விஜயால் தான் எங்களுக்கு விடிவு காலம் வரும், என சொன்ன சேரன்.. வம்பு இழுக்கும் நெட்டிசன்கள்

  • சென்னை: இயக்குனரும் நடிகருமான சேரன் பேசிய பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் தமிழக முதல்வர் விஜய் நேரடியாக பாராட்டி பேசி இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் மூலமாகத்தான் எங்களுக்கு விடிவு காலம் வரும் என்று அவர் சொன்னதை சிலர் பாராட்டினாலும் நெட்டிஷன்கள் அதை கிண்டல் செய்து வருகின்றனர்.

    Advertisement

    சேரனின் சமீபத்திய பேட்டி

    அதாவது சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசியிருந்தார் அப்போது, விஜய் மூலமாகத்தான் எங்களுக்கு விடிவு காலம் வரும், திரைப்படத் துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன, இதற்கு முன்னாடி இருந்த ஆட்சிகளில் பல கோரிக்கைகள் வைத்தில் சிலதை மட்டும் தான் நிறைவேற்றினாங்க. ஒவ்வொரு நாளும் சூட்டிங்க்கில் என்ன பிரச்சனை நடக்குதுன்னு தெரிஞ்ச ஒருத்தர் இப்ப முதலமைச்சராக இருக்காரு.. எங்களுக்கு இந்த காலம் தான் சரியான காலம் என்று பேசி இருக்கிறார்.

    Advertisement

    விஜய்யை விமர்சித்த சேரன்

    இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை விடவும் அதற்கு கீழே வரும் கருத்துகள் தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் சேரன் பேசியதை இப்போது சிலர் நினைவு படுத்தி வருகிறார்கள். அதாவது விஜய் பற்றி சேரன் பல போஸ்ட்டுகள் வெளியிட்டிருக்கிறார்.

    அப்போது ஒரு போஸ்டில் கூட ஒரு நடிகராக இருப்பதும் ஒரு மாநிலத்தை ஆள்வதும் வேறு விஷயம், பல தசாப்தங்களாக மக்களோடு களத்தில் பணியாற்றிய அரசியல் கட்சிகளின் அனுபவத்துடன் ஒப்பிடும்போது விஜய் தனது அரசியல் திட்டங்களை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தார்.

    Advertisement

    விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சேரன்

    அதுபோல சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விஜய்யின் பொது கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் கூடுவதை பார்த்து கூட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் ஒரு தலைவருக்கு மக்கள் ஆதரவும் கரிஷ்மாவும் மட்டும் போதாது, தெளிவான கொள்கை நிர்வாக திட்டம் தொகுதிவாரியான செயல்திட்டம், மக்களோடு நீண்ட கால பயணம் ஆகியவை அவசியம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்ததும் சேரன் வெளியிட்ட பதிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த பதிவில் தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன். முதல் தேர்தலிலேயே மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் வீசும் சுதந்திர காற்று எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜய்யை வாழ்த்தி இருந்தார்.

    Advertisement

    ரசிகர்கள் விமர்சனம்

    அந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் பெரியதாக விவாதத்தை ஏற்படுத்தியது. அதுபோல விஜய் ஆட்சி அமைத்த பிறகு பல விமர்சனங்களையும் சந்தித்திருந்தார். அப்போது கூட அவருக்கு ஆறு மாதம் டைம் கொடுங்க, அதற்கு பிறகு தானே அவர்கள் எதையும் மாற்ற முடியும் என்றும் அவருக்கு சப்போட்டாக போஸ்ட்டுகள் போட்டு வந்தார். இப்போது விஜயால் தான் சினிமா துறையில் இருக்கும் கஷ்டமெல்லாம் போகப் போகிறது என்று அவர் சொன்னதை வைத்து பலர் விமர்சித்து வருகிறார்கள்.

    English Summary

    Cheran: Director and actor Cheran's interview is going viral on social media. Tamil Nadu Chief Minister Vijay's direct praise in that interview has attracted the attention of many. Netizens are making fun of Vijay's statement that we will get a break through Vijay at a program held in Chennai.