மனைவிக்கு அறுவை சிகிச்சை.. டிவியில் பார்த்து கதறி அழுத காமெடி நடிகர்.. 32 வருஷ காதலின் கண்ணீர்!

  • சென்னை: நடிகர் அலி என்ற பெயரை கேட்டாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய காமெடி தான். தெலுங்கு நடிகரான அலி தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோவில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கதறி அழும் காட்சி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

    Advertisement

    கதறி அழுத நடிகர்

    அவருடைய மனைவி ஜுபேதா சுல்தானா பேகம் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த நேரத்தில் மனைவியின் வேதனையை பார்த்து அலி தன்னையே மறந்து அழுது இருக்கிறார். இந்த வீடியோவை ஜுபேதா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது ஜுபேதாவுக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மனைவியின் பதிவு

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. அதற்கு பிறகு ஜுபேதா படிப்படியாக உடல்நலம் தேறி வருகிறார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதை டிவியில் பார்த்த அலி தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்திருக்கிறார். அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த ஜுபேதா, என்னை இவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்ளும் கணவர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். எனக்கு பக்கபலமாக அலி இருப்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம். ஒரு பெண்ணுக்கு அன்பும் ஆதரவும் தரக்கூடிய துணை இருந்தால் அவளால் தன்னுடைய கனவுகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிக்க முடியும் என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    திருமண வாழ்க்கை

    நடிகர் அலி - ஜுபேதா இருவருக்கும் கடந்த 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு இப்போது 32 வருஷங்கள் ஆகிறது‌. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஜுபேதா தனது கணவர் அலி பற்றி பேசும்போது, நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு கல்யாணம் நடந்தது. என்னுடைய பெரியப்பாவுக்கு சினிமாத்துறையில் கொஞ்சம் தொடர்பு இருக்கு. அப்படித்தான் அலியை தெரியும். அலியின் குணம் மற்றும் பெரியவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் பிடித்திருந்தால் இந்த திருமண பேச்சு வந்தது.

    Advertisement
    நெற்றியில் எப்படி திலகம் வைக்கலாம்? மம்மூட்டியை 'நாய்' என விமர்சித்த நபர்.. காமெடி நடிகர் கொடுத்த பதிலடி

    நடிகர் அலி மனைவி பேட்டி

    திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்க நான்கு வருஷங்கள் காத்திருந்தோம். அந்த காலகட்டத்தில் மனதளவில் மிகவும் வேதனைப்பட்டேன். டாக்டர்களை சந்தித்து பல்வேறு முயற்சிகள் செய்து எனக்கு குழந்தை பிறந்தது. அந்த நாட்கள் எளிதாக இல்லை. அப்போது எனக்கு அலி தான் ஆறுதல் சொல்லி இருந்தார். குழந்தை பிறக்கவில்லை என்றால் என்ன! இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்கு மனதளவில் பெரிய ஆதரவாக இருந்தது என்று அந்த பேட்டியில் ஜுபேதா பேசியிருக்கிறார்.

    Advertisement

    அதுபோல அலி ஜுபேதா தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். தனது குடும்ப புகைப்படங்களை ஜுபேதா அடிக்கடி சோசியல் மீடியா பக்கங்களில் பகிந்திருக்கிறார். இரண்டாவது குழந்தை பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் பற்றியும் அந்த பேட்டியில் ஜுபேதா பேசியிருந்தார். அந்த சமயத்திலும் தன்னுடைய கணவர்தான் தனக்கு ஆறுதலாக இருந்தார் என்று அவர் சொல்லி இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போது இப்படி ஒரு சோதனையை சந்தித்திருக்கும் அலி சினிமாவில் பல வருஷங்களாகவே இருக்கிறார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    Advertisement
    ஆஸ்கர் லெவல் எமோஷனல் பிளாக்மெயில்! ஓவர் ஆக்டிங்! லீவு கேட்ட மாணவர்களிடம் நெல்லை ஆட்சியர் காமெடி

    காதல் கண்ணீர்

    அரசியலிலும் 2019ல் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா, சீரியல், அரசியல் என அவர் பிஸியாகவே இருந்தாலும் குடும்பத்தின் மீது தனக்கு இருக்கும் அன்பை இப்போது கண்ணீரில் அவர் காட்டி இருக்கிறார். திரையில் எப்போதும் சிரிப்பை வர வைக்கும் நடிகர் மனைவியின் உடல்நிலை பிரச்சனையை பார்த்து கலங்கிய இந்த காட்சி ரசிகர்களுக்கு அவருடைய வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை காட்டி இருக்கிறது.

    English Summary

    actor Ali : The name of the actor Ali immediately brings his comedy to mind. A Telugu actor, Ali has also appeared in several Tamil films, delighting audiences with his unique style of comedy. However, a recently surfaced video—showing him sobbing uncontrollably, unable to hold back his tears—has deeply moved many people.