டோரதி பார்த்துவிட்டு சின்மயி போட்ட பதிவு.. மொத ராத்திரி இயக்குனர் கொடுத்த பதில்

  • சென்னை: சமீபத்தில் வெளியான 2 வித்தியாசமான தமிழ் படங்கள் குறித்து பாடகி சின்மயி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி. இன்னொன்று ராஜா கருப்பசாமி இயக்கிய மொத ராத்திரி. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத கதைக்களம் கொண்டவை. ஆனால் இரண்டையும் பார்த்துவிட்டு சின்மயி பாராட்டியிருப்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    Advertisement

    பாடகி சின்மயி பதிவு

    முதலில் "மொத ராத்திரி" பற்றி , அது வெறுமனே "நல்ல படம்" என்று ஒரு வரியில் முடித்துவிடுகிற பாராட்டு கிடையாது. தனது சமூக வலைதளப் பதிவில், "GO WATCH THIS AMAAAAAZING FILM"
    என்று படத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார் சின்மயி. அதோடு படம் குறித்து விமர்சனம் தேடுபவர்கள், சுதீர் ஸ்ரீனிவாசனின் பக்கத்தைப் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகுதான் ராஜா கருப்பசாமியை குறிப்பிட்டு ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். "Loved everything that Raja Karuppasamy has done here."

    Advertisement

    ராஜா கருப்பசாமி பதில்

    அதாவது, இந்தப் படத்தில் இயக்குநர் ராஜா கருப்பசாமி செய்திருக்கும் விஷயங்கள் அனைத்துமே தனக்கு பிடித்திருப்பதாக சின்மயி நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இந்த பதிவை பார்த்ததும் ராஜா கருப்பசாமி நன்றி மேடம் என்று சொல்லி இருக்கிறார். ஊரில் யார் மீம்ஸ், ஸ்டோரி போட்டாலும் பதில் சொல்லும் ராஜா கருப்பசாமி சின்மயிக்கு பதில் சொல்லாமல் இருப்பாரா? அவருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தூத்துக்குடி பையன்.. மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமி யார் தெரியுமா?
    Advertisement

    டோரதி படத்துக்கு பாராட்டு

    அதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் "டோரதி", திருநங்கைகளின் வாழ்க்கை, அவர்களைச் சுற்றியுள்ள சமூகப் பார்வை, ஏற்றுக்கொள்ளுதல் போன்ற விஷயங்களை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறது. படம் வெளியானதில் இருந்து அதைப் பற்றி பலவிதமான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ், கதாபாத்திரங்களின் உறவு, இறுதியில் வரும் முத்தக்காட்சி என சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகின்றன. இந்த நிலையில்தான் சின்மயி "டோரதி"யையும் பாராட்டியிருக்கிறார்.

    ஆனால் சின்மயியின் பதிவை விட, அந்தப் பதிவுக்கு கீழே வந்த ஒரு கருத்தும் அதற்கு சின்மயி கொடுத்த பதிலும்தான் இப்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது. டோரதி படத்தின் மையக்கருத்தை விமர்சிப்பது வேறு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியே இழிவாக பேசுவது வேறு என்பதை சின்மயி தனது பதிலில் சொல்லியிருக்கிறார். ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக விமர்சிக்கலாம். கதையே பிடிக்கவில்லை என்றாலும் சொல்லலாம். கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்றாலும் சொல்லலாம்.

    Advertisement
    கோவை குண்டு வெடிப்பு சம்பவம்.. சர்ச்சையாக பேசிய இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்.. ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்

    வித்தியாசமான பார்வை

    ஆனால் படத்தில் பேசப்படும் மனிதர்களையே வைத்து கேலி செய்வது அல்லது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை சொல்வது சரியா? என்பதுதான் சின்மயியின் பதிலில் எழும் கேள்வி. இங்கேதான் "டோரதி", "மொத ராத்திரி" 2 படங்களையும் சேர்த்து பார்க்கும்போது சின்மயியின் பார்வை சுவாரஸ்யமாக இருக்கிறது. "மொத ராத்திரி" ஒரு கிராமத்து பின்னணியில் காதல், திருமணம், உறவுகள் என்று மிகவும் நமக்கு அருகில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது.

    டோரதி அதைவிட வேறொரு தளத்தில் போய், சமூகத்தில் பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை மையமாக்குகிறது. ஆனால் 2 படங்களிலும் சின்மயி பார்த்திருப்பது என்னவோ மனிதர்களைத்தான். சின்மயியின் இந்த 2 பதிவுகளும் இப்போது கவனம் பெறுகின்றன.

    English Summary

    Chinmayi: Singer Chinmayi has shared her thoughts on two recently released, distinct Tamil films: *Dorathi*, directed by Karthik Subbaraj, and *Modha Rathiri*, directed by Raja Karuppasamy. Although the two films feature completely unrelated storylines, the fact that Chinmayi has praised both of them is what draws attention.