கல்யாணமான பொண்ணுங்க பசங்க கிட்ட பேசினா தப்பா? பிக் பாஸ் சர்ச்சை பற்றி சாந்தினி ஆதங்கம்

  • சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது சக போட்டியாளர்களுடன் பழகுவது கூட சில நேரங்களில் பெரிய விவாதமாக மாறிவிடுகிறது. அதிலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சகஜமாக பேசிக்கொண்டால், அவர்களுடைய நட்புக்குப் பின்னால் வேறு ஏதாவது இருக்கிறதா என்று சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படியொரு விமர்சனங்கள் தான் சாந்தினி தமிழரசன் மற்றும் ஜேசனுக்கு வந்தது.

    Advertisement

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாந்தினி தமிழரசனும் ஜெய்சனும் அடிக்கடி பேசிக்கொள்வதை பார்த்த சிலர், இருவருக்கும் இடையே என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள சாந்தினி, தன்னுடைய தரப்பு நியாயத்தை தெளிவாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    ஜெய்சன் என்னோட பிரதர் மாதிரி

    சாந்தினி தமிழரசன் பேசும்போது, "கல்யாணம் ஆன பொண்ணுங்க பசங்க கிட்ட பேசினாலே தப்பா? ஜெய்சன் என்னோட பிரதர் மாதிரி. அதனால்தான் அவர்கிட்ட பேசினேன். கல்யாணம் ஆன பொண்ணுங்க பசங்க கிட்ட இவ்வளவுதான் பேசணும், இவ்வளவுதான் சிரிக்கணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    மேலும், ஜெய்சனும் திருமணமானவர்தான், அவருடன் பேசுவதை மட்டும் ஏன் தவறாக பார்க்கிறார்கள் என்றும் கேட்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் இந்த விமர்சனங்களை பார்த்ததாகவும், முதலில் தன்னுடைய கணவரிடம் சென்று சாரி கேட்டதாகவும் கூறியிருக்கிறார். ஒரு பொண்ணுக்கு யார்கிட்ட எப்படி பேசணும்னு நல்லா தெரியும். நீங்க யாரும் சொல்ல தேவையில்லை என்று அவர் பேசியிருப்பது இப்போது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    சாந்தினி சினிமா பயணம்

    சாந்தினி தமிழரசன் தமிழில் 'சித்து +2' படத்தின் மூலம் அறிமுகமானார், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், திருமணத்துக்கு பிறகும் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கைகள் குறித்த விவாதம், அவர் வெளியே வந்த பிறகும் தொடர்கிறது.

    பிக் பாஸ் வரலாற்றையே மாற்றிய டிடிஎஃப் வாசன்.. விஜய் சேதுபதியின் தரமான செய்கை.. இது பலருக்கு பாடம்

    ரசிகர்கள் கருத்து

    சாந்தினியின் இந்த விளக்கத்தை பார்த்ததும் ரசிகர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துகள் எழுந்திருக்கின்றன. ஒரு தரப்பினர், "திருமணமான பிறகு ஆண் நண்பர்களிடம் பேசக்கூடாது, சிரித்துப் பழகக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது. ஒருவருடன் பேசுவதையும் பழகுவதையும் வைத்துக்கொண்டு அவர்களுடைய உறவைத் தவறாக பேசுவது சரியல்ல. சாந்தினி சொல்வது போல ஜெய்சனை அவர் சகோதரராக நினைத்து பழகியிருக்கலாம். அதை தவறாக புரிந்துகொள்வது பார்ப்பவர்களின் பிரச்னை" என்று அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    இன்னொரு தரப்பினரோ, "பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது கேமரா முன்னால் நடக்கும் நிகழ்ச்சி. அங்கே போட்டியாளர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பார்த்துத்தான் மக்கள் கருத்து சொல்கிறார்கள். மற்றவர்களுடன் பழகுவதில் தவறு இல்லைதான். ஆனால், ஒருவர் நடந்துகொள்ளும் விதம் பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரியான எண்ணத்தை ஏற்படுத்தினால், அதை பற்றிய விவாதம் வருகிறது. சில இடங்களில் மற்றும் சாந்தினி இருவருமே நாங்க நிகழ்ச்சிக்காக இப்படி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், அதுவும் தவறான கோணத்திலேயே வெளியே காட்டப்பட்டது என்றும் கருத்து கூறி வருகிறார்கள்.

    English Summary

    Chandini Tamilarasan: Inside the Bigg Boss house, even simple interactions with fellow contestants can sometimes escalate into major debates. In particular, if a married man and a married woman converse casually, some people begin to question whether there might be something more to their friendship. Chandini Tamilarasan and Jason faced exactly this kind of criticism.