சட்டசபையில் முதல்வர் விஜய் பேசிய ரிப்பீட்” வார்த்தை.. வடிவேலு வீடியோவை போட்டு கலாய்த்த சாட்டை துரைமுருகன்


  • சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசிய உரை அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தமிழக வெற்றிக் கழக அரசு என்னென்ன செய்துள்ளது என்பதை பட்டியலிட்டு சட்டசபையில் விஜய் பதிலளித்த நிலையில், அந்த பேச்சின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிடித்துக்கொண்டு தற்போது சமூக வலைதளங்களில் புதிய கலாய்ப்பு கிளம்பியுள்ளது. அதற்குக் காரணம், யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள பதிவு தான்.

    Advertisement

    சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு

    சட்டசபையில் பேசிய விஜய், "நம்மை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள்... நம்முடைய அரசியல் பயணம் சாதாரண நடிகராகத்தான் தொடங்கியது..." என்று பல இடங்களில் "நாம்", "நம்முடைய" என்ற வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி பேசினார். வழக்கமாக அரசியல் மேடைகளில் தலைவர்கள் "நான்" என்பதற்குப் பதிலாக "நாம்" என்ற வார்த்தையை பயன்படுத்துவது புதிய விஷயம் அல்ல. ஆனால் விஜய் பேச்சில் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் வந்தது சிலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

    Advertisement

    சாட்டை துரைமுருகன் கலாய்

    அதைத்தான் சாட்டை துரைமுருகன் இப்போது மீம் ஆக்கியிருக்கிறார். அவர் பகிர்ந்திருக்கும் பதிவில், வடிவேலு நடித்த ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த காட்சியில், வடிவேலு ஒரு போலீஸ் அதிகாரி முன் நின்று "நாங்க ரொம்ப மோசமானவங்க... நாங்க படிச்சதே பாளையங்கோட்டை ஜெயில்ல... நாங்க யாரு தெரியுமா?" என்று பில்ட்அப் கொடுப்பார். அதற்கு எதிரே நிற்கும் அதிகாரி, "அந்த நாங்க... நாங்கன்னு பேசுறியே... அந்த நாங்க யாரு?" என்று கேட்பார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த இந்த வடிவேலு காமெடி சீனைத் தான் தற்போதைய அரசியல் சூழலோடு இணைத்து சாட்டை துரைமுருகன் பகிர்ந்திருக்கிறார்.

    Advertisement

    வடிவேலு வீடியோ

    அந்த மீம் வீடியோவுக்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் இப்போது இன்னும் அதிகமாக வைரலாகி வருகிறது. அதாவது, "நாம நீங்க எத்தனை பேரு?" என்ற ஒற்றை வரியிலேயே விஜய்யின் சட்டசபை பேச்சை அவர் கலாய்த்துள்ளார். நேரடியாக பெயர் சொல்லாமல், விஜய் தொடர்ந்து "நாம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதையே குறிவைத்து இந்த பதிவு போடப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

    60 வருஷமா பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க.. விஜய் ஏன் அமைதியா இருக்கிறார்?விமர்சனத்துக்கு SAC அதிரடி

    இது சாதாரண மீம் போஸ்டாக இல்லாமல், சட்டசபையில் விஜய் பேசிய அரசியல் பாணியையே சுட்டிக்காட்டும் கலாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த முறை சட்டசபையில் விஜய் பேசிய உரையில் அதிகமாக "நாம் செய்தோம்", "நாம் ஆட்சிக்கு வந்தோம்", "நாம் மாற்றிக்காட்டுவோம்" என்ற கூட்டுப் பொறுப்பு மொழியில் இருந்தது. அதையே சாட்டை துரைமுருகன் வடிவேலு காமெடியுடன் இணைத்ததால், அந்த பதிவு சில மணி நேரங்களிலேயே வேகமாக பரவத் தொடங்கியது.

    Advertisement

    நெட்டிசன்களின் ரியாக்ஷன்

    சமூக வலைதளங்களில் இதற்கு கலவையான ரியாக்ஷன்களும் குவிந்து வருகின்றன. சிலர், "விஜய் 'நான்' என்று சொல்லாமல் 'நாம்' என்று பேசுவது அரசியல் மெச்சூரிட்டி" என்று ஆதரிக்க, இன்னொரு பக்கம் "அந்த 'நாம்' யாரை குறிக்கிறது? கட்சியா, அமைச்சரையா, மக்களா?" என்று கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் சாட்டை துரைமுருகனின் இந்த மீமை பார்த்து, "வடிவேலு டெம்ப்ளேட்டுக்கு சரியான அரசியல் டைமிங் கிடைச்சிருக்கு", "சட்டசபை உரையைவிட இந்த மீம் தான் இப்போ அதிகம் ஓடுது" என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    Advertisement

    மொத்தத்தில், சட்டசபையில் ஆட்சியின் 40 நாள் செயல்பாடுகளை விளக்கிய முதல்வர் விஜய் பேச்சு அரசியல் அரங்கில் விவாதமாக ஓடிக்கொண்டிருக்க, அதே பேச்சிலிருந்து "நாம்" என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு வடிவேலு மீம்ஸால் சாட்டை துரைமுருகன் கலாய்த்திருப்பது தற்போது இணையத்தில் தனி ட்ரெண்டாக மாறியுள்ளது. "விஜய்யின் பேச்சு வைரலா? சாட்டை துரைமுருகன் மீமா?" என்ற நிலைமையே இப்போது சமூக வலைதளங்களில் உருவாகி இருக்கிறது.

    English Summary

    CM Vijay : Tamil Nadu Chief Minister Joseph Vijay’s recent speech in the Assembly has become a talking point not just in political circles but also across social media. While Vijay used the session to list out what the Tamilaga Vetri Kazhagam government had achieved in its first 40 days in power, one particular aspect of his speech has now become the subject of online trolling — his repeated use of the word “Naam” (we/our).