஜினி சொன்னதை கண்டிப்பாக செய்வார் என்று நம்பிக்கையாக உடன் கூறினார்.

    Advertisement

    லதா ரஜினிகாந்த் பேட்டி

    இந்த பதில் வெளியானதும் சோசியல் மீடியாவில் இது குறித்த விவாதம் எழுந்துவிட்டது. 2002 ஆம் ஆண்டு அறிவித்த ஒரு 1 ரூபாய் இன்னும் வந்து சேரலையா? தலைவர் அறிக்கை அவ்வளவுதானா? என்று பலரும் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு விட்டனர். 2002 ஆம் வருஷம் இருந்த விலைவாசி நிலவரம் என்ன? ஆனா இப்போ இருக்கிற விலைவாசி என்ன? ஆனால் அதே பணத்தை இப்போது தருகிறேன் என்று லதா ரஜினிகாந்த் சொல்கிறாரே..?

    லதா ரஜினிகாந்த் அறிக்கை

    ரஜினிகாந்தின் சம்பளம் கூட 2002ல் இருந்ததற்க்கும் 2026-க்கும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆனால் ரஜினி சொன்ன சொல் மதிப்பு இவ்வளவுதானா என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நேரத்தில் ப்ளூ சட்டை மாற நானும் வரேன்... வழக்கம் போல தலைவரை கிண்டல் பண்ண போறேன்.. என்பது போல போஸ்ட் போட தொடங்கி விட்டார். அவர் தன்னுடைய பதிவில் "தோ கிலோமீட்டர்" என்று லதா ரஜினிகாந்த் பேச்சை கலாய்த்து இருக்கிறார்.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    அதாவது இன்னும் சில மீட்டரில் பணம் வந்து சேர்ந்துவிடும் என்பது போல அவர் கிண்டல் செய்திருக்கும் நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது. லதா ரஜினிகாந்த் பேசிய இந்த ஒரு விஷயத்தை மட்டும் கலாய்க்கவில்லை, அதே பேட்டியில் லதா ரஜினிகாந்த் கல்வி குறித்தும் பேசியிருந்தார். இந்தியாவில் புதிய கல்வி அணுகுமுறையை உருவாக்க வேண்டும் சமூகநலம் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும், விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடும் வளரும் என்று அவர் சொல்லி இருந்தார்.

    ரசிகர்கள் கருத்து

    இதையும் பிடித்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன் அப்போ குலகல்வியை ஆதரிக்கிறீர்களா? என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். ரஜினிகாந்த் விமர்சிப்பதில் ப்ளூ சட்டை மாறனுக்கு தனி பாணி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ரஜினி நடித்த புதிய படம் வெளியானாலும், அரசியல் கருத்து பேசினாலும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பேட்டி கொடுத்தாலும் உடனடியாக அவர் நையாண்டி கலந்த பதிவு வெளியிடுவது வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

    இதே பணியில் தான் இப்போதும் லதா ரஜினிகாந்தின் பேச்சை அவர் கிண்டல் செய்து இருப்பது ரஜினி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

    English Summary

    Blue Sattai Maran: While the Cauvery-Vaikai-Gundaru link project is again being talked about in political and social media, the old promise related to Rajinikanth is also in focus. More than that, the post released by Blue Sattai Maran about the divorce is currently being shared more on the internet.