விஜய் ஜெயிச்சிட்டாரு... அடுத்து? - தனுஷை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! கஸ்தூரி ராஜா பேச்சால் கிளம்பிய சர்ச்சை


  • சென்னை:தமிழ் சினிமாவில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து எப்போது பேச்சு எழுந்தாலும் அது மிகப்பெரிய விவாதமாக மாறுவது வழக்கம். குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சமீப காலங்களில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிய பிறகு, மற்ற முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிக்கடி அரசியல் விவாதங்களில் இழுக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷின் பெயர் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தனுஷ் அல்ல, அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா பேசிய சில கருத்துகள்தான்.

    Advertisement

    தனுஷ் அப்பா கஸ்தூரிராஜா பேச்சு

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி ராஜாவிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என் மகன்களோ, பேரன்களோகூட அரசியலுக்கு வரலாம்" என்று கூறியிருந்தார். இந்த ஒரு வரியே சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.

    இதோடு அவர் நிற்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் மிகவும் பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம்தான். கலைஞர் வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம்" என்று கூறியிருந்தார். இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது.

    Advertisement

    அரசியலில் தனுஷ்

    கஸ்தூரி ராஜாவின் இந்த கருத்துக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே, "தனுஷுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?", "குடும்பம் ஏதாவது அரசியல் திட்டம் வைத்திருக்கிறதா?" என்ற கேள்விகள் இணையத்தில் பரவத் தொடங்கின. அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லாதபோதும், சமூக வலைதளங்களில் இதுகுறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன.

    திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்... ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    இந்த சூழ்நிலையில்தான் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் இந்த விவகாரத்தில் குதித்தார்.

    Advertisement

    கஸ்தூரி ராஜாவின் பேச்சு தொடர்பான செய்தியை பகிர்ந்த அவர், வழக்கம்போல தனது கிண்டலான பாணியில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், "சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, ருத்திராட்சை கொட்டை, ப்ரோமோ மேடைகளில் பூமர் தத்துவங்கள், அனுதாபம் தேடும் சென்ட்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான். இப்போது விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்றது. வழக்கம்போல ப்ளூ சட்டை மாறனின் ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்க, தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.

    Advertisement

    குறிப்பாக "தனுஷ் எப்போது அரசியலுக்கு வருவதாக சொன்னார்?", "அவரது தந்தை பொதுவாக சொன்ன கருத்தை வைத்து ஏன் தனுஷை தாக்க வேண்டும்?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ரசிகர்கள் கருத்து

    அதே நேரத்தில், ப்ளூ சட்டை மாறனின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சிலரும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் பொது நிகழ்ச்சிகளில் தோன்றும் விதம், அவரது பேச்சு முறை, உடை அணியும் பாணி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தனுஷ் பேச்சு

    குறிப்பாக படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் வெற்றி விழாக்களில் தனுஷ் பேசும் பேச்சுகள் அடிக்கடி வைரலாகும். வாழ்க்கை, வெற்றி, தோல்வி, போராட்டம், உறவுகள் குறித்து அவர் தத்துவார்த்தமாக பேசுவது வழக்கம். பலருக்கு அது ஊக்கமளிக்கும் பேச்சாக தோன்றினாலும், சிலர் அதை "அரசியல்வாதி பாணி பேச்சு" என்று விமர்சித்து வருகிறார்கள்.

    Advertisement

    மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் சிலர் அரசியல் கோணத்தில் பார்க்க தொடங்கியுள்ளனர். இதைத்தான் தனது பதிவில் ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் தனுஷ் தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் வரவில்லை. வழக்கமாக சமூக வலைதள சர்ச்சைகளுக்கு நேரடியாக பதிலளிக்காத தனுஷ், இந்த முறையும் அமைதியாக இருக்கிறார்.

    இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்

    ஆனால் ஒரு சாதாரண மேடை பேச்சாக தொடங்கிய கஸ்தூரி ராஜாவின் கருத்து, அதற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த கிண்டலான பதில், பின்னர் ரசிகர்களுக்குள் வெடித்த விவாதம் என தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

    உண்மையில் கஸ்தூரி ராஜா பொதுவான கருத்தைத்தான் கூறினாரா? அல்லது தனது மகன் குறித்து ஏதாவது சிக்னல் கொடுத்தாரா? என்பது ஒருபுறம் விவாதமாக இருக்க, மறுபுறம் ப்ளூ சட்டை மாறனின் பதிவால் தனுஷின் பெயர் மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    English Summary

    Blue Sattai Maran: Discussions about actors entering politics have once again become a hot topic in Tamil Nadu. This time, actor Dhanush has found himself at the center of speculation following comments made by his father, filmmaker Kasturi Raja, at a recent public event.When asked about politics, Kasturi Raja stated that anyone could enter public life and that even his sons or grandchildren could choose a political path in the future. He also made remarks praising Gopalapuram and its historical political significance, comments that quickly attracted attention online.Although neither Dhanush nor his family announced any political plans, social media users began debating whether the actor might eventually enter politics. The discussion gained further momentum when film critic Blue Sattai Maran shared a sarcastic post on social media.In his post, Maran mocked the growing speculation and suggested that Dhanush had been preparing for politics through his public appearances, speeches, and image. He also sarcastically claimed that after Vijay’s political success, Dhanush might believe that people would make him a Chief Minister as well.The post immediately went viral, attracting thousands of reactions and sparking a fierce debate between supporters and critics. Dhanush fans questioned why the actor was being targeted despite never expressing political ambitions, while others argued that his recent public persona naturally invites political speculation.Over the past few years, Dhanush’s speeches at film events have often focused on life lessons, struggles, success, and perseverance. While many fans view these speeches as inspirational, critics argue that they resemble the style of political leaders addressing the public.His frequent appearance in traditional white shirt and white veshti at public events has also led some observers to interpret his image as politically inspired. Supporters, however, insist that such assumptions are baseless and that Dhanush has never hinted at entering politics.So far, Dhanush has remained silent on the controversy. Known for avoiding direct responses to social media debates, the actor has not reacted to either Kasturi Raja’s comments or Blue Sattai Maran’s remarks.