சென்னை: ஒரு படத்திற்கு வைக்கப்படும் தலைப்பு சில நேரங்களில் அந்த படத்தைப் பற்றிய ஒரு தவறான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அதிலும் மொத ராத்திரி என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இது அடல்ட் காமெடி படமா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்குமா? கவர்ச்சியான காட்சிகள் இருக்குமா? என்ற விவாதம் இருந்தது.
ஆனால் படம் வெளியாகி ரசிகர்கள் பார்த்த பிறகு தலைப்பை வைத்து நாம நினைத்த மாதிரி இல்லையே என்ற கருத்தை பலரும் சொல்லி வந்தனர். இந்த நிலையில் படத்தை பற்றி சில சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் அதை பற்றி படத்தின் நாயகி அனிஷ்மா அணில் குமார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில், மொத ராத்திரி என்ற பெயரை வைத்து மட்டும் படத்தை தவறாக கிடைத்துவிட வேண்டாம். படத்தில் மோசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை. ஒரு கதாநாயகியும், கதாநாயகனும் முதல் நாள் சந்தித்தபோது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடக்கிறது. இதற்கு தான் மொத ராத்திரி என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதும் சரி, படம் வெளியான பிறகும் இதில் எந்த ஆபாசமான காட்சிகளும் காட்டப்படவில்லை என்பது மக்கள் புரிந்திருப்பார்கள். ஆனால் இதை பார்க்காத சில தலைப்பில் பார்த்து தவறாக புரிந்து கொண்டு எப்படி இருக்கும் என்று கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். ஆனால் படத்தில் எந்த மோசமான காட்சிகளும் இல்லை என்று சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அனிஷ்மா அணில் குமார் இதற்கு முன்பு சிறை, யூத் போன்ற படத்தில் நடித்து பிரபலம் ஆகி இருந்தார். இதனால் இவருக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது முதல் ராத்திரி என்ற படத்தில் நடித்ததும் இந்த படம் எப்படி இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்போது மொத்த வதந்திகளுக்கும் அவர் பதில் கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முதலிரவு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலே அது கவர்ச்சியான காட்சியாக தான் நினைவுக்கு வரும். அதையே பட குழுவும் தலைப்பாக வைத்ததால் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஒரு விதமான எதிர்ப்பு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு அந்த எதிர்பார்ப்பு வேற மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் சொல்லுகின்றன. இந்த படத்தின் நாயகன் ரிஷிக்காந்த் துபாயில் இருந்து ஊருக்கு வரும் வருகிறார். அவருக்கு விருப்பமே இல்லாமல் குடும்பத்தினர் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர். மறுபக்கம் அனிஷ்மா ஏற்கனவே ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். பெற்றோர் வற்புறுத்தலால் இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் திருமணம் முடிந்த பிறகு முதல் நாள் இரவு தன்னுடைய பழைய காதல் விஷயத்தை கதாநாயகி சொல்லி விடுகிறார். அவருடைய காதலை சேர்த்து வைப்பதற்காக கணவர் போராடுகிறார். இதுதான் படத்தின் கதை. ஒரு கிராமத்து கல்யாண வீட்டில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள், ஜாலியான காமெடி என எல்லாமே இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கிறது என்று படத்தை பார்த்த பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். இப்போது இந்த படத்தை பற்றிய வதந்திகளுக்கும் கதாநாயகி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.கதாநாயகி விளக்கம்
தவறான புரிதல்
மொத ராத்திரி விமர்சனம்
படத்தின் கதை