சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது பெறும் சர்ச்சையாகி வரும் நிலையில் ஒரு சிலர் அவருடைய பேச்சுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி பேசிய கருத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ப்ளூ சட்டை மாறன் அவருக்கு ஆதரவாக சப்போர்ட் செய்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடராக இருந்த ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பேசிய பற்றி பேசியது வைரலான நிலையில் அதே நிகழ்ச்சியில், நீங்க ஒரு விஷயத்தை செய்யும் போது உங்களுக்கு கேட்கிறதுக்கு ஒரு ஆள் இல்லாட்டி அவர் எப்படி ஒரு முன்னேற்றமான பாதைக்கு கொண்டு போக முடியும்? தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் இருந்தால் ஆமாம் நான் கெட்டவன் எனக்கு மக்களை கொல்ல உரிமை இருக்குன்னு ஆகிடுமா? 2 சொட்டு கண்ணீருக்கு மயங்கிடுவீங்க? அப்புறம் எதுக்கு கருத்து வைக்கிறீங்க?
பிக் பாஸ் சம்பவம்
அங்க நடக்குற விஷயம் பர்சனல் இல்ல.. ஒரு பொறுப்புல இருந்தீங்கன்னா அதுக்கு மேல ஒரு அழுத்தம் இருக்கும். அதுக்கு கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டியது உங்களோட வேலை. அதுக்கு அழுது சமாளிக்க கூடாது. அழுகிற ஒருத்தனுக்கு ஆதரவாக போக கூடாதுன்னு சொல்லல. ஆனா அது வழியா நீங்க எல்லாம் ஜோக்கரா தெரிவிங்க... என்று ஷாதிகாவுக்கு மட்டுமல்லாமல் அவரிடம் துணிச்சலாக கேள்வி கேட்காத போட்டியாளர்களையும் விஜய் சேதுபதி கடிந்து கொண்டார்.
ஆனால் இந்த விஷயத்தை கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தபோது அவர்கள் குடும்பத்தை நேரில் சென்று பார்க்காமல் சென்னைக்கு வரவழைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய் சேதுபதி என்று ப்ளூ சட்டை மாறன் பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசும்போது லீடர் என்றால் என்ன என்று தெரியாமல்.. லீடர்ஷிப் பற்றி புரியாமல் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு ஜெயித்த பிறகு பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு ஓடக்கூடாது என்று சொல்லி இருந்தார். உடனே விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை போட்டு அடிக்க தொடங்கி விட்டார்கள். இதற்கு இடையே இப்போ ப்ளூ சட்டை மாறனும் வந்து சிக்கி இருக்கிறார். சிலர் ப்ளூ சட்டை மாறன் பதிவு சரி தான் என்று சொல்லி வந்தாலும், வழக்கம் போல அவரை பலர் திட்டியும் வருகிறார்கள்.விஜய் சேதுபதி பேச்சு
ப்ளூ சட்டை மாறன் பதிவு