உதயநிதி சர்ச்சை பேச்சுக்கு சின்மயி ஆவேச பதிவு.. உங்க டார்கெட் பெண்கள் தானா? கொந்தளித்த பாடகி

  • சென்னை: உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை பேச்சு இன்னும் தமிழக அரசியல் மற்றும் சினிமா அவதாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாடகி சின்மயி வெளியிட்ட நீண்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வழக்கம்போல ஒரு வரியில் கருத்து சொல்லாமல் இந்த முறை பெண்கள் அரசியலில் எப்படி தேவையில்லாமல் இழுக்கப்படுகிறார்கள் என்பதையே மையமாக வைத்து அவர் தனது ஆதங்கத்தை கூறி இருக்கிறார்.

    Advertisement

    சின்மயின் பதிவில், அரசியலில் இருக்கும் ஆண்கள் பெண்களை தேவையில்லாமல் இழுத்து பேசுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு உண்மையில் தேவையான பிரச்சனைகள் பற்றி மட்டும் பேச ஆரம்பித்தால் அது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்து பேசுவது புதிதல்ல, இது போன்ற பேச்சுகளை பேசுபவர்களை சுற்றி இருந்தவர்களே ஊக்கப்படுத்தியதால் தான் அவர்கள் தொடர்ந்து அதே மாதிரி பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பலமுறைக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    பாடகி சின்மயி பதிவு

    மேலும் அந்த பதிவில், முதலில் அந்த பேச்சின் உள் அர்த்தம் என்னவென்றே எனக்கு புரியவில்லை. எனக்கு தெரிந்த ஒருவர் பிறகுதான் அதற்கு வேறு அர்த்தம் இருப்பதாக விளக்கினார். நான் முதலில் அது தண்ணீர் கனெக்சன் பற்றிய பேச்சு என்று நினைத்தேன். என்னை போல நிறைய பெண்களுக்கும் அந்த மறைமுக அர்த்தம் புரியவில்லை. அது ஆண்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒரு விஷயமாக இருந்திருக்கலாம்.

    அந்த நேரத்தில் மேடையில் இருந்தவர் அமைதியாக இருங்கள், இப்படி பேசாதீர்கள் என்று கூட்டத்தினரை அடக்கி இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அதைவிட மோசமாக எடுத்துக் கொள்ளப்படும் வகையில் பேசி விட்டார். அதுதான் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. நாம் அதை தவறாக புரிந்து கொண்டோம், நம்முடைய எண்ணம் தான் தவறு என்று சொல்லிவிடுவது மிகவும் எளிது. ஆனால் அரசியல் மேடைகளில் பெண்களை பற்றி இழிவாக பேசப்பட்ட சம்பவங்கள் தமிழ்நாட்டில் புதிது அல்ல. கடந்த காலங்களில் பெண்கள் குறித்து பேசப்பட்ட பல வீடியோக்கள் இன்றும் சோசியல் மீடியாவில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

    Advertisement

    இப்போதும் அதே நிலை

    முந்தைய தலைமுறையில் நடந்த தவறுகளை இன்று மீண்டும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. புதிய தலைமுறை அரசியல்வாதிகள், அதைவிட நாகரிகமாக இருப்பார்கள் என்று தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக நடப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த விவாகரத்தில் பெண்கள் இன்னும் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். கோபத்தோடு, ஒற்றுமையுடன் பேச வேண்டிய நேரம் இது என்று தனது கருத்தை அவர் அதில் பதிவில் கூறி இருக்கிறார்.

    ரசிகர்கள் கருத்து

    ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சின்மயி பதிவிற்கும் பலர் சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். அரசியலாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதில் தேவை இல்லாமல் பெண்களை தொடர்பு படுத்தி இதுபோல பேசக்கூடாது என்று சிலர் சொல்லி வருகின்றனர்.

    English Summary

    Udhayanidhi Stalin: While the controversy that is spreading about Udayanidhi Stalin's speech is still creating a stir in Tamil Nadu politics and cinema avatars, a long post posted by singer Chinmayi is currently being shared a lot on social media. Instead of commenting on a single line as usual, this time she is expressing her concern by focusing on how women are unnecessarily dragged into politics.