இப்போ உறவுகள் மதிப்பு குறையுது.. பணத்திற்கு தான் மவுசு அதிகமாகுது! CM விஜய்யின் மகன் ஜோசன் உருக்கம்

  • சென்னை: முதல்வர் ஜோசப் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜோசன் சஞ்சய் பொதுவாக அதிகமாக பேச மாட்டார். ஆனால் சமீபத்திய பேட்டியில் அவர் சொன்ன ஒருவரி தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்போது பணத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் உறவுகளின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அது சோசியல் மீடியாவில் பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.

    Advertisement

    பொதுவாக சினிமா வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகும் காலத்தில் ஜோசன் சஞ்சய் மட்டும் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஃபரியா அப்துல்லா, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிக்மா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

    Advertisement

    இயக்குனர் ஜோசன் சஞ்சன் பேட்டி

    இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையின் முடிவுகள் குறித்து பேசிய ஜோசன் என்னுடைய குடும்பத்தில் எல்லோரும் சினிமாவில் இருந்தாலும் என்னை எதற்கும் கட்டாயப்படுத்தியது இலலை. நான் இயக்குனராக போக வேண்டும் என்று சொன்னபோது உன்னால் முடியும் நீ செய் என்று என்னுடைய பெற்றோர்களும் குடும்பத்தினரும் முழு ஆதரவு கொடுத்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

    அதுபோல அல்போன்ஸ் புத்திரன் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க கூப்பிட்ட போது அந்த வாய்ப்பை எதற்காக வேண்டான்னு சொல்லிட்டீங்க என்று கேட்ட கேள்விக்கும் அவர் ஓபனாகவே பேசி இருக்கிறார். அதில், அப்போது ஹீரோவாக வேண்டும் என்று ஆசை எனக்கு இல்லை. முதலில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதிலும் அவர் என்னிடம் பட வாய்ப்பு வந்தபோது எனக்கு 20 வயது தான்.

    Advertisement

    விஜய் மகன் உருக்கம்

    அப்போது அவர் என்னிடம் ஒரு காதல் ரிலேட்டடான படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னாரு. அது எனக்கு அந்த சமயத்தில் சரியாக வருமானு தெரியல. அதனாலதான் உங்களுக்கு வேற ஒரு நல்ல ஹீரோ கிடைப்பார் என்று சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார். மேலும் அவர் பேசும்போது, நான் சினிமா குடும்ப பின்னணியில் வளர்ந்ததால் எனக்குள்ளும் சினிமா இருந்தது.

    அப்பாவை ஃபாலோ பண்ணுறாரா ஜேசன் சஞ்சய்? அரசியலா... சினிமாவா? ஒரே போட்டோவால் கிளம்பிய விவாதம்!
    நிறைய உலக படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது அந்த பட கதைகளை பற்றி என்னுடைய நண்பர்களுடன் விவாதிப்பேன். இப்படித்தான் எனக்குள் ஒரு கதை சொல்லி உருவானான். அதற்குப் பிறகு கனடாவில் சினிமா மேக்கிங் கோர்ஸ் படிச்சேன். படிக்கிறபோது ஒரு கதை எழுதினேன். அதை ஒரு குறும்படமாக இயக்கினேன். இந்தியா திரும்பிய போது என்னிடம் 2,3 கதைகள் இருந்தது. என்னுடைய நண்பர்களுடன் பேசி அதை இயக்க முடிவு செய்தேன் என்று சொன்னார்.

    Advertisement

    சிக்மா படம் கதை

    பிறகு சிக்மா உருவான விதம் பற்றி சொல்லும் போது நீர், நிலம், காற்று, பணம் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் உறவுகளின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது... இது ஏன் என்று கேட்பதுதான் இந்த சிக்மா படம். மற்றவங்க உங்களை நம்புறாங்களோ இல்லையோ நீங்க முதலில் உங்கள நம்புங்கள் என்பது தான் இந்த படத்தின் மெசேஜ். அதனால் ரொம்ப போர் அடிக்கும்னு நினைக்காதீங்க நிறைய ஆக்சன், காதல் காட்சிகளும் இருக்கும். காமெடியும் வந்து போகும் என்று அந்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார்.

    English Summary

    Jason Sanjay : Director Joseon Sanjay, son of Chief Minister Joseph Vijay, usually doesn't talk much. But a line he said in a recent interview is currently being shared a lot on social media. Now the value of money keeps increasing. But he said in an interview that the value of relationships is decreasing day by day. It's getting a lot of praise on social media.