டெல்லியில் மாணவர்கள் தடியடி.. ஜனநாயகன் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு புள்ளிங்கோஸ்.. ப்ளூ சட்டை மாறன் பதிவு

  • சென்னை: டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டமும் அதில் நடந்த தடியடி சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் அதைப் பற்றி திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை ஜனநாயகன் படம் வெளியாக இருக்கும் நிலையில் தமிழ் ரசிகர்களை புள்ளிங்கோ என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டு இருக்கும் நிலையில் அவரை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் பதிவு

    ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "வடநாட்டு GENZ இளைஞர்கள் நீட்டு தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்குப் போகிறார்கள். தமிழ்நாட்டு புள்ளிங்கோஸ் ஜனநாயகன் படத்தை தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாட தயாராகிறார்கள்.. கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் விவாதமாக பரவியது.

    Advertisement

    Arulvaan Review: அருள்வான் படம் எப்படி இருக்கு? வந்து நொந்த கதையை எடுக்கலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ
    அவர் எதிர்பார்த்தபடி அவர் பேசியதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். நீங்க இப்படி போஸ்ட் போடுறீங்களே இதை தவிர நீட் தேர்வுக்கு எதிராக நீங்க என்ன பண்ணுனீங்க? என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் போராடவில்லை என்று சொல்கிறீர்களே நீங்களும் வீட்டில் உட்கார்ந்து எக்ஸ்ல போஸ்ட் போட்டுட்டு இருக்கீங்களே என்று சிலர் விமர்சித்திருக்கின்றனர்.

    ரசிகர்கள் கேள்வி

    இன்னும் ஒரு சிலர் இதை விட ஒரு படி மேலே சென்று நாளைக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆனதும் அந்த படத்தை நீங்களே தியேட்டர்ல போய் பாத்துட்டு வந்து ரிவ்யூ பண்ண போறீங்க.. அப்படி இருக்கும்போது ரசிகர்களை மட்டும் ஏன் குறை சொல்லிடுங்க இருக்கீங்க என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் இப்போதும் தன்னை டேக் செய்யும் ரசிகர்களுக்கு கிண்டலும் நக்கலும் கலந்த பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த விவாதம் சூடு பிடித்திருக்கிறது.

    Advertisement

    டெல்லியில் நடக்கும் போராட்டம்

    இந்த விவாதத்துக்கு காரணமான டெல்லி சம்பவமும் தற்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகள் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகள், கல்விக் கொள்கை குறித்த கோரிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து மாணவர் அமைப்புகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது தடியடி நடந்ததாகவும், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த சம்பவ வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதுபற்றி மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட சில பிரபலங்களும் மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் டெல்லி போராட்டத்தை விட தமிழ்நாட்டில் ஜனநாயகன் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. நாளை ஜனநாயகன் படம் வெளியாக இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான ரசிகர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    Advertisement

    சோசியல் மீடியா விவாதம்

    டிக்கெட், FDFS கொண்டாட்டம், வசூல் என அதுதான் ட்ரெண்டாக இருக்கிறது. ஆனால் டெல்லியில் எதற்காக போராட்டம் நடக்கிறது? மாணவர்கள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்கள்? என்பதே பலருக்கு தெரியவில்லை என்றும் சிலர் வருத்தத்துடன் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. ப்ளூ சட்டை மாறனின் பதிவு மீண்டும் தீப்பொறி போட்டது போல மாறி ஆதரவு எதிர்ப்பு என சோசியல் மீடியாவில் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

    English Summary

    Blue Sattai Maran: While the students' protest in Delhi and the caning incident that took place in it are being talked about across the country, the post posted by film critic Blue Chattai Maran about it has caused controversy on social media. While the movie 'Jana nayagan' is releasing tomorrow, many people are criticizing the blue-shirted Maran for calling Tamil fans 'pattingo'.