போதைப்பொருள் ஒழிப்பு மராத்தானில் ஓடியவர்களுக்கு CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பை”.. உள்ளே இருந்த ஸ்பெஷல் கிப்ட்


  • சென்னை: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற "Start Run, Stop Drugs" விழிப்புணர்வு மராத்தான் போட்டி, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பங்கேற்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயே நேரடியாக கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து ஓடியது ஒரு பக்கம் பேசப்பட்ட நிலையில், தற்போது மராத்தானில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கிஃப்ட் பேக் சமூக வலைதளங்களில் தனி டிரெண்டாக மாறியுள்ளது.

    Advertisement

    மராத்தான் முடிந்த பிறகு ஒவ்வொரு வீரரின் கைகளிலும் ஒரு பை வழங்கப்பட்டது. "அந்த பையில் என்ன இருக்கிறது?" என்ற ஆர்வம் பலரிடமும் இருந்தது. சமூக வலைதளங்களில் பலரும் அந்த பையை திறந்து காட்டிய வீடியோக்களை பகிர்ந்ததை தொடர்ந்து, அந்த தேடலும் அதிகரித்துள்ளது.

    Advertisement

    மராத்தானில் வழங்கப்பட்ட பை

    பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த சிறப்பு பையில் ஒரு பன், புரோட்டீன் பார், குளுக்கோஸ் பாக்கெட், வாழைப்பழம், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட உடலுக்கு உடனடி சக்தி தரக்கூடிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, மராத்தானில் பங்கேற்றதற்கான நினைவாக அழகிய நினைவு மெடலும் வழங்கப்பட்டது. "இலவச விழிப்புணர்வு ஓட்டத்திற்கே இவ்வளவு சிறப்பான ஏற்பாடா?" என்று பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    போதைப்பொருள் விழிப்புணர்வு மராத்தானில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய் செய்த செயல்.. இளம்பெண் நெகிழ்ச்சி

    முதல்வர் விஜய்யின் செயல்

    இந்த ஆண்டு போதை ஒழிப்பை மையமாக வைத்து தமிழக அரசு நடத்திய இந்த மராத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், விழிப்புணர்வு உறுதிமொழியையும் வாசிக்க வைத்ததுடன், போட்டியாளர்களுடன் இணைந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடியது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.

    Advertisement

    விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் முதலமைச்சருடன் இணைந்து ஓடியதோடு, "பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சர் மக்களோடு இணைந்து மராத்தானில் ஓடியது இந்திய அளவிலும் கவனம் பெற்றுள்ளது" என்று பெருமையாக தெரிவித்தார்.

    குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா... விஜய் மட்டும் ஏன் வரவில்லை? இதுதான் காரணமா? ரசிகர்கள் பிடித்த பாயிண்ட்

    சமூக வலைதளங்களில் தற்போது மராத்தானில் ஓடிய வீடியோக்கள் மட்டுமல்ல, "கிஃப்ட் பேக்கில் என்ன இருந்தது?" என்ற வீடியோக்களும் வேகமாக பரவி வருகின்றன. பலரும், "போட்டியில் கலந்து கொண்டதற்கே மெடல், சத்தான உணவு, தண்ணீர் என முழுமையான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்" என்று பாராட்டி வருகின்றனர்.

    Advertisement

    போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

    இந்த நிகழ்ச்சியின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு செயல்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மொத்தத்தில், இந்த மராத்தானில் முதலமைச்சர் விஜய் ஓடியது மட்டுமல்ல... மராத்தான் முடிந்த பிறகு வீரர்களின் கையில் சென்ற அந்த சின்ன கிஃப்ட் பேக்கும் இன்று இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    English Summary

    CM Vijay: The 'Start Run, Stop Drugs' marathon, organised in Chennai to mark the International Day Against Drug Abuse, witnessed thousands of participants, including students, athletes, and members of the public. Chief Minister Vijay also joined the three-kilometre awareness run, making the event one of the most talked-about public initiatives in Tamil Nadu.