கருப்பனுக்கு வந்த சோதனையா? குக் வித் கோமளியில் புகழ் ஆட்டம்.. பாவம் அவரை விட்ருங்க! வந்தாச்சு விவாதம்

  • சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடுக்காக கருப்பசாமி வேடம் அணிந்து புகழ் ஆட்டம் போட்டு இருக்கிறார். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில், பல விவாதங்களும் எழுந்து இருக்கின்றன. சமீபத்தில் சூரியா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் வெற்றிக்கு பிறகு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கருப்பசாமி வேடமணிந்து சிலர் ஆடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதை வைத்து பலர் விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    பொதுவாக ஒரு திரைப்படம் ஹிட்டாகிவிட்டால் அதே படத்தின் காட்சிகள் அல்லது அந்த படத்தில் ஹிட்டான பாடல்களை தான் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம். சோசியல் மீடியாவில் ரிலீஸ்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இந்த காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். அந்த வரிசையில் தான் சமீபத்தில் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு படத்தின் காட்சிகளை இப்போ எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் குத்தகைக்கு எடுத்து ரசிகர்களை மிரட்டி கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    கருப்பசாமி ஆட்டம்

    கருப்பு படம் கொடுத்து வெற்றியை பிடித்துக் கொண்ட சின்னத்திரை வட்டாரம் நாங்களும் அதையே பாலோ பண்ணுகிறோம் என்று ஆளுக்கு ஒரு பக்கமாக கருப்பசாமியை தங்களுக்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள். பாடல் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, டான்ஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி.. சில மாதங்களாகவே கருப்பசாமியை காட்டி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் புகழ் கருப்பசாமி கெட்டப்பில் வந்து மிரல விட்டு இருக்கிறார்.

    குக் வித் கோமாளியில் கருப்பசாமி

    கருப்பசாமி அழகே அவருடைய பிரம்மாண்டம் தான். அந்த பிரம்மாண்டம் புகழுக்கு இருக்கிறது. ஆனால் கருப்பசாமி உடைய போல புகழ் கத்தவில்லை பூனை கத்துவது போல இருக்கிறது ஆனால் இந்த கெட்டப்பை பார்த்து மாதம்பட்டி ரங்கராஜன் ரோஜா எல்லோருமே புகழை பாராட்டுறாங்களே என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் உங்களுக்கு சுயமாக யோசிக்கவே தெரியாதா? ஒரு திரைப்படம் ஹிட்டாகிவிட்டால் உடனே அதை காப்பி பண்ணி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டுமா? இப்போ ரசிகர்கள் பழைய மாதிரி எல்லாம் இல்ல மாறிட்டாங்க, நீங்களும் அப்டேட் ஆகுங்க என்று சேனல் தரப்பினரையும் விளாசி வருகிறார்கள்.

    Advertisement

    எல்லா சேனலிலும் கருப்பசாமி

    இது விஜய் டிவியில் மட்டுமல்ல, ஜீ தமிழ், சன் டிவி என முன்னணி சேனல்களில் இதுதான் இப்போது டிரெண்டாக இருக்கிறது. காந்தாரா படத்தின் வெற்றியைப் பார்த்து ஆர் ஜே பாலாஜி கருப்பு படத்தை எடுக்கும்போது நாங்க மட்டும் சின்னத்திரையில் கருப்பசாமி கெட்டப் போடக்கூடாதா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாடல் நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பசாமி பாட்டு பாடுகிறார் என்றால் பேக்ரவுண்டில் கருப்பசாமி கெட்டப்பில் சிலர் ஆட்டம் போடுகிறார்கள் அதை பார்க்கும் போது ஒரு விதமான பயம் கலந்த உணர்வு வருகிறது, ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு சாப்பாடு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக ஐயா கருப்பசாமியை கூட்டிட்டு வந்தீங்க என்று சில நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

    Advertisement

    புகழ் மீது வன்மம்

    ஏற்கனவே புகழ் மீது பலருக்கு கோபமும், கடுப்பும் இருக்கிறது அவர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போனதிலிருந்து அவருடைய நடிப்பு, ரியாக்ஷன் வைத்து கூட சிலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் இப்போது அவர் கருப்பசாமி வேடம் போட்டதும் எங்களுக்கு ஒரு கண்டன்ட் கிடைத்துவிட்டது என்று இந்த கெட்டப்பை வைத்து சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்கிறார்கள். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

    English Summary

    Cook With Comali: Pugal has performed a dance dressed as the deity Karuppasamy for this week's episode of the Vijay TV show *Cooku with Comali*. While the clip has gone viral on social media, it has also sparked considerable debate. Following the recent success of the Suriya-starrer *Soorarai Pottru* (which features a significant Karuppasamy element), people have frequently been seen performing in Karuppasamy attire across various reality shows—a trend that has drawn criticism from many.