சென்னை: ஒரு காலத்தில் யூடியூப் பார்க்கும் இளைஞர்களிடம் உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யாரு? என்று கேட்டால் ஸ்கூலில் கிளாஸ் எடுத்த டீச்சரை சொல்றாங்களோ இல்லையோ.. பவி டீச்சர் என்ற பெயரை மட்டும் சொல்லிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஆஹா கல்யாணம் வெப் சீரிஸ் மூலம் இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறியவர். பிரிகிடா சாகா.
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு பவி டீச்சருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இப்போது அந்த பவி டீச்சருக்கு தான் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. ஆனால் போட்டோக்களை பார்த்து ரசிகர்களுக்கு நிச்சயதார்த்தத்தை விடவும் மாப்பிள்ளையை பார்த்தது தான் பெரிய ஆச்சரியம். அட இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பலரும் மூளையை கசக்க, கடைசியில் மீசையை முறுக்கு படத்துக்கு போய் நின்றிருக்கிறது விஷயம்.
ஆமாம், மீசைய முறுக்கு படத்தில் சுதாகர் கேரக்டரில் ஆதிக்கு தம்பியாக நடித்த அனந்த் தான் பிரிகிடாவின் காதலர். படத்தில் சில காட்சிகளில் வந்திருந்தாலும் அந்த முகம் ரசிகர்களுக்கு பரீட்சயம்தான். அதனால் நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்ததும் மீசையை முறுக்கு சுதாகரா இது? என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
பிரிகிடாவை பொருத்தவரை அவருடைய சினிமா பயணமே கொஞ்சம் வித்தியாசமானது தான். பெரிய ஹீரோ படம், பிரமாண்ட அறிமுகம் என அவர் வரவில்லை. ஒரு வெப் சீரிஸில் பவி டீச்சராக வந்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதற்கு பிறகு மாஸ்டர் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் துணிச்சலான ஒரு கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்திருந்தார். கருடன் படமும் பிரகிடாவுக்கு இன்னொரு அடையாளத்தை கொடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இப்படியான நேரத்தில் தான் தன்னுடைய காதல் வாழ்க்கையை பிரிகிடா வெளிப்படையாக அறிவித்து ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்திருந்தார். அதுவும் காதலிப்பது ஏற்கனவே சினிமாவில் ரசிகர்கள் பார்த்த நடிகர் அனந்த் என்பது அடுத்த ட்விஸ்ட் தான். தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் பிரிகிடா அனந்த் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதில் இன்னொரு அழகான விஷயம் இதில் இவர்கள் இரண்டு பேருடைய குடும்ப கலாச்சாரங்களுக்கும் மரியாதை கொடுக்கும் இரண்டு முறைபடியும் நிச்சயதார்த்த சடங்குகள் நடைபெற்றிருக்கின்றன. இது பற்றி பிரிகிடா வெளியிட்ட பதிவில், தங்களுடைய வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் இருவரையும் வளர்த்த குடும்பங்களையும், தங்களை இணைத்த காதலையும் கொண்டாடும் வகையில் இரு கலாச்சார முறைப்படியும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறியிருக்கிறார். மேலும் ரசிகர்கள் தனக்கு அனுப்பிய வாழ்த்துக்களை இருவரும் படித்ததாகவும் அந்த அன்பை உணர்ந்ததாகவும் கூறிய பிரிகிடா இங்கிருந்து எங்கள் வாழ்நாள் பந்தம் தொடங்குகிறது என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.நடிகை பிரிகிடா ஆரம்பகாலம்
எங்கேஜ்மென்ட்
பிரிகிடா பதிவு