சென்னை: தமிழக முதல்வராக டெல்லிக்கு சென்றிருக்கும் விஜய்க்கு, சொந்த மண்ணின் சுவையில் மாதம்பட்டி ரங்கராஜ் கையால் ஸ்பெஷல் விருந்து தயார் செய்து தரப்பட்டுள்ளது.. முதல்வரின் டெல்லி பயணமும், அவரது பயண திட்டத்துடன் சேர்ந்த இந்த சமையல் விருந்தும், தவெக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சுவாரஸ்யமான தகவல் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பெரிய செலிபிரிட்டி, தயாரிப்பாளர், நடிகராக வலம் வருபவர்.. இது அனைத்தையும் தாண்டி காஸ்ட்லியான சமையல்காரர்.. இவர் 25 வகையான சட்னி செய்வாராம்.. 201 வகை ஸ்வீட் தயாரிப்பாராம்.. தனி ஃபிளைட்டில், அல்லது ஹெலிகாப்டரில் சென்று, கேட்டரிங் செய்வது என பிஸியாகவே இருப்பவர்.. அதுமட்டுமல்ல விஐபி வீடுகளில் மட்டுமே சென்று சமைப்பவர்..
அதற்கேற்றபடி இப்போதும் ஒரு விஐபிக்கு சமைப்பதற்காக டெல்லி போயிருக்கிறார்.. ஆம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்.. தனது முதல் அரசுமுறை பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.. டெல்லிக்கு அவர் பலமுறை சென்றிருந்தாலும்.. இம்முறை மாநிலத்தின் முதலமைச்சராக செல்வது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.. காரணம், இது தமிழகத்தின் உரிமைகளுக்கான பயணமாக மாறியிருக்கிறது.. டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்.. அங்கிருந்து நேரடியாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றார்.. இந்த தமிழ்நாடு இல்லத்தில் தான் விஜய் நேற்று தங்கியிருக்கிறார்.. மேலும் இன்று பல்வேறு முக்கிய சந்திப்புகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.. இதனிடையே, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் விஜய்க்காக மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இந்த மதிய உணவை சமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் தமிழகத்தின் மிகப்பிரபலமான சமையல் கலை நிபுணரும், பிக்பாஸ் பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. இதற்காக விஜய்க்கு முன்னதாகவே, மாதம்பட்டி ரங்கராஜ் டெல்லியில் முகாமிட்டு, முதலமைச்சருக்காக பிரத்யேகமாக சமைத்து தந்து கொண்டிருக்கிறாராம். ஆனால், விஜய்க்கு மாதம்பட்டி ரங்கராஜ் சமைத்துக் கொடுக்கப் போகிறார் என்ற செய்தி நேற்று வெளியானதுமே, டெல்லியில் எங்கு சமையல் நடக்கிறது? என்னென்ன ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்படப் போகிறது என சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் பல்வேறு விவாதங்களை ஆர்வத்துடன் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இதுகுறித்து டெல்லி அரசியல் வட்டாரங்களை கண்காணிக்கும் முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.. அந்த பதிவை பார்த்ததும்தான், மாதம்பட்டி விஜய்க்காக சமைத்து தர போகிறார் என்ற தகவல் பரவலாக தெரிய ஆரம்பித்தது.. ஆனால், முதலமைச்சர் விஜய்க்கு எந்தெந்த உணவுகள் மிகவும் பிடிக்கும்? அவர் எதை விரும்பி சாப்பிடுவார் என்ற விபரங்களை முன்கூட்டியே சேகரித்து.. அதற்கேற்ப ஒரு பிரத்யேக மெனுவை மாதம்பட்டி ரங்கராஜ் கையோடு கொண்டு சென்று தயாரித்துதந்து கொண்டிருக்கிறாராம். முதலமைச்சரின் உடல ஆரோக்கியம் மற்றும் அவரது டயட் முறைகளை மனதில் வைத்து.. அதே நேரத்தில் பாரம்பரிய தமிழக சுவை மாறாமல் இந்த மதிய உணவு மெனு தயாரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை திமுக தரப்புடன் நெருக்கமாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தவெக அரசுடன் நெருங்குவது சமையல் ஒப்பந்தம் மட்டுமே என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.. இதற்கு நடுவில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு சமைக்க மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழுவுடன் முன்கூட்டியே முகாமிட்ட போட்டோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.அவசரமாக டெல்லிக்கு பறந்த செஃப்
காஸ்ட்லி குக் மாதம்பட்டி ரங்கராஜ்டெல்லியில் விஜய்க்கு விருந்து
மாதம்பட்டி ரங்கராஜ் அசத்தல்