பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் மரணம்.. தேசிய விருது பெற்ற இவருக்கா இந்த நிலைமை? இயக்குனர் வசந்தபாலன் உருக்கம்


  • சென்னை: தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்தத்துறை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து பாக்யராஜும் அடுத்த சில வாரங்களில் இறந்துவிட்டார். இந்த சோகம் அடங்குவதற்குள் இப்போது தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியனின் (cinematographer Chezhiyan) மறைவு திரை துறையை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    Advertisement

    ஒளிப்பதிவாளர் செழியன் ஆரம்பகாலம்

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியனுக்கு சின்ன வயதிலிருந்து புகைப்பட கலையில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே அவர் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்திருக்கிறார். ஒளிப்பதிவின் ஜாம்பவான் பி சி எஸ் ஸ்ரீ ராமரிடம் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

    Advertisement

    ஒரு சில திரைப்படங்களில் ஒளிப்பதிவு காட்சிகளை பார்த்ததுமே இது யாராக இருக்கும் என்று யோசிக்கத் தோன்றும். அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான மற்றும் மக்களுடன் எளிதாக கனெக்டாகுற மாதிரி ஒரு தனி அடையாளத்தை செழியன் உருவாக்கி இருந்தார். அதிலும் 2007 ஆம் ஆண்டு வெளியான கல்லூரி படத்தின் மூலமாகத்தான் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

    ஒளிப்பதிவாளர் செழியன் திரைப்படங்கள்

    அதற்கு பிறகு ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல தரமான படங்களுக்கு தனது கேமரா மொழியால் உயிர் கொடுத்தார். இயற்கை ஒளியை அழகாக பயன்படுத்தி இவருடைய காட்சி அமைப்பு பலருடைய மனதை கவர்ந்தது. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.

    Advertisement
    கொஞ்சம் டைம் கொடுங்க! இப்போதைக்கு வேண்டாம்.. CM விஜய் மீதான விமர்சனத்திற்கு இயக்குனர் சேரன் விளக்கம்

    இயக்குனராகவும் வெற்றி

    செழியன் 2017 இல் வெளியான டூ லைட் திரைப்படத்தை இயக்கி அதற்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார். அந்த படம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த படமாக செலக்ட் ஆகி உலக அளவில் கவனம் பெற்றது. சினிமா மீது அவருக்கு இருந்த காதலை பற்றி ஒரு பேட்டியில் பேசும்போது, நான் என்னுடைய காதலை விரும்பி தேர்ந்தெடுத்து இப்போது நான் ரசித்து ஈடுபடக்கூடிய ஒன்றாகவே ஒளிப்பதிவு இருக்கிறது என்று சொல்லி இருந்தார்.

    Advertisement

    ஒளிப்பதிவாளர் செழியன் இறப்பு

    அதோடு உலக சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் புத்தகமாகவும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை தரமணியில் உள்ள புற்றுநோய் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த செழியன் இன்று ஜூலை 10ஆம் தேதி காலை உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தி வெளியானதும் திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    அய்யனார் துணை சீரியலில் இனி கதை இதுதான்.. 4 மருமகள்கள் வந்ததும் நடக்கும் ஆட்டம்.. இயக்குனர் உடைத்த ரகசியம்
    Advertisement

    இயக்குனர் வசந்தபாலன் பதிவு

    செழியன் இறப்பு குறித்து வசந்தபாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "ஒளிப்பதிவாளர் செழியன் மரண செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. ஏன் செழியன்? என்ன செழியன்? ஏன் இப்படி? ஏன் இத்தனை சீக்கிரம்? என்ன அவசரமோ புரியல.." என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    English Summary

    Chezhiyan: Sudden death of cinematographer Chezhiyan It was in this condition that Chezhiyan who was undergoing treatment at the Cancer Hospital in Taramani, Chennai, died today on the morning of July 10th. After this news was released, many people from the screen world and fans are recording their sorrows. Vasanthapalan has expressed his pain on his Facebook page, "The news of the death of cameraman Chezhiyan is shocking. Why Chezhiyan? What is Chezhiyan? Why like this? Why so soon? I don't understand what is the rush.."