3 சமையல் ஜாம்பவான்கள்.. சோனி டிவியில் விரைவில் வருகிறது 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்' நிகழ்ச்சி

  • சென்னை: சமையல் நிகழ்ச்சி என்றாலே சமையல் மட்டும் இருந்தால் போதுமா என்ன? அதிலும் சினிமா தொலைக்காட்சி பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கும் போது சமையல் அறைக்குள்ளே ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் காத்திருக்கும். அப்படி ஒரு புதிய சமையல் நிகழ்ச்சி தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    Advertisement

    செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி விரைவில் சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்டமாக சமையலறை தயாராகிவிட்ட நிலையில், இதில் நடுவர்களாக 3 முக்கியமான சமையல் நிபுணர்கள் இறங்குகிறார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை சமையல் பிரியர்களுக்கு பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி செலியா மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா. மூன்று பேருமே சமையலில் வெவ்வேறு விதமான அனுபவம் இருப்பதால் போட்டியாளர்களுக்கு வரபோ்போகும் சவால்களும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    செஃப் வெங்கடேஷ் பட் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவர் தான். சமையல், ரெஸ்டாரண்ட் நடத்துவது என பல வருஷங்களாக அனுபவம் கொண்டவர். குறிப்பாக தமிழ் உணவின் பாரம்பரியம் மற்றும் அதன் தனித்துவமான சுவைகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இந்த நிகழ்ச்சியிலும் தெரியும்.

    வெங்கடேஷ் பட் பேச்சு

    இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது குறித்து பேசி உள்ள வெங்கடேஷ் பட், தமிழ் உணவுகளுக்கு மிகப்பெரிய வரலாறும், தனித்துவமான சுவைகளும் இருக்கிறது. அந்த உணவுகளின் பின்னால் இருக்கும் கதைகளையும் பாரம்பரியத்தையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அடுத்து வருபவர் செஃப் சாஷி செலியா இவருடைய சமையல் பயணமே கொஞ்சம் வித்தியாசமானது. சிங்கப்பூர் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா சமையல் அறைக்குள் போட்டியாளராக நுழைந்தார். அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்று அந்த சீசனின் வெற்றியாளராக மாறினார். அதனால் ஒரு போட்டியாளர் சமையலறைக்குள் இருக்கும்போது அவருக்கு இருக்கும் பதற்றம் எப்படி இருக்கும் என்பது இவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஏ.ஆர் ரஹ்மான் தலைகனம் இல்லாதவர்.. ஆனால் இளையராஜா! வெங்கடேஷ் பட் பேசிய வார்த்தை! வந்தாச்சு பஞ்சாயத்து

    3வது நடுவர்

    3வது நடுவர் ஸ்ரேயா அட்கா. இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பிரெஞ்ச் டோர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணராக இருக்கிறார். உணவு என்பது வெறும் சாப்பாடு மட்டும் கிடையாது, ஒரு நல்ல உணவு மக்களை ஒன்றாக அமர வைக்கும், பேச வைக்கும், அதற்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும் தருணங்களையும் உருவாக்கும் என்று கூறும் ஸ்ரேயா இந்த அனுபவத்தை இந்த நிகழ்ச்சியிலும் கொண்டு வரப் போகிறார்.

    Advertisement

    பத்மஸ்ரீ விருது பற்றி நெகிழ்ந்து பேசிய செஃப் தாமு.. ஆனால் வெங்கடேஷ் பட் இப்படி செய்யலாமா? குவியும் கமெண்ட்ஸ்
    இந்த நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்குகிறார். நடிகை சமந்தா சிறப்பு நடுவராக வருகிறார். பனிஜய் ஏசியா தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரசிகர்கள் பார்த்திறாத வகையில் பிரபலங்கள் சமையலறைக்குள் என்ன செய்கிறார்கள்? என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம். சமையல் தெரிந்தவர்கள் ஒரு பக்கம்.. சும்மா ஆர்வத்தில் ஏப்ரன் மாட்டிக்கொண்டு வருபவர்கள் இன்னொரு பக்கம்.. என்றால் இந்த சமையலறைக்குள் சுவையை விட சுவாரசியம் தான் அதிகமாக இருக்கும் போல.

    English Summary

    Celebrity Master Chef: Is cooking the only thing that matters in a cooking show? Especially when film and television celebrities step in as contestants, the kitchen becomes a hub of excitement and intrigue. One such new cooking show is currently capturing the attention of viewers.