புரோட்டோகால் முக்கியம்! சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம்


  • சென்னை: தமிழ் சினிமாவில் படம் வெளியாகும் முன்பே அந்த படத்தை பற்றி பேச வைக்கும் திறமை யாருக்காவது இருந்தால், அந்த பட்டியலில் நடிகர் கூல் சுரேஷின் பெயர் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த பிரபலத்திற்கு காரணம் அவரது நடிப்பு மட்டும் அல்ல, அவர் உருவாக்கும் சர்ச்சைகளும்தான்.

    Advertisement

    சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கூல் சுரேஷுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிமுகம் கிடைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம். அதன்பிறகு ஒவ்வொரு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் வித்தியாசமான உடைகள், எதிர்பாராத கருத்துகள், திடீர் செயல்கள் மூலம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

    Advertisement

    கூல் சுரேஷ் சொதப்பல்கள்

    இன்று வெளியாக உள்ள "ஆட்டி" திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த தோற்றத்தில் வந்தார். பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட "சிங்கப்பெண் அதிரடிப்படை" சீருடையை ஒத்த ஆடையை அணிந்து மேடைக்கு வந்த அவர், படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பல கருத்துக்களை பகிர்ந்தார்.

    "விஜய் இப்போதுதான் சிங்கப்பெண் அதிரடிப்படையை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் ஆட்டி படத்தில் பெண்களுக்கான சக்தி எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்" என அவர் கூறினார்.

    Advertisement

    ஆனால் இந்த முயற்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதற்கு பதிலாக புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    பெண்கள் பாதுகாப்பு சீருடையில் புரமோஷன்

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவின் சீருடையை திரைப்பட விளம்பரத்திற்காக பயன்படுத்துவது சரியா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

    டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!

    "இது ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பின் அடையாளம். அதை பொழுதுபோக்கு புரமோஷனுக்காக பயன்படுத்துவது சரியல்ல" என்றும், "கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் இதுபோன்ற விஷயங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?" என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    புரோட்டோகால் பிரச்சனை

    இதோடு நிற்காமல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசுபொருளான மேயர் பிரியா மற்றும் எம்எல்ஏ பல்லவி இடையேயான "புரோட்டோகால்" விவாதத்தையும் மறைமுகமாக கிண்டல் செய்தார்.

    இயக்குநர் பேசுவதற்கு முன் நடிகர் காதல் சுகுமார் பேச முயன்றபோது, "முதலில் டைரக்டர் பேசணும். அதுக்கப்புறம்தான் யாராக இருந்தாலும் பேசணும். புரோட்டோகால் இருக்கணும்" என்று அவர் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இதனை மிகப்பெரிய மற்றும் எம்எல்ஏ பல்லவி விவாகரத்துடன் ஒப்பிட்டு பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய்
    Advertisement

    சர்ச்சையா? புரமோஷனா?

    கூல் சுரேஷின் செயல்களை பற்றி சினிமா ரசிகர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், "எப்படியாவது படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை அவருக்கு இருக்கிறது" என்று பாராட்டுகின்றனர்.

    மற்றொரு தரப்பினர், "புரமோஷனுக்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சர்ச்சையை உருவாக்கி கவனத்தை ஈர்ப்பது நல்ல முன்னுதாரணம் அல்ல" என்று விமர்சித்து வருகின்றனர்.

    யார் இந்த கூல் சுரேஷ்?

    பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதன்பிறகு திரைப்பட வெளியீட்டு விழாக்களில் அவரது வித்தியாசமான பேச்சுகளும், எதிர்பாராத தோற்றங்களும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன.

    Advertisement

    ஆனால் இந்த முறை அவர் தேர்வு செய்த சீருடை மற்றும் அதனைச் சுற்றி உருவான விவாதம், வழக்கத்தை விட அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படத்தின் கதையை விட, புரமோஷன் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் அணிந்த உடையும் அவர் பேசிய கருத்துகளுமே தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

    "ஆட்டி" படத்தின் வெளியீடு எப்படி இருந்தாலும், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் உருவாக்கிய இந்த சர்ச்சை இன்னும் சில நாட்கள் இணையத்தை ஆக்கிரமிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

    English Summary

    Actor Cool Suresh has once again become the center of attention following a controversial appearance at the promotional event of the upcoming Tamil film Aatti. Known for his unconventional promotional tactics and viral public appearances, Cool Suresh attended the event wearing an outfit that closely resembled the uniform associated with the Singappen Special Force initiative.During his speech, he praised the film's portrayal of women's strength and made references that quickly caught the attention of social media users. However, many viewers questioned whether using a uniform associated with a women’s safety initiative for movie promotion was appropriate.The controversy intensified when Cool Suresh made remarks about the importance of “protocol” during the event. His comments were widely interpreted as a humorous reference to a recent political protocol debate that had already been trending online. Video clips of his speech quickly spread across social media platforms, sparking mixed reactions.While some fans argued that Cool Suresh has a unique ability to generate publicity and keep films in the spotlight, critics felt that promotional activities should have clear boundaries and avoid the use of official symbols or sensitive public initiatives for entertainment purposes.As discussions continue online, many observers note that the controversy surrounding Cool Suresh's appearance has generated more attention than the film itself. Whether viewed as creative marketing or unnecessary provocation, the incident has once again placed the actor firmly in the social media spotlight.