CM விஜய்யுடன் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றும் மகன்! ஆனால் அப்போது , நெகிழ்ந்த சின்னி ஜெயந்த்


  • சென்னை: வாழ்க்கை சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை முடித்துக் காட்டும். அதுபோலத்தான் ஒரு காலத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்த நடிகர் சின்னி ஜெயந்த் இன்று அதே விஜய் தமிழக முதல்வராக இருக்கும் நிலையில் தனது மகன் அவருடன் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றுவதை பார்த்து பெருமையாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    சமீபத்தில் நடந்த ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் விருது பெற்ற சிகிச்சை சின்னி ஜெயந்த் தன்னுடைய மகன் மற்றும் முதல்வர் விஜய் பற்றி பெருமையாக பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது அவர், பல வருடங்களுக்கு முன்பு நான் மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய் சாருடன் நடித்தேன். ஆனால் இப்போது அவர் தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார் அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் என்று கூறினார்.

    Advertisement

    நடிகர் சின்னி ஜெயந்த் பேச்சு

    அதன் பிறகு தனது மகனைப் பற்றி பேசும் போது, என்னுடைய மகன் ஐஏஎஸ் அதிகாரியாக விஜய் சாருடன் பணியாற்றுகிறார். விஜய் சாரின் ரூமில் இருந்து ஐந்தாவது ரூம் என்னுடைய மகனுக்கு தான் கொடுத்து இருக்காங்க. நான் சினிமாவில் விஜய் சாரோட வேலை பார்த்திருக்கிறேன். இப்போது என் மகன் அவருடன் அரசு பணியில் வேலை பார்க்கிறார். இதை விட ஒரு அப்பாவுக்கு என்ன பெருமை வேண்டும் என்று எமோஷனலாக பேசினார்.

    நடிகரின் ஆசை

    மேலும் சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களின் பிள்ளைகள் இப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேர் அரசு பணிக்கு வரணும் அதை பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றும் சொல்லியிருக்கிறார். சின்னி ஜெயந்த் என்று சொன்னதும் தமிழில் சினிமா ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது அவருடைய தனித்துவமான காமெடி தான்.

    Advertisement
    ஏழை குடிசையில் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்.. நரிக்குறவர்கள் கொடுத்த பரிசு.. வியக்க வைத்த எளிமை

    நடிகர் சிம்மி ஜெயந்த் ஆரம்பகாலம்

    அவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி நாராயணன். 1984ல் சினிமாவில் அறிமுகமான அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித், முரளி உட்பட கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட முரளியின் மகன் அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் மிமிக்ரி கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்று பல துறைகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.

    Advertisement

    பிரமாண்டமாக நடந்த நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருமணம்.. கலந்து கொண்ட பிரபலங்கள்.. மணப்பெண் இவர்தானா?
    தமிழக அரசின் கலைவாணி விருதையும் பெற்றிருக்கிறார். அவர் ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் அவர்களின் மூத்த மகன் ஸ்ருதன்ஜய் நாராயணன் (Sruthanjay Narayanan) தேர்வு செய்யாமல் படிப்பிலேயே தன்னுடைய கவனத்தை வைத்து வெற்றியும் கண்டிருக்கிறார். இதிலும் குறிப்பாக இன்னொரு விஷயம் என்னவென்றால் தன்னுடைய படிப்புக்காக தந்தையிடம் பணம் கேட்காமல் வேலை செய்து தன்னுடைய செலவுகளை சமாளித்ததாகவும் ஏற்கனவே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

    ஐஏஎஸ் அதிகாரியான பிறகு தூத்துக்குடியில் பயிற்சி அதிகாரியாகவும், திருப்பூரில் சப் கலெக்டராகவோ பின்னர் பல முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும் பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். இப்போது தன்னுடைய மகன் படிப்பால் செய்த சாதனை குறித்து சின்னி ஜெயந்த் பெருமையாக பேச பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Chinni Jayanth: Life sometimes throws up things that no one expects. Similarly, actor Chinni Jayant, who once acted in a film with actor Vijay, is proud to see his son working with him as an IAS officer when the same Vijay is the Chief Minister of Tamil Nadu.