சட்டசபை இப்போ குப்பையாக இருக்கு.. எல்லாமே ஏமாற்று வேலை தான்! ஆதாரமே இல்லை! போஸ் வெங்கட் ஆதங்கம்

  • சென்னை: கடந்த சில நாட்களாக சட்டசபையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றிய விவாதம் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் நான் சட்டசபையை பார்க்கிறதே இல்லை, காரணம் அது ஒரு குப்பை மாதிரி இருக்கு என்று போஸ் வெங்கட் ஆதங்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் விஜய் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில் இப்போது சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதும் தனது பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    போஸ் வெங்கட் பேச்சு

    நேற்று சட்டசபையில் விஜய் என்ன பேசப்போகிறார் என்று கடந்த இரண்டு நாட்களாகவே தொண்டர்களும், ரசிகர்களும் காத்திருந்தனர். கடைசியில் நேற்று ஒரு மணி நேரமாக திமுக அரசின் பழைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் வாசித்து முடித்து இருந்தார். இதனாலேயே சோசியல் மீடியா முழுக்க சட்டசபை வீடியோக்கள் தான் நிறைந்து இருக்கிறது. இதைப் பற்றி பலரும் அதிருத்தியும், சிலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    விஜய்யின் ஆக்சன்

    ஒரு சிலர் முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பற்றி உருவ கேலி செய்தது தவறு என்று சொல்லி வருகிறார்கள். இதே நேரத்தில் விஜயை ஆரம்பத்திலிருந்து எதிர்த்த போஸ் வெங்கட்டும் தனது கருத்தை கோபமாக வைத்திருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, இப்ப எல்லாம் சட்டசபை பார்க்க வேண்டும் என்று ரசிகர்களும், தொண்டர்களும் சொல்லிட்டு இருக்காங்க. அவங்க எல்லாம் உள்ளே என்ன பேசுறாங்கன்னு பாக்குறதுக்காக ஆசைப்படல. விஜய் என்ன டிரஸ் போட்டுட்டு வராரு என்று தெரிந்து கொள்வதற்காகவே ஆர்வமாக பாக்குறாங்க.

    Advertisement

    சட்டசபை பார்க்க காரணம்

    ஒரு நாள் விஜய் பட்டு சட்டை போட்டுட்டு வந்துட்டா, அண்ணன் பட்டு சட்டை போட்டுட்டு வந்துட்டாரு என்று வைஃப் பண்ணுகிறார்கள். இன்னும் அவரை நடிகராக மட்டும் தான் அவருடைய ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. என்கிட்ட திமுகவுக்கு எதிரான ஆதாரம் இருக்கு என்று முதல்வர் சொல்கிறார் என்றால் அவரிடம் உண்மையில் ஆதாரம் இருந்தால் இதுதான் ஆதாரம் என்று எடுத்துக்காட்ட வேண்டியது தானே? ஆனால் என்கிட்ட ஆதாரம் இருக்கு என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார். அப்பாதானே மக்கள் திமுககாரங்களை எதிரியாக பார்ப்பாங்க. அதுதான் அவருக்கு வேண்டும்.

    Advertisement

    உண்மை இல்லை

    உண்மையில் அவர்கிட்ட எதுவும் கிடையாது. அப்படியே இருந்திருந்தால் அதற்கு சரியான ஆக்சன் எடுக்க வேண்டியதுதானே? என்கிட்ட ஆதாரம் இருக்கு என்று எத்தனை நாட்கள் தான் சொல்லிக் கொண்டு இருப்பாரு. அவர் எப்போதுமே அடுத்தவங்களை குறை சொல்றாரே நான் நல்லவன்னு எப்பவாவது சொல்றாரா? ஏன்னா அவர் நல்லவர் இல்லை. அவர் கிட்ட உண்மை இருந்திருந்தால் அவர் என்கிட்ட இது இருக்கு என்பதை சொல்லி இருப்பார் என்று ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார்.

    சட்டசபை பற்றிய கருத்து

    மேலும் நான் இப்போ எல்லாம் சட்டசபை பார்க்கிறதே கிடையாது. ஆரம்பத்தில் பார்த்தேன். ஆனால் இப்போ அது ஒரு குப்பை மாதிரி இருக்கு. தெருவில் நம்ம நடந்து போயிட்டு இருக்கும்போது குப்பை கிடந்தால் பார்த்து ரசிப்போமா? அதே மாதிரி தான் இப்போ சட்டசபை இருக்கு. நான் பாக்குறது கிடையாது என்று போஸ் வெங்கட் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும் ஒரு சிலர் போஸ் வெங்கட்டுக்கு சப்போர்ட் பண்ணுகின்றனர். இன்னும் ஒரு சிலர் வழக்கம்போல போஸ் வெங்கட்டை திட்டி தீர்த்து வருகின்றனர்.

    English Summary

    Boss Venkat: Discussions regarding the recent events in the Legislative Assembly have been rife on social media. Amidst this, a video of Bose Venkat expressing his frustration—stating that he no longer watches the Assembly proceedings because it resembles "garbage"—has gone viral online. Having voiced his dissatisfaction with Chief Minister Vijay from the very beginning, he has now stated that he also disliked the Chief Minister's recent remarks in the Assembly.